நீ – 113

lungi kamakathaigal காலை நான் கண்விழித்தபோது ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது..! நான் எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவிக்கொண்டு வர.. காபியை சூடாற்றியபடி.. வந்தாய்..! தலைக்கு குளித்திருந்தாய்..! உன் கூந்தல் உலர்ந்து.. காற்றில் ஆடிக்கொண்டிருந்தது..! உன் நெற்றியில் சின்னதாக ஒரு விபூதிக் கீற்று..!

Story Writer : Mukilan

இன்நேரம் நீ வேலைக்குப் போயிருக்க வேண்டும்..! ஆனால் இன்று நீ போகவில்லை..!

”ஏன்டி.. வேலைக்கு போகல..?” என்று கேட்டேன்.

சிரித்து.. ” போகலீங்க..” என்றாய்.

”ஏன்டி…?”

”கோயிலுக்கு.. போய்ட்டு வரங்க…”

”எந்த கோயிலுக்கு..?”

”பத்ரகாளி அம்மன் கோயிலுக்குத்தாங்க..!”

”ஓ..! ஏதாவது வேண்டுதலா..?”

” அப்படினு இல்லீங்க…இந்த பிரச்சினை சரியாகனும்னு.. ஆத்தாள வேண்டிருந்தங்க..! அதாங்க… இன்னிக்கு போலாம்னு.. போகட்டுங்களா..?” என்று தயக்கத்துடன் கேட்டாய்.

”ம்..ம்ம்..! எப்படி போவ..?”

” பஸ்லதாங்க…! போய்ட்டு..உடனே வந்தர்றங்க..!”

”ஏன்.. உன் ஏரியாக்கு போகலையா..?”

”அங்க போனா… லேட்டாகுங்களே…”

”பரவால்ல போய்ட்டு வா..! கருவாச்சி எங்கருக்கா..?”

”ஊர்லிங்க..! நம்ம கல்யாணத்துக்கு வந்துட்டு போனவதாங்க.. இன்னும் இங்க ஊருக்கே வல்ல..!”

”சரி… போய் ஒரு எட்டு பாத்துட்டு வா..” என்றேன்.

”சரிங்க…” என்றாய்.

”மத்தியாணத்துக்குள்ள வந்துருவ இல்ல..?” என்று உன் இடுப்பை வளைத்து அணைத்துக் கொண்டு கேட்டேன்.

” போய் பாத்துட்டு.. வந்துருவங்க..! மத்யாணம் இங்க இருப்பங்க…!”

நான் காபிக்குப் பின் எழுந்து.. குளித்து விட்டு வந்து நீ கொடுத்த.. காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு.. வெளியே கிளம்பினேன். இப்போது நான் மீண்டும் வேலைக்குத்தான் போய்க்கொண்டிருந்தேன். என் பழைய முதலாளியான நித்யாவின் அப்பாவிடம்..!!

மதியம்..!! நான் உணவுக்குப் போனபோது.. மணி மூன்றுக்கும் மேலாகிவிட்டது. உன்னுடன் நிலாவினியும் வீட்டில் இருந்தாள்..! அவளைப் பார்த்த..நான் திடுக்கிட்டேன்..! என்னைப் பார்த்ததும் உட்கார்ந்திருந்த.. நிலாவினி எழுந்து நின்று விட்டாள்..! எனக்கும் என்ன பேசுவதெனப் புரியவில்லை..! உன்னை பார்த்து.. முறைத்தேன்..! நீ.. கைகளை பிசைந்து கொண்டிருந்தாய்..! உன் முகம் பேயறைந்தது போலிருந்தது..!!

நேற்றிரவு நான் உன்னிடம் சொன்னதை உடனே போய்.. நீ அவளிடம் சொல்லியிருப்பாய் என்று தோண்றியது..! என்னிடம் கேட்காமல்.. நீ செய்த.. இந்தச் செயல்.. என் ஆத்திரத்தைக் கிளறியது.!

நான் எதுவும் பேசாமல் பாத்ரூம் போய் கை.. கால் முகம் கழுவி வந்தேன்..! அதற்குள் நீ.. உணவு எடுத்து வந்திருந்தாய்..!

நான் நிலாவினியைப் பார்த்தேன். அவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் தெண்படவில்லை..! கொள்ளை அழகோடு.. செப்புச்சிலை போல அபபடியேதான் இருந்தாள்..! ‘இந்த அழகில் மயங்கித்தானே…நான் முட்டாளானேன்..?’

ஒருவாறு சமாளித்து… ”என்ன விசயம்..?” என்று கேட்டேன்.

தயக்கமாக என்னைப் பார்த்துவிட்டு.. குறுக்காக தலையை ஆட்டினாள். நான் கடுமையாக முறைத்தேன். என் பார்வையின் வெம்மை தாங்கமுடியாமல்.. தலை கவிழ்ந்தாள்..!

நீ.. என் அருகில் வந்து… ”மன்னிச்சுக்குங்க…”என்றாய்.

