இதயப் பூவும் இளமை வண்டும் – 82

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

tamil kamam சூரியன் மேற்கில் மறைந்துகொண்டிருந்த மாலை நேரம்..! மிதமான காற்று வீசிக்கொண்டிருந்தது.!

தியேட்டரில் இருந்து வந்தபின்பு.. சசி மொட்டை மாடியில் போய் நின்று.. அமைதியாக அந்த மாலைப் பொழுதை ரசித்துக் கொண்டிருந்தான்.!

Story : Mukilan

அவன் பின்னால் அரவம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். மெர்லின்.! இருதயாவின் அக்கா.! தியேட்டரில் அவனோடு நீண்ட நாள் பழகியவள்போல மிகவும் சாதாரணமாகப் பழகினாள். ”ஹாய்..” எனச் சிரித்தாள்.

சசி புன்னகைத்தான் ”ஹாய்..”

”தனியா நின்னுட்டிங்க போல..?”

”ம்..ம்ம்..!” அவன் பார்வை.. அவளது முகத்தில் நிலைத்தது. அவள் முகத்தைப் பார்த்தாலே.. மனதுக்கு.. ஒரு சாந்தம் கிடைக்கும் போலிருந்தது ”இருதயா..?”

”இருக்கா.. நா மட்டும்தான் வந்தேன்..” என அவன் பக்கத்தில் வந்து நின்று.. தடுப்புச் சுவற்றில் கையூன்றி.. கீழே பார்த்தவாறு சொன்னாள் ”இருதயா சொன்னா..”

அவளது வலது பக்கக் கன்னம் பளபளப்பாகத் தெரியும்படி நின்றிருந்தாள். ”என்ன..?”

நேராக நின்றாள். ”அவ.. உங்கள லவ் பண்றத..”

மெலிதாகப் புன்னகைத்தான். ஆனால் பேசவில்லை.

மெர்லின் மெதுவாக..”உங்கமேல.. பயங்கர லவ்வா இருக்கா..! ஆனா.. நீங்க அவள.. லவ் பண்றீங்களா இல்லையானு.. புரியாம இருக்கா..” என்றாள்.

”உங்கள கேக்க சொன்னாளா..?”

”நோ.. நோ..! இது நானாத்தான் உங்கள்ட்ட கேக்கறேன்.! அவ சொல்லி இல்ல..!”

அவளை நேராகப் பார்த்தான் சசி. ”நீங்க லவ் பண்ணிட்டு இருக்கீங்களா..?”

லேசான குழப்பத்துடன் அவனைக் கேட்டாள். ”ஏன்..?”

”சொல்லுங்க..?”

”ம்..” எனப் புன்னகைத்தாள் ”பண்றேன்.. ஏன்..?”

மெதுவான குரலில் கேட்டான். ”இந்த வயசுல.. காதல விட்டா வேற எதுவுமே இல்லயா.. மெர்லின்..?”

”என்ன சொல்ல வரீங்க..?”

”காதல் வேண்டாம்னு சொல்லல.. ஆனா காதலதான்டி வாழ்க்கைஅ எவ்வளவோ இருக்கு..மெர்லின்..! முதல்ல வாழ்க்கைய உணரனும்.. அத உணராம.. நாம எவ்வளவோ மிஸ் பண்ணிர்றோம்..! அஸ்திவாரம் ஸ்ட்ராங்கானாத்தான்.. அழகழகான மாளிகை கட்ட முடியும்..” என்றான்.

குழப்பம் நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

சசி ”புரியல.. இல்ல..?” என்று கேட்டான்.

”பிராமிஸா.. புரியல..” எனச் சிரித்தாள்.

அவளுக்கு எப்படிச் சொல்வதெனப் புரியாமல்.. அமைதியானான்.

சிறிதுவிட்டு..மெர்லினே கேட்டாள். ” உங்க மனசுல என்னதான் இருக்கு..?”

