இதயப் பூவும் இளமை வண்டும் – 116

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Blouse Kalattum நகரெங்கும் மின் விளக்குகளால் ஒளி பெற்றிருக்க.. காத்துவின் வீடு மட்டும் மெழுகுவர்த்தியின் தயவை நாடி ஒளி பெற்றிருந்தது..!! பைக் சத்தம் கேட்டு.. வீட்டில் இருந்து வெளியே வந்த காத்துவின் கையில் அவன் குழந்தை இருந்தது.

பைக்கைவிட்டு இறங்கிய சசி.. மெலிதான புன்னகையுடன் கேட்டான். ”என்னாச்சு.. உங்க வீட்ல மட்டும் இவ்ளோ வெளிச்சம்..?”

”பீஸ் போயிருச்சுடா..” காத்து சொல்ல.. அவன் மனைவியும் வெளியே வந்தாள்.

”வாங்க..ண்ணா..” எனச் சிரித்தாள்.

” ம்.. வந்தேன்..! எப்பருந்து கரண்ட் இல்ல.?”

காத்துவைப் பேசவிடாமல் அவன் மனைவியே பேசினாள். ”சாயந்திரத்துல இருந்துதான்ணா.. இல்ல..! கம்பத்துல போயிருச்சு..!”

”லைன் மேன்க்கு போன் பண்ணயா..?” காத்துவைக் கேட்டான் சசி.

காத்து சிரித்தவாறு சொன்னான். ”போன் பண்ணதும் வரதுக்கு.. நாம என்ன மந்திரியா..? இல்ல அரசியல் செல்வாக்கு இருக்கற ஆளா..? டீக்கடைல நெம்பர் எழுதி குடுத்துட்டு வந்துருக்கேன்.. நாளைக்கு காலைல பத்து மணிக்கு மேல.. வருவான்..!”

”உள்ள வாங்கண்ணா.. காபி வெக்கறேன்..” என அவனை வீட்டுக்குள் அழைத்தாள் காத்துவின் மனைவி.

”இல்ல.. பரவால்ல..! காபி குடிச்சிட்டுதான் வீட்லருந்து வரேன்..” குழந்தையை வாங்கினான் சசி.

வெளியில் நின்றவாறே.. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டான் சசி. ”வெளில போலாமா..?”

”எங்க பாருக்கா..?” உள் அமுங்கிய குரலில் கேட்டான் காத்து.

”ம்..ம்ம்..! போலாமா..?”

”நானே நெனச்சேன்.! கரண்ட் வேற இல்லையா..? சரியா தூங்க முடியாது..! லைட்டா ஒரு பீர போட்டா.. சிரமம் இல்லாம தூங்கிடலாம்..”

”சரி.. இரு..” என குழந்தையை எடுத்துக் கொண்டு போய் பக்கத்தில் இருந்த கடையில்.. இரண்டு பைவ் ஸ்டார் சாக்லெட்டும்.. பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக் கொடுத்தான் சசி.

பாருக்குப் போய்.. பீர் சொல்லிவிட்டு.. காத்துவைக் கேட்டான் சசி. ”ஏன்டா.. ஹாட் அடிக்கலயா..?”

”ஹாட்டு இப்ப ஒத்துக்கறது இல்லடா..! கட்டிங் போட்டாலும்.. தலைவலி.. வாந்தினு நைட்ல தூங்க முடியறது இல்ல..! தாயோலிக.. லோக்கல் அரசியல்வாதிக.. தயாரிப்பு கலந்தர்றானுக..! பூரா ஸ்பிரிட்டு..! இதுக்கு தனியார்கிட்ட விட்டாக்கூட கொஞ்சம் சரக்கு நல்லாருக்கும்..! எப்படியும் நம்ம கவர்ண்மெண்ட் தடை பண்ண போரதில்ல.. குடுக்கற சரக்கையாவது கொஞ்சம் நல்லா குடுக்கலாமில்ல..” என்றான்.