என் ஆத்திரம் சட்டென உன்மேல் திரும்பியது. நான்.. என் கட்டுப்பாட்டை இழந்தேன். ‘பளீ ‘ ரென.. உன்னை அறைந்தேன்.

”நீ.. எதுக்குடி.. வக்காலத்து வாங்கறே..?”

நீ கன்னத்தைப் பிடித்துக் கொண்டாய். நிலாவினி அதிர்ந்தாலும்.. எதுவும் பேசமுடியாமல்.. நின்றாள்..! கோபத்தின் கொந்தளிப்பில் என் உடம்பு நடுங்கியது..!

என்ன நினைத்தாளோ.. சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் நிலாவினி. ”அவள ஏன் அடிக்கறீங்க.. என்னை அடிங்க..! தப்பு பண்ணவ நானு.. என்னை அடிங்க.. கொல்லுங்க..! அவள அடிக்காதிங்க..!” என்றாள்.

”உன்னை அடிக்கறதா… கொல்லுனுன்டி..! போயிரு இங்கருந்து.. எனக்கு வர்ற ஆத்திரத்துல.. கொன்னாலும் கொன்னுருவேன்..” என்று உரக்க கத்தினேன்.

அவள் என்னையே பார்த்தாள். பின்.. தணிந்த குரலில்… ”அவள்ளாம் புள்ள பூச்சினு நீங்கதான சொன்னீங்க… அவள அடிக்கறது.. அபத்தம்னு உங்களுக்கே தோணல..? என்னை வேனா.. கொல்லுங்க.. நான் செத்துப்போறேன்..!” என்று கண்கள் கலங்கச் சொன்னாள்.

நான் உன்னை முறைத்தேன். உன் முகத்தில் கவலை மட்டும்தான் தெண்பட்டது..! ”பராவால்லக்கா… அவரு அடிக்காம.. என்னை வேற.. யாரு அடிப்பாங்க…” என்றாய்.

நான் சட்டென உன்னை இழுத்து அணைத்துக் கொண்டேன். ”நீ.. கோயிலுக்கு போறேனுதான.. என்கிட்ட சொன்ன..?”

”ஆமாங்க…”

” அப்பறம்… அவகிட்ட.. நாம பேசினதெல்லாம் பௌய்.. எதுக்கு சொன்ன..?” என்று நான் கேட்க..

உடனே நிலாவினி குறுக்கிட்டாள். ”அவள்ளாம் என்னை பாக்க வரல.. நானாதான் இங்க வந்தேன்.! இவ இன்னிக்கு வேலைக்கு வரலேனு.. இவளோட ஓனர பாத்தப்ப சொன்னாரு..! அதான்.. சரி.. இவள பாத்துட்டு போலாம்னு வந்தேன்.! நான் வந்தப்பறம்தான்.. சொன்னா.. நீங்க நேத்து.. ராத்திரி பேசினதெல்லாம்..! இப்பவும் சொல்றேன்.. என்கிட்ட இருக்கற ஆத்திரத்தை என்கிட்டயே காட்டுங்க… அவகிட்ட வேண்டாம்..! என்னை மன்னிச்சிருங்க… நான் வந்தது தப்பு..! நான் போயிர்றேன்..!” என்று நகர்ந்தாள்.

நீ சட்டென அவள் முன் போய் நின்று.. ”இருங்கக்கா.. நீங்களே பாத்திங்கள்ள.. என்னை அடிச்சாலும் உடனே அணைச்சுட்டாரு.. இல்ல..! நம்ம மூனு பேருமே.. ஒன்னுங்க்கா… பிரிச்சு பிரிச்சு பேசாதிங்க..! உங்கள பிரிஞ்சு அவரும் நிம்மதியா.. வாழ மாட்டாரு..! புரிஞ்சுக்கோங்க அககா..! நான் பேசினது ஏதாவது தப்புன்னா என்னை மன்னிச்சிருங்க… ஆனா…” என்று முடிக்கும் முன்பே…

நிலாவினி உன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னாள். ”சே..! இப்படி பேசாத.. தாமரை… நான்லாம்.. இப்பவரை பிரிச்சு பாக்கவே இல்ல..!” என்றாள்.

நான் தொப்பென சேரில் உட்கார்ந்தேன்.

நிலாவினி.. என்னைப் பார்த்து.. ”உங்க விருப்பப்படி எத்தனை நாள் வேனாலும் நான் எங்கம்மா வீட்லயே இருக்கேன்..! அப்பப்போ.. இங்க வந்து இவள பாத்துட்டு.. போக மட்டும் அனுமதி குடுங்க…போதும்..” என்றாள்.

நான் அமைதியாக இருந்தேன். எதுவும் பேசும் நிலையில் நான் இல்லை..! ஆனால் என் கோபம் மட்டும் தணியவில்லை..! என் நெஞ்சம் குமறிக்கொண்டிருந்தது..!

உடனே நீ என்னிடம் வந்து.. உணவை நீட்டினாய். ”சாப்பிடுங்க…”

நான் சாப்பிடும் மனநிலையில் இல்லை. என் பசி உணர்வை.. கோபத்தின்.. அமிலம் வென்றிருந்தது..!

