எமி – 1

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Sex Story – என்ன சொல்வது..? இந்தக்கதையை என்னுடைய சிறந்த கதைகளில் ஒன்றாககருதுகிறேன்..!! ரொம்பவே எமோஷனலான, ரொம்பவே ரொமாண்டிக்கான கதை..!! வழக்கமாக.. காதல்கதை என்று முன்னுரையில் நான் சொல்வதே, பிடிக்காதவர்கள் தவிர்த்துவிடட்டும் என்பதற்காகத்தான்..!! ஆனால்.. இந்தக்கதையை காதல்க்கதை பிடிக்காதவர்களும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..!! இந்த மாதிரி கதைகளில் டயலாக்ஸ் ஷார்ப்பாக, எதார்த்தமாக, எஃபக்டிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.. இந்தக்கதையிலும் அதற்காக சிரத்தை எடுத்துக் கொண்டேன். படியுங்கள்..!! உங்கள் கருத்துக்களை தவறாமல் சொல்லுங்கள்..!! நன்றி. – ஸ்க்ரூட்ரைவர்

(இந்தக்கதைல ஹீரோவும், ஹீரோயினும் இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதை தமிழ்லயே எழுதிருக்கேன்..!! கொஞ்சம் கஷ்டத்தை பாக்காம, அவங்க இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதா கற்பனை பண்ணிக்குங்க..!!)

ஊர்: ந்யூ யார்க், யூ.எஸ் இடம்: என் ஆபீஸ் தேதி: செப்டம்பர் 6, 2001

நான் என்னுடைய மேனேஜருக்கு மெயில் டைப் செய்துகொண்டிருந்தேன். எனக்கு பின்னால் நிழலாடுவதை உணர்ந்தேன். அது எமிதான் என்பதை பட்டென்று என் மூளை எனக்கு உணர்த்தியது. அவளிடம் இருந்துதான் இப்படி ஒரு இனிய வாசனை கிளம்பும். நான் அவள் வந்ததை கவனியாதது போல, படபடவென்று கீ-போர்டில் எதையோ தட்டினேன். ஒரு ஐந்தாறு வினாடிகள் காத்திருந்த எமி அப்புறம்,

“ம்க்கும்..” என்றாள்.

நான் திரும்பி பார்த்தேன். அப்போதுதான் அவளை கவனிப்பது போல நடித்தேன். முகத்தில் ஒரு போலி மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு,

“ஹாய் எமி.. குட் மார்னிங்..!!” என்றேன்.

“குட் மார்னிங் அசோக்.. காஃபி சாப்பிட போலாமா..?” என்று அவளும் அழகாக புன்னகைத்தாள்.

“சாரி எமி.. யூ கேரி ஆன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..!!”

“என்ன வேலை..?”

“ஒரு மெயில் டைப் பண்ணிட்டு இருக்கேன்..!!”

“எவ்வளவு டைம் ஆகும்..?”

“டென், பிஃப்டீன் மினிட்ஸ் ஆகும்..!!”

“ஓகே.. வெயிட் பண்ணுறேன்..!!”

சொன்ன எமி, அருகில் கிடந்த சேரை எடுத்துப் போட்டு, அங்கேயே அமர்ந்து கொண்டாள். நேரம் ஆகும் என்று சொன்னால், அவள் சென்று விடுவாள் என்று எதிர்பார்த்த எனக்கு பலத்த ஏமாற்றம். என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் மானிட்டர் மீது பார்வையை வீசினேன். உண்மையில் அந்த மெயிலை டைப் பண்ணி முடித்துவிட்டேன். ‘send’ பட்டனை தட்ட வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அவளிடம் டைமாகும் என்று சொன்ன காரணத்தால், எதையோ டைப் செய்து, பின்பு டைப் செய்ததை டெலீட் செய்து கொண்டிருந்தேன்.

என் பெயர் அசோக். தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், எதற்கெடுத்தாலும் அரிவாளை தூக்கும் ஒரு வம்சத்தில் பிறந்தவன். காதுகுத்து பத்திரிகையில் பெயர் போடவில்லை என்பதற்காக, பல கொலைகள் செய்த கதை எல்லாம் என் வம்சத்தில் நிறைய உண்டு. சாதிப்பிரச்சனை வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஆயுத பூஜை பூசணிக்காய் மாதிரி தலைகள் உருளும். எங்கள் ஊரில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை கூட தாண்டாது.

என்னுடைய வம்சம்தான் அப்படியே ஒழிய, நான் ரொம்ப சாது. பயந்தாங்கொள்ளி என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த அரிவாள், வெட்டு, ரத்தம் எல்லாம் அலர்ஜியான விஷயங்கள். என் ஊரையே எனக்கு பிடிக்காமல் போனது. நன்றாக படிக்க வேண்டும் என்பது மட்டும் மனதில் இருந்தது. அப்பாவிடம் அடம் பிடித்து, சிறு வயதில் இருந்தே வெளியூரில் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தேன். ஊருக்கே எப்போதாவதுதான் செல்லுவது.