”அது சரி..!” என சிரித்தான் சசி ”எல்லாருமே குடிக்கறவனுகதான்.. ஆனா குடிக்கு ஆதரவா.. எவன் வந்து பேசப்போறான்.? அப்படி பேசினா.. அதுல அரசியல் ஆதாயம் இருக்கனும்..!”

பீர் வந்தது..! ஆளுக்கு ஒன்றை எடுத்து உறிஞ்சினார்கள். சுண்டல் மென்றவாறு காத்து சொன்னான். ”ஹாட்லயே.. நம்ம தமிழ்நாட்டு சரக்கு அடிச்சா மட்டும்தான் டா எனக்கு இந்த பிரச்சினை..! இதே ஆந்திரா…கர்நாடகா.. கேரளா..னு இந்த மூனு ஸ்டேட் சரக்கு அடிச்சா.. ஒரு எபெக்டும் இருக்காது.! நா டெஸ்ட்டுக்காகவே.. வாங்கி அடிச்சு பாத்துட்டேன்டா.. ரொம்ப ஃப்ரீயா இருக்கு..! ஆனா நம்ம சரக்கு அடிச்சா.. அன்னிக்கு நைட் இருந்தே.. தலைவலி ஆரம்பிச்சிரும்.. அடுத்த நாள்.. செம டயர்டாகிரும்..! இதுல.. நல்ல காலத்துலயே நம்ம கால வார்றதுக்கு.. நம்ம பொண்டாட்டிகளுக்கு சொல்ல வெண்டியது இல்ல..! இந்த லட்சணத்துல.. நாம தலைவலி.. வாந்தினு தெரியட்டும்.. மானம்.. மரியாதை.. அத்தனையும் போயிரும்..!!” என தன் மனக்குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்தான்.

ஒரு மணிநேரத்துக்கு மேல் பாரில் உட்கார்ந்து.. பீர் குடித்து.. மனம் விட்டுப் பேசிவிட்டு.. வீட்டிற்குக் கிளம்பினர்..!!

இரவு….! சாப்பிட்டுவிட்டு.. சற்று காற்றாட.. வெளியில் போய் நின்றான் சசி. மிடியில் இருந்த.. புவி அவனிடம் வந்தாள். ”சாப்பிட்டாச்சா ?” என பொதுவாகக் கேட்டாள்.

அவளைப் பார்த்து ”ம்..ம்ம்..! நீ..?” எனக் கேட்டான்.

”இன்னும் இல்ல..”

”ஏன்.. உங்கம்மா இன்னும் செய்யலையா..?”

”அதெல்லாம் செஞ்சாச்சு..”

”என்ன..?”

”சப்பாத்தி.. மசால்..”

”உனக்கு புடிக்காதா..?”

”புடிக்கும்.. ஆனா இப்ப.. பசி இல்ல..”

”பசி இல்லயா..? இல்ல.. டயட்டா..?”

”டயட்லாம் இல்ல..! எனக்கு இப்ப சரியா.. பசிக்கறதே இல்ல..!” என்றாள்.

அவன் அமைதியாக வீதியைப் பார்த்தவாறு நின்றான். புவி திடுமெனக் கேட்டாள். ”எங்க மச்சான பத்தி.. என்ன நெனைக்கறீங்க..?”

”ஏன்..?” அவளைக் கேட்டான்.

”சும்மாதான்..! சொல்லுங்க..!”

”நல்ல ஆளுதான்..”

புன்னகைத்தாள். ”ம்.. கரெக்ட்..! ஆனா.. கவிய மேரேஜ் பண்ணிருக்காரே.. பாவம்..!”

”ஏன்.. அவளுக்கு என்ன..?”

”அவளுக்கு என்ன..? அவளுக்கெல்லாம் ஒன்னும் இல்ல..” என ஒரு பெருமூச்சு விட்டாள்.

”ஏன்.. அவர உனக்கு புடிச்சிருக்கா..?”

”புரியல.. எனக்கா..?”

”அந்த மீனிங்ல இல்ல..! சரி.. நீ என்ன சொல்ல வரே..?”