ஒரு பெருமூச்சுவிட்டுச் சொன்னான். ”காதல்ங்கறது.. ஒரு ஆணுக்கும்.. ஒரு பெண்ணுக்கும்.. ஒரேமாதிரி இருக்காது மெர்லின்..! ரெண்டு பேருக்கும் அது.. வேற வேற அர்த்தங்கள உணர்த்தும்..! பெண்களான நீங்கள்ளாம் உணர்ச்சிவயப்பட்டவங்க.. காதலுக்கு உங்க அர்த்தம் வேற..! ஆனா அதே காதலுக்கு பசங்க மனசுல இருக்கற அர்த்தம் வேற..!” என்றான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது சுத்தமாகப் புரியாமல்.. குழப்பத்துடனே அவள் நின்றிருந்தபோது.. இருதயா மேலே வந்தாள்.!

”ஓ.. நீ இங்கதான் இருக்கியா..?” என மெர்லினைக் கேட்டபடி வந்தாள்.

”நா.. ஏரியாவ பாக்க வந்தேன்.. எனக்கு முன்னாடியே.. இவரு இங்க வந்து நின்னுட்டிருந்தாரு.. பேசிட்டிருந்தோம்..” என்றாள் மெர்லின்.

அதோடு அவர்கள் பேச்சின் டாபிக் மாறிவிட்டது. காதல் பற்றிப் பேசவே இல்லை.!!

கோவில் மேடைமேல் தனியாக உட்கார்ந்திருந்தான் சம்சு. சசியைப் பார்த்ததும் கையசைத்துக் கூப்பிட்டான். சசி போனான். ”என்னடா.. தனியா உக்காந்துருக்க..?”

”பிரகாஷ் வரேனு சொன்னான்டா..” சிரித்தான்.

”ஏன்.. உனக்கு வேலை இல்லையா.?”

”மினி சன்டே.. ஆளுகள்ளாம் லீவ் போட்டுட்டானுக..! நா மில்லுக்கு போய்ட்டு வந்துட்டேன்..! இப்பதான் வந்து உக்காந்தேன்.! டீ அடிப்பமா..?” என்று கேட்டான்.

”ம்..!”

”வா..!” என எழுந்தானா சம்சு.

இருவரும் பக்கத்தில் இருந்த பேக்கரிக்குப் போனார்கள். ”மாஸ்..ரெண்டு தம் டீ..” என டீ மாஸ்டரைப் பார்த்துச் சொல்லிவிட்டு உட்கார்ந்தான் சம்சு.

சசி அவன் எதிரில் உட்கார்ந்தான்.

”தம்முடா..?” சசியைக் கேட்டான் சம்சு.

” இப்பதான்டா அடிச்சிட்டு வரேன்..! இப்ப அதிகமா அடிக்கறதும் இல்ல.. நீ அடி..” என்றான்.

சம்சு ”பொண்ணு பிக்ஸ்டா..” என்றான்.

”பொண்ணா..?” புரியாமல் பார்த்தான் சசி.

”ராமுக்குடா.. பொண்ணு ஓகே ஆகிருச்சு..! போட்டோ காட்டினான். பொண்ணுக்கு கொஞ்சம் ஒடம்பு இருக்கும் போலருக்கு..! ஆனா நல்ல ஃபிகருதான்.. படிச்சிருக்கு.. வேலைக்கு போகதுன்னான். வீட்ல ஓரளவுக்கு வசதிதானாம்..” என சம்சு அடுக்கிக்கொண்டிருக்க… அமைதியானான் சசி.

சம்சு ”நிச்சய்துக்கு நாள் குறிச்சாச்சு..! வர்ற ஞாயித்துக்கிழம பொண்ண பாக்க போலாம்னு கூப்ட்டான். காத்தும் வர்றான்.. நீ வர்றியா..?”

டீ வந்தது. சசி மௌனமாக எடுத்தான்.

டீ யை எடுத்து ஒரு மிடறு விழுங்கிய சம்சு.. ”உன்னையும் நேர்ல வந்து கூப்பிடுவான்.. வாடா..” என்றான்.

சசியின் முகம் இருகியது. அவனால் டீயைக் குடிக்க முடியவில்லை. டீ டம்ளரைக் கீழே வைத்தான்.