ஐ.டி எஞ்சினீரிங் முடித்தேன். கேம்பசிலேயே நல்ல வேலை கிடைத்தது. சென்னையில் பிரபலமான ஐ.டி நிறுவனம். வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. ஆறு மாதங்கள் முன்புதான், யூ.எஸ்-சுக்கு ஆன்சைட் வந்தேன். ஆக்சுவலாக எனக்கு ஆன்சைட் வர விருப்பமே இல்லை. ஆங்கிலம் தத்தி தத்தித்தான் பேசுவேன். ஆனால் என்னுடைய திறமையை பார்த்து, நான்தான் அந்த வேலைக்கு சரியாக இருப்பேன் என்று சொல்லி என் மேனேஜர் என்னை அனுப்பி வைத்தார்.

புது நாடு.. புது இடம்.. புது மக்கள்.. புது பழக்க வழக்கங்கள்..!! நான் அமெரிக்காவை பார்த்து சற்றே மிரண்டு போயிருந்தேன். என்னைத்தவிர என்னுடைய டீமில் எல்லோருமே அமெரிக்கர்கள். ‘தஸ்.. புஸ்..’ என்று பேசிக்கொண்டு..!! யாரை பார்த்தாலுமே ஒருவித பயம். பட்டென்று ஒரு தாழ்வு மனப்பான்மை மனதுக்குள் புகுந்து கொள்ளும். இது பத்தாதென்று, நான் வந்த அடுத்த நாளே என் ஆபீசில் ஒரு பார்ட்டி. எனக்கும் மெயில் வந்திருந்தது. நானும் மடத்தனமாக சென்று விட்டேன்.

அந்த பெரிய ஹாலில், சுற்றிலும் வெள்ளைக்காரர்கள். எல்லோருமே ஜோடியாகவோ, க்ரூப்பாகவோ நின்று, புரியாத ஸ்லாங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். கையில் வைத்திருந்த தட்டில் ‘பஃபே’ ஐட்டங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு, அதை கடித்தவாறே, ஸ்டைலாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. அந்தக்கூட்டத்தில் நான் தனித்து விடப்பட்டதை தெளிவாக உணர்ந்தேன்.

‘உணவை எடுத்து சாப்பிடலாமா.. சாப்பிட்டால் யாராவது திட்டுவார்களோ..’ என நான் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்த போதுதான், தட்டு நிறைய உணவுப் பண்டங்களோடு அந்தக்கை என் முன் நீண்டது. என் எமியின் கை..!! திரும்பினால் முகம் நிறைய புன்னகையோடு, கவுன் அணிந்த தேவதையாக இவள் நின்றிருந்தாள்.

“ஹேவ் ஸம் புட்..!!”

என்று கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நான் தயங்கி தயங்கி அந்த பிளேட்டை வாங்கிக் கொண்டேன். உடனே அவள் கொஞ்சமும் புன்னகை குறையாமல், தன் கையை நீட்டினாள்.

“ஐ ஆம் எமி..!! நீதான இன்டியால இருந்து.. புதுசா டீம்ல ஜாயின் பண்ணிருக்கிற அசோக்..?”

“எ..எஸ்..!!” என்றவாறு நானும் கை நீட்டி குலுக்கினேன்.

“நானும் உன் டீம்தான்.. நைஸ் டூ ஹேவ் யூ ஹியர்..!! வெல்கம் டூ யூ.எஸ்…!!”

“தே..தேங்க்ஸ்..!!”

“ரொம்ப நேரமா தனியா நின்னுட்டு இருந்த.. யூ வான்ட் எ கம்பெனி..?”

“யா..!!”

“ஓகே.. நான் கம்பெனி தர்றேன்.. சொல்லு..!! இன்டியால எந்த பார்ட் நீ..?”

“ஐ.. ஐ ஆம் ஃப்ரம் சென்னை..!!”

“ஓ..!! தி பாப்புலர் ரஜினிக்காந்த்.. அவர் ஊரா..?” என மிகவும் சகஜமாக கேட்டாள்.

அப்படித்தான் எமி எனக்கு அறிமுகம் ஆனாள். யாராவது ‘சாப்பிடுகிறாயா..?’ என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டார்களா என நான் தவித்துக் கொண்டிருந்தபோதுதான், சாப்பாடும் தந்து, பார்ட்டி முடியும் வரை, புன்னகை முகம் சிறிதும் மாறாமல், என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். அடுத்த நாள் லஞ்ச் டைமில், என் இருக்கைக்கே வந்து, ‘யூ வான்ட் கம்பெனி..?’ என்று கன்னத்தில் குழி விழ கேட்டாள்.

எனக்கு பார்த்த மாத்திரத்திலேயே எமியை பிடித்து விட்டது. எந்த நேரமும் முகத்தில் சிரிப்போடு திரியும் அவளை, யாருக்குத்தான் பிடிக்காது..? பெண் என்றால் பெண்.. அவள் மாதிரி ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை..!! அவளெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்திருக்க வேண்டியவள். தாவணி அணிந்துகொண்டு, தலை குனிய நடந்து கொண்டு, கோவில், குளம் என்று திரிய வேண்டியவள். தவறிப்போய் அமெரிக்காவில் பிறந்து விட்டாள். என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு வெகுளித்தனம்.. என்ன ஒரு நல்ல உள்ளம்..? அமேசிங் கேரக்டர்..!!

எமி இன்னும் எனக்