”அவங்க ரெண்டு பேருக்கும்.. பொருத்தமே இல்லேனு தோணுது..”

”அப்படியா..?”

”ம்..ம்ம்..!” என்றாள். பிறகு.. ”சரி அத விடுங்க..! நீங்க எப்ப.. மேரேஜ் பண்றதா.. ஐடியா..?”

”தெரியல..” என்றான்.

”ஐய.. என்ன பதில்.. இது.?”

”நீ எப்ப..?”

”நான்லாம் இப்பால இல்லப்பா..”

”ஏன்..?”

”நான் படிச்சு முடிக்கனும்..! நாலஞ்சு வருசம் ஆகும்..!!”

சசி பேசவில்லை. அவனுக்கு.. இப்போது அவளுடன் பேசுவதில் அவ்வளவாக.. ஆர்வம் இல்லை. அவள் பேசுகிறாளே என்பதற்காகப் பேசிக்கொண்டிருந்தான்.

”ஆமா.. உங்களுக்கு இப்ப என்ன ஏஜ்..?” எனக் கேட்டாள்.

”ஏன்.. உனக்கு தெரியாதா..?”

”ஸாரி.. மறந்துட்டேன்..” என்றாள்.

”ஓ..!!”

”சொல்லுங்க…”

” அது சீக்ரெட்..”

”லேடீஸ்தான்..ஏஜ் சொல்லக் கூடாது..”

”சொன்னா..?”

”ம்..ம்ம்.. சொன்னா தெரிஞ்சு போயிரும்னுதான்..” எனப் புன்னகைத்தாள்.

”உன் ஏஜ் என்ன..?”

”உங்களுக்கே தெரியும்..”

” அப்ப.. நீ சொல்ல மாட்ட..?”

உடனே சொன்னாள். ”செவன்டீன்..”

அவள் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.. புவியின் அம்மா. புவியைக் கேட்டாள். ”சாப்பிடலியாடி..?”

”அப்றம்.. சாப்பிட்டுக்கறேன்..”

”இப்பவே டைமாச்சு.. வா..”

”நீ சாப்பிடு…நா கடைசில சாப்பிட்டுக்கறேன்.” என லேசான எரிச்சலுடன் கத்தினாள் புவி.

சசியைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டாள் அவள் அம்மா. ”சாப்பிட்டாச்சா.. சசி..?”

”ஆ.. ஆச்சுக்கா..! நீங்க..?”

”நானும் சாப்பிட்டேன்..! இந்த கழுத முண்டைதான்.. சாப்பிட மாட்டேங்கறா..! என்னமோ பண்ணித்தொலை.! நான் போய்.. தூங்கறேன்..!” என முனகிக்கொண்டே பாத்ரூம் போனாள்.

”சரி.. நீ போய் சாப்பிட்டு.. படு..” என புவியிடம் சொன்னான் சசி.

”படுத்து…?” எனக் கேட்டாள்.

சட்டென அவன் வாய் துடித்தது. ஆனால்.. இது பழைய நட்பு இல்லை என உணர்ந்து.. பொதுவாகச் சொன்னான். ”தூங்கு..”

”தூக்கமே வரதில்ல..”

” ஓ.. ஏன்..?”

”தெரியல..” என்றாள்.

அவளுடைய அம்மா பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். ”நான் போய் படுக்கறேன் சசி. காலைல நாலு மணிக்கு எந்திரிச்சு ஓடனும்..”என்றாள்.

”சரிக்கா..” என்றான் ”குட் நைட்..”

”அட போப்பா.. ” என்றுவிட்டு வீட்டிற்குள் போனாள்.

அம்மா போனபின்.. அவனைப் பார்த்தாள் புவி. ”உங்கள ஒன்னு கேக்கலாமா..?”

”என்ன..?”

”நான் ஆஸ்பத்ரில இருந்தப்ப.. என்னை பாக்கக்கூட.. வரலயே.. நீங்க.. ஏன்..?” என லேசான தயக்கத்துடன் கேட்டாள்.

