இதயப் பூவும் இளமை வண்டும் – 80

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

tamilkamastory ஆஸ்பத்ரியில் இருந்தான் சசி. பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. அடிகள் மட்டும்தான். அவன் குடித்துவிட்டு பைக் ஓட்டியதற்காக குமுதாவும்.. அம்மாவும் அவனைக் கண்டபடி திட்டினார்கள். அப்பாவும்.. மச்சானும் நிறைய அட்வைஸ் பண்ணினார்கள்.

Story : Mukilan

கால் முட்டியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் அடி என்பதால் ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்ரியில் இருந்தான் சசி. அடுத்த நாள் வீடு வந்துவிட்டான்.

இருதயா மிகவும் வருத்தப்பட்டாள். ஆனாலும்.. ”பெருசா ஒன்னும் ஆகிடல.. தேங்க் காட்..” என்றாள்.

”பெருசா என்ன எதிர்பாத்த.?” என சிரித்தவாறு கேட்டான் சசி.

”சே.. அபசகுணமா பேசாதிங்க.! அப்படி எதுவும் நடக்காதவரை நிம்மதி..”

”ஓ..!”

”புல் மப்பா..?” என அவள் கேட்க.. உண்மையை ஒப்புக்கொள்ள அவனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் வேறுவழி இல்லை.

”லைட்ட்ட்டா….” என புன்னகைத்தான்.

”லைட்டா ட்ரிங்க் பண்ணதுக்கே.. நிக்கற பஸ்ல போய் மோதிருக்கீங்க.. அதிகமா குடிச்சிருந்தா.?”

”இப்ப.. நீதான் அபசகுனமாக பேசற..” என்றான்.

”ஸாரி..!! இனிமே ட்ரிங்க் பண்ணாட்ரைவ் பண்ணாதிங்க.. ப்ளீஸ்..” என கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டாள்.

”ம்..ம்ம்..! என் ஸ்வீட் கேர்ள்க்காக.. ஓகேவா..?”

”தேங்க்ஸ்..!!” முகம் பிரகாசிக்கப் புன்னகைத்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே கவிதாயினி தோளில் பேகோடு வந்தாள். ”ஹாய்..” என்று சிரித்தான் சசி.

”ஹாய்டா.. மாமு..! எப்படி இருக்க..?” என்று சிரித்தவாறு இருதயாவைப் பார்த்தாள்.

”ஸீ..!!” என்றான் ”காலேஜ்லருந்து இப்படியே வரியா..?”

”ம்..ம்ம்..! உன்ன காலைலயே பாக்க வரலாம்னு நெனச்சேன்.. பட்.. டைமாகிருச்சு..! இப்ப எப்படி இருக்க..?” என அவன் பக்கத்தில் வந்து அவனது கால்கட்டு.. கை.. தலையெல்லாம் தொட்டுப்பார்த்தாள்.

”பரவால்ல.. என்ன நல்லா நடக்க முடியாது..” என்று சிரித்தான் ”உக்காரு..”

அவன் பக்கத்தில் கட்டிலிலேயே உட்கார்ந்தாள். ”என்னடா மாமு.. இப்படி பண்ணிட்ட..?”

புன்னகைத்தான் ”நம்ம கைல என்ன இருக்கு.. கவி..?”

”ஓவரோ..?”

”லைட்டா….”

”பாத்து ஓட்றதுதான..?”

”பாத்துதான் ஓட்னேன் கவி.. பட்.. சுதாரிக்கறதுக்குள்ள.. டமால்..” என சிரித்தான்.

”அதும் கவர்ன்மெண்ட் பஸ் வேற.. நையா பைசா தேறாது.! கால்ல பலமான அடியா..?”

”ரொம்ப பலமா இல்ல.. நல்லா ரெஸ்ட் எடுக்கனும்..”

”தலைல எப்படி..?”

”அது லேசாதான். கொஞ்சம் கிழிச்சிருச்சு..!!”

”தலைல படறது நல்லதில்லடா.. உயிருக்கே உலைவெச்சுரும்..”

”ம்..! ஆனா ஒன்னும் ஆகல..!”

” ஏதோ.. உன் நல்ல நேரம்..” மீண்டும் இருதயாவைப் பார்த்தாள்.