அவனைப் போலவே.. டேபிள்மீது டீயை வைத்த சம்சு ”பிரெண்ட்ஷிப்ல சண்டை வரதெல்லாம் சாதாரணம்.. அதுக்காக எத்தனை நாளைக்கு விரோதிக மாதிரி.. வெறைச்சிட்டிருக்க முடியும்..?” என சசியின் முகத்தைப் பார்த்தான்.

உள்ளே குமறத்தொடங்கிய எரிமலையை அடக்க முயன்றுகொண்டிருந்தான் சசி.

சம்சு ”என்னருந்தாலும் அவன் பண்ணதும் தப்புத்தான். அதான் நானும்.. காத்தும் புடிச்சு.. அவன நல்லா ஏத்திவிட்டோம்.! இதே.. அவன் தீபாவ மேட்டர் பண்ணதெல்லாம் பிரகாஷ்கிட்ட நீ சொல்லி உசுப்பேத்தியிருந்தா.. உன் நிலமை என்னாகும்னு யோசிச்சு பாருனு செம ஏத்து.! அப்றம் அவனும்.. நா பண்ணது தப்புத்தான்.. தெரியிம அப்படி பண்ணிட்டேன்னு பீல் பண்ணான். உன்ன பாத்து.. உன்கிட்ட மன்னிப்பு கேக்கறேனு சொன்னான்..” என்றான்.

சசியால் அதற்கு மேல் பொருக்க முடியவில்லை. ”வேண்டாம்..!” என வெடித்தான் ”அவன்லாம் ஒரு மனுஷன்னு அவன்கூட பேச.. நான் தயாரா இல்ல..”

”என்னடா பேசற.. அவன் பண்ணது தப்புதான்.. அதுக்காக இப்ப அவனும் பீல் பண்றான்.! உன்கிட்ட வந்து மன்னிப்பு கேக்கறேனு சொல்லியிருக்கான்.. இதுக்குமேல என்னடா….”

”நான் மகாத்மா இல்லடா..” சசியின் தாடை இருகியது ”அவன் வந்து மன்னிப்பு கேட்டா.. உடனே மன்னிக்கற அளவுக்கு நான் ஒன்னும் மகாத்மா இல்லடா..! அவன மாதிரி ஒரு நயவஞ்சகனோட நான் பழகினதுக்காக இப்பவும் நான் வெக்கப்படறேன்டா..”

சசியின் கையைத் தொட்டான் சம்சு. ”அப்படி என்னடா வஞ்சகம் பண்ணிட்டான் உனக்கு..? சரி.. சரி பண்ணிட்டான்னே வெச்சுப்போம்.. அதைத்தான் இப்ப அவனும் உணர்ந்துட்டானே..! நீ அவனை மன்னிக்கறதுல என்ன தப்பு..? பிரெண்ட்ஷிப்ல….”

” உனக்கு இது புரியாதுடா.. என்னிக்கும் அடிச்சவன் மறந்துருவான்.. ஆனா.. அடி வாங்கினவனாலதான் மறக்கவே முடியாது.! நான் அடி வாங்கினவன்.. அந்த வலி என்னன்னு எனக்குத்தான் தெரியும்..”

”அது.. சரிதான்டா.. ஆனா….”

”வேணான்டா.. இனிமே இதப்பத்தி எதும் பேசாத..! வேற எதுவேணா பேசு.. நா இருக்கேன்.. இந்த பேச்சுன்னா விட்று.. நா போறேன்..!!” என்றான் சசி.

”சரிடா.. விடு.. டீ குடி..” என்றான் சம்சு.

சசியால் சரியாக டீ குடிக்க முடியவில்லை. சம்சுக்காக இரண்டு நிமிடங்கள் கழித்து.. எழுந்து கிளம்பிவிட்டான் சசி.

சைக்கிளை எடுத்து வேகமாக மிதிக்கத் தொடங்கினான் சசி. உண்மையிலேயே இப்போது அவன் மனசு கொதித்துக் கொண்டிருந்தது. வேகவேகமாக மூச்சு வாங்கினான். நடந்து முடிந்த நிகழ்வுகள் மற்றவர்களைப் பொருத்தவரை சாதாரண சம்பவங்களாக இருக்கலாம்.. ஏன் ராமுகூட மிகச்சுலபமாக அதை மறந்து விடலாம்.. ஆனால் சசியால் அவ்வளவு எளிதாக அதை மறந்துவிட முடியாது.