நிலாவினியும்.. ”சாப்பிடுங்க.. அப்றம் பேசிக்கலாம்..” என்றாள்.

நான் சட்டென எழுந்தேன். நீ..பதறி.. என் கையைப் பிடித்தாய்..! ”ஐயோ..சாப்பிடுங்க..”

”வேண்டாம்..” என்றுவிட்டு உடனே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

நான் காலில் செருப்பை மாட்ட.. நிலாவினி.. ”ஸாரி.. என்னை மன்னிச்சிருங்க..நான் போறேன்..! உங்க கோபத்த சாப்பாட்ல காட்ட வேண்டாம்..” என்றாள்.

நான் எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டேன்..!!

இரவில் நான் தாமதமாகத்தான் வீட்டிற்குப் போனேன்..! ஃபுல் போதையில் இருந்தேன்.! ”என்னடி பண்ணிட்டிருக்க..?” என்று கதவு திறந்த உன்னிடம் கேட்டேன்.

”டீ வி பாத்துட்டிருந்தங்க..” என்ற உன் முகம் புன்னகையைக் காட்டியது.

உள்ளே போனேன். டி வி ஓடிக்கொண்டிருந்தத. கட்டிலில் உட்கார்ந்து.. ”செங்கா…” என்றேன்.

”என்னங்க..?” என்று என் பக்கத்தில் வந்தாய்.

”வா..” என்று உன் கையைப் பிடித்து.. இழுத்து.. என் மடியில் உட்கார வைத்து.. உன் இடுப்பில் கை போட்டு அணைத்துக் கொண்டேன்.

”சாப்பிட்டியாடி..?”

”இல்லிங்க…”

”ஏன்டி…?”

” செரியா… பசி இல்லீங்க..”

”பசி இல்லையா..? இல்ல.. நான்.. அடிச்சட்டேனு கோபமா..?”

”ஐயோ.. அதெல்லாம் இல்லீங்க..! அத நான் அப்பவே மறந்துட்டங்க..” என்று சிரித்த உன் முகத்தில் துளிகூட அந்த சாயல் இல்லை.

உன் கன்னம் தடவினேன். ”வலிக்குதாடி..?”

”ஐயோ.. இல்லீங்க..”

”பொய் சொல்லாதடி.. வலிச்சுருக்கும்.. நல்லா… பலமா.. அறைஞ்சுட்டேன. அடிச்ச எனக்கே கை வலிச்சுது.. அடி வாங்கின உனக்கு வலிக்காதா..?” என்று கேட்டு உன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்து.. உன்னைக் கொஞ்சினேன் ” என்னை மன்னிச்சிர்ரீ… அவமேல இருந்த கோபம்.. கண்ட்ரோல் பண்ண முடியாம உன்மேல காட்டினேன். அவ எதுக்குடி இங்க வந்தா..? நீதான் அவளை கூட்டிட்டு வந்துட்டியோனு… உன்னை அடிச்சிட்டேன்..! என் பேச்சை மீறிட்டியோனு கோபப்பட்டுட்டேன்..”

”ஐயோ..! நீங்க அடிச்சதெல்லாம் எனக்கு வலிக்கவே இல்லீங்க..! அக்காவ நான் கூட்டிட்டு வல்லீங்க..! அக்காவாதான்.. என்னை பாக்க வந்துருந்துருச்சுங்க..” என்று என் சட்டை பட்டன்களைக் கழற்றினாய்.

”இலலடி.. இனிமே.. என்ன கோபம் வந்தாலும்.. உன்னை அடிக்க மாட்டேன்..! நீதான்டி என்னோட உசரு..! உன்னவிட்டா.. எனக்கு யாருமே இல்லைடி.. நான் கடைசிவரை உன்கூடவேதான்டி வாழனும்னு ஆசைப்படறேன்.. நான் சாகறப்பகூட உன் மடிலதான்டி.. உசுர விடனும்..” என்று நான் போதையில் உன்னைக் கொஞ்சினேன்.

நீ என் வாயின்மீது உன் வலது கையை வைத்துப்பொத்தினாய். ”ஐயோ.. அப்படியெல்லாம் சொல்லாதிங்க..! நீங்க என்னை அடிங்க.. ஒதைங்க.. நீங்க ஒன்னும் கொடுமைக்கார ஆளு இல்லீங்க… ஏதோ கோபத்துலதானுங்களே…”

”ஐயோ.. நீதான்டி.. தர்ம பத்தினி..” என்று உன்னை என் மடியில் போட்டுக்கொஞ்சினேன்.

நீ எழுந்து.. என் உடைகளை களைந்து.. என் உடம்பில்.. ஒரு லுங்கியை எடுத்து கட்டிவிட்டு.. உணவைப் போட்டு வந்து.. பிசைந்து.. எனக்கு ஊட்டிவிட்டாய்…!! உனது அன்பான உபசரிப்பில்.. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு.. நீ வந்து படுக்கும் முன்பே…நான் தூங்கிப் போனேன்….!!!!!

-சொல்லுவேன்……..!!!!!