சசி.. அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான். ”கவி.. இது இருதயா.. எதுத்த வீடு..! இவ கவிதாயினி.. மண்டைல மயிர் மட்டும் இல்ல.. அறிவும் ரொம்ப கம்மிதான்..! ஆனா வாய் மட்டும் ரொம்ப அதிகம்..!” என அவன் சிரித்துக் கொண்டே சொல்ல.. அவன் தோளில் குத்தினாள் கவிதாயினி.

அப்பறம் கவியும்.. இருதயாவும் நட்பாகி.. அவர்களே பேசிக்கொண்டார்கள். குமுதா காபி கொடுத்தாள். குழந்தையை எடுத்துக் கொஞ்சியவாறு காபி குடித்தாள் கவி.

கவிதாயினியின் பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.. இருதயா மிகவும் ஒல்லியாக ஒட்டடைக்குச்சி போலத்தான் தெரிந்தாள். ஆனாலும்.. கவியிடம் இல்லாத ஒரு அழகு.. கவர்ச்சி.. இருதயாவிடம் இருந்தது. அதுதான் பெண்மையின் ரகசியமோ..?

சிறிது நேரத்தில் இருதயா விடைபெற்றுப் போய்விட்டாள். அவள் போனதும் ”சொல்லவே இல்லடா மச்சான்..” என்று மிகவும் மெதுவாகக் கேட்டாள் கவி.

”என்ன சொல்லல..?”

”இப்படி ஒரு குட்டி.. இங்க இருக்குனு.. நீ சொல்லவே இல்ல..?” சிரித்தாள்.

புன்னகைத்தான் ”ஹேய்..இது சாதாரணமா பேசும்…பழகும்.. அவ்வளவுதான்..”

”அவ்வளவுதானா..?”

”அவ்வளவுதான்..!!”

”ம்..ம்ம்.! ஆமா.. அது யாரு மஞ்சு..?” என்று கேட்டாள்.

திகைத்தான் சசி. ”மஞ்சுவா..?”

”ம்..அதுவும் இங்கதான் இருக்கா..?”

”எதுத்த ஏரியா.. ஏன்..?” குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.

”அதக்கூட நீ.. ஓட்றயாமே..?” என்றாள்.

”ஏய்.. என்ன சொல்ற..? ஆமா இதெல்லாம் யாரு சொன்னா உனக்கு. .?”

”கேள்விப்பட்டேன்டா.. மாமு..” எனச் சிரித்தாள்.

சசிக்கு புரிந்தது. இவளுக்கு புவி சொல்லியிருக்க வேண்டும்.. அவளுக்கு.. ராமு..!!

கவி மீண்டும் சன்னக்குரலில் கேட்டாள். ”உன்ன பத்தி கேள்விப்பட்டப்ப என்னால நம்பவே முடியலடா.. அந்த அண்ணாச்சியம்மா மேட்டர்லாம் செம ஷாக் எனக்கு..! ஓகே.. ஓகே.. கூல்.. டென்ஷனாகாத..விடு..! நான் போகட்டுமா..?”

”உனக்கு யாரு சொன்னா..?”

”புவிதான்டா சொன்னா..!” என எழுந்தாள் ” டேக் கேர்டா.. மாமு.. நா போறேன்..”

”எப்படி போவ..?”

”நடந்தே போயிருவேன்..!”

”சரி.. பாத்து போ..” என்றான்.

அவள் குமுதா மற்றும் குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டு போனாள்.

அவள் போனபின்பும்.. அவள் ஏற்படுத்திவிட்டுப்போன அதிர்வலைகள்.. அவனுக்குள் நீண்ட நேரம் நீடித்தது.

ராமு..புவி இருவர் மீதும்.. இருந்த அவனது வன்மம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.!!

இரண்டு நாள் கடந்திருந்தது. இருள் கவியும் நேரம்.. மெதுவாக எழுந்து மொட்டை மாடிக்குப் போனான் சசி. லேசான பனிக்காற்று வீசிக்கொண்டிருந்தது. கைகட்டி நின்றவாறு ரோட்டை வேடிக்கை பார்த்தான். அவன் எண்ணங்கள் மெல்ல.. மெல்ல பின்னோக்கி ஊர்ந்தது. அண்ணாச்சியம்மாவின் நினைவுகளில் அவன் மனம் உழன்றுகொண்டிருந்தபோது.. சட்டென பவர்கட் ஆனது.

பவர் போனதும்.. ஊரெங்கும் இருளில் மூழ்கியது. சிறிது நேரத்தில்.. இருதயா மேலே வந்தாள். ”ஹாய்..” என்றாள்.