சசி எத்தனை காயப்பட்டுப் போனான் என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும். அது சாதாரணக் காயம் அல்ல.. வாழ்நாள் உள்ளவரை.. மனதை ரணப்படுத்திக்கொண்டிருக்கக் கூடிய மிக ஆழமான காயம்.!

புவியாழினியை.. ராமு என்னவோ செய்துவிட்டுப் போகட்டும்.. அது அவர்களது சொந்த விசயம்.. ஆனால் அண்ணாச்சியம்மா என்ன பாவம் செய்தாள்.? இந்த நயவஞ்சகனின் நம்பிக்கை துரோகத்தால் கடை.. வீடு எல்லாமே காலி பண்ணிவிட்டு ஊரைவிட்டே போகவேண்டிய நிலமை வந்துவிட்டதே..? அது எவ்வளவு பெரிய வேதனை.? எனக்காக அவள் கொடுத்த எவ்வளவு பெரிய விலை அது.? அண்ணாச்சியம்மா ஊரைக்காலி பண்ணிப் போனதற்கான உண்மையான காரணம் வெளியில் தெரியாமல் போகலாம்.. ஆனால் அது இவனால்தான் என்பதை.. நான் எப்படி மறப்பேன்..?

அந்த நயவஞ்சகன்.. அவனுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொள்ள.. என்னைப் பற்றி வேறு என்னவேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்..ஆனால் இப்படி அண்ணாச்சியம்மாவைக் கோர்த்து விட்டு.. விட்டானே..? அண்ணாச்சியம்மா பெயரை மட்டும் பயன்படுத்தாமல் விட்டிருந்தால்.. அவள் ஊரைவிட்டே போயிருக்க மாட்டாளே.. அதில் நான் மனமுடைந்து போயிருக்க மாட்டேனே..?

இப்படிப்பட்ட.. ஒரு நயவஞ்சகனோடு மீண்டும் நட்பா..? சாத்தியமே இல்லாத ஒன்று..!!

சசி கடையில் இருந்தபோது.. அவனது கைபேசி அழைத்தது.

எடுத்துப் பார்த்தான். குமுதா. ! காதில் வைத்தான். ”சொல்லு..”

”கடைலயாடா இருக்க..?” எனக் கேட்டாள் குமுதா.

”ஆமா.. ஏன்..?”

”உனக்கு யாராவது போன் பண்ணாங்களா..?” அவள் குரலில் லேசான பதட்டம் தெரிந்தது.

”இல்லையே.. ஏன்.. என்னாச்சு..?”

”கவி போன் பண்லயா..?”

”இல்ல..! ஏய்.. என்னாச்சுனு சொல்லு மொதல்ல..”

”புவி.. இருக்கால்ல.. அவ.. வெஷம் குடிச்சிட்டாளான்ணா.. இப்பதான் அம்மா போன் பண்ணுச்சு.. பாவி.. என்ன பண்ணிருக்கா பார்றா..” என எதிர்முனையில் குமுதா அங்கலாய்த்துக்கொண்டிருந்தாள்.

நிச்சயமாக.. சசியின் உள்ளே எதுவோ அதிர்ந்தது. ”எ.. எப்ப..?” என்று கேட்டான்.

”இப்பதான்.. கொஞ்சம் முன்னால குடிச்சிருக்கா.. ஆஸ்பத்ரி தூக்கிட்டு போய்ருங்காங்கடா.. நா போறேன்.. நீ வந்துரு.. மச்சான்கிட்டயும் சொல்லிரு..”

”என்ன மருந்து குடிச்சானு தெரியுமா..?” அவனது குரல் மெதுவாக நடுங்கியது.

”சரியா தெரியலடா.. சானி சாயம் குடிச்சிருப்பா போலருக்கு.. நீ வர்றயாடா.. இங்க என்னை கூட்டிட்டு போ..”

”இ..இல்ல.. நா.. இப்ப வல்ல.. நீ ஆட்டோ புடிச்சு போ..” என்றுவிட்டு உடனே காலைக் கட் பண்ணினான் சசி….!!!!

-வளரும்….!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 82

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.