”நீ ஆஸ்பத்ரில எப்ப இருந்த..?”

”நான் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணேனே… அப்ப..?”

வீதி விளக்கின் வெளிச்சத்தில்.. சோபையாகத் தெரிந்த.. புவியின் கண்களை ஊடுருவிப் பார்த்தான் சசி. அவளும்.. அவன் கண்களை ஆழப் பார்த்தாள்.

”நெஜமா.. நீ சூடைட் அட்டெம்ட்தான் பண்ணியா..?” என அவளைக் கேட்டான் சசி.

”ஆமா..” என மிகவும் தணிந்த குரலில் சொன்னாள்.

”எனக்கு நம்பிக்கை இல்ல..”

அவனது அவநம்பிக்கையைப் பொய்யாக்கும் எண்ணத்தில் சொன்னாள். ”நான் சாகனும்னுதான் விரும்பினேன். அதான் மருந்து குடிச்சேன்.! எல்லாம் என் நேரம்.. என்னை காப்பாத்திட்டாங்க..! ரியலா.. எனக்கு.. இந்த லைப் புடிக்கவே இல்ல..”

அவள் சொன்னதைக் கேட்டு.. ஒரு கேலிச் சிரிப்பை.. கடைவாயோரம் ஒதுக்கினான் சசி. ”நீ சொல்றதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல..! உன்னோட தற்கொலை முயற்சி.. மத்தவங்களை ஏமாத்த நீ போட்ட ட்ராமா..! மத்தபடி.. சாகனும்னெல்லாம் நீ பண்ல…”

” நோ.. நோ..!” என உறுதியாகச் சொன்னாள் ”நா சாகத்தான் ட்ரை பண்ணேன்.! என்னை காப்பாத்தாம மட்டும் விட்றுந்தா.. எனக்கு கருமாதி பண்ணி.. ஒரு வருசத்துக்கு மேலாகியிருக்கும்..”

”உன்னை நீயே ஏமாத்திக்கறதுல எந்த லாபமும் இல்ல.. புவி..”

”அப்ப.. நம்பிக்கை இல்லையா.. என்மேல..?”

”ம்கூம்..” என தீர்மானமாக மறுத்தான்.

அவள் முகம் இருகிப் போனது. அவன்.. அவள் செயலை அங்கீகரிக்கவில்லையே என்கிற ஆதங்கம்.. அவளைத் தாக்க… தன் அடக்கமான மார்புகள் விம்மியெழப் பெருமூச்செறிந்தாள். ”நீங்க நம்பலேன்னாலும்.. நான் சாக விரும்பினதுதான் உண்மை. இந்த உலகத்துல வாழவே.. எனக்கு புடிக்கல.! என் தலைவிதி.. என்னை காப்பாத்தி.. இந்த நரகத்துல தள்ளிட்டாங்க.. கொடுமை..” என்றபோது அவள் குரல் பிசிறுதட்டியது. கண்களில்கூட மெல்லிய நீர் கசிவு.

சசி அமைதியானான்.

”அத விடுங்க..” சிலிர்த்துக் கொண்டாள் புவி ”நீங்க மட்டும் ஏன்.. என்னை பாக்க வரல..? ஆஸ்பத்ரி முன்னால வந்துட்டு.. உள்ள வரவே இல்லேனு சொன்னாங்க..! அதுக்கப்பறம் என்னை பாக்க.. இங்கயும் வரவே இல்ல..?”

”அதுகூட நான் உனக்காக வரல..! உங்கம்மா.. கவிக்காகத்தான் வந்தேன்.!”

”ஓ..! நான் செத்திருந்தா..?”

”நிம்மதியா இருந்திருப்பேன்..!!” என அவன் சொல்ல… அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

”ஏன்.. அப்படி…?” அவள் குரல்.. அவள் தொண்டைக்குள்ளேயே அமுங்கியது.

”ஏன்னா… ஐ ஹேட்.. யூ..!!” என்றான் சசி…..!!!!!!

-வளரும்……!!!!!!

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.