”ஹாய்..!” என அவனும் சொன்னான்.

”எப்ப வந்தீங்க.. மேல..?”

”கொஞ்ச நேரம்ஆச்சு..”

” என்ன பண்றீங்க.. இங்க..?”

”சும்மாதான் காத்து வாங்கிட்டு..”

”வேறெதும் வாங்கிடலையே..?” சிரித்தவாறு அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

”வேற என்ன..?”

”சிகரெட்….?”

சிரித்தான் ”இல்ல..!!”

”குட்பாய்..” என்றாள்.

”பவர்கட்டா..?”

”ஊரெல்லாம் இருட்டு…எப்ப வருமோ..”

”என்ன பண்ணிட்டிருந்த நீ..?”

”படிச்சிட்டுருந்தேன்.. பவர் போய்ருச்சு..உங்க வீட்டுக்கு போனேன். அக்கா சொன்னாங்க.. நீங்க இங்க இருப்பீங்கன்னு.. கால் வலிக்கலயா..?”

”லேசான வலிதான்.. பரவால்ல..இப்படி தனியா வந்து நின்னா.. நல்லாருக்கு..”

”அப்ப நா.. வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?”

”சே.. அதெல்லாம் இல்ல..” என்றான்.

சிறிது இடைவெளிவிட்டுக் கேட்டாள் இருதயா. ”கவிதா உங்களுக்கு க்ளோஸ் பிரெண்டா..?”

அவளைப் பார்த்தான். ”ஏன்..?”

”வாடா.. போடானு பேசுச்சு..? அதான் கேட்டேன்..?”

”ம்.. அவ சின்ன வயசுலருந்தே அப்படித்தான்.! பழகிட்டா..”

”அவங்க யார லவ் பண்றாங்க..?” என்று கேட்டாள்.

”அதெப்படி.. இவ்ளோ தீர்மானமா கேக்ற..?”

” ஒரு யூகம்தான்.! லவ் பண்றாங்கதான..?”

”ம்..ம்ம்..!” லேசான புன்சிரிப்புடன் வானம் பார்த்தான். அங்கங்கே மின்னிக்கொண்டிருந்த ஒரு சில நட்சத்திரங்களைப் பார்த்தவாறு ”ஒரு கவிதை சொல்லேன் இருதயா..” என்றான்.

”இப்பவா..?”

”ம்..ம்ம்.! இந்த மாதிரி அமைதியான மனநிலைலதான் கவிதைகள ரசிக்க முடியும்..”

”ஓ.. இப்ப.. அமைதியான மனநிலைல இருக்கீங்களா.. நீங்க..?”

”ம்..ம்ம். .!”

”அதேமாதிரி.. கவிதை சொல்லவும் ஒரு அமைதியான மனநிலை வேனுமில்ல..?”

”ம்..ம்ம்.. யூ ஆர் ரைட்.. ஸோ..” என்று அவளைப் பார்த்தான்.

சிரித்தாள் ”உங்களுக்காக..” என்றாள்.

”ம்..ம்ம்.. சொல்லு.. மொதவே.. உன் மனசுல இருக்கும் இல்ல..?”

இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாள். ”வானம் வெள்ளை.. மஞ்சள் நிலா.. நட்சத்திரப் பூக்கள்..!!”

அவள் சொன்ன வரிகளை உள்வாங்க முயன்றான் சசி.

”என்னாச்சு..?” என அவளே கேட்டாள்.

”ஏன்..?”

”எதுமே சொல்லல..?”

” அப்படி இல்ல.. நீ சொன்ன வரிகள் ரசணையா இருந்துச்சு.. ஆனா எனக்கு மீனிங் புரியல.. அதான் யோசிச்சிட்டிருந்தேன்..”

”ஓ..” சிரித்தாள் ”ஜஸ்ட் ரிலாக்ஸ்..!!”

”பட்.. நைஸ்..!! இதெல்லாம் எப்படி யோசிக்கற..?”

”தோணுது.. யோசிக்கறேன்..” என்று சிரித்தபடி அவனிடம் கேட்டாள் ”நீங்க ஒரு ஜோக் சொல்லுங்களேன்..”

”ஜோக்கா.. அப்படின்னா..?”

”ஜோக் தெரியாது..?”

”ஸாரி..”

”நீங்க வேஸ்ட்..” என்றாள்.

”யூ ஆர் ரைட்..!!” என்றான் சசி….!!!!

-வளரும்….!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 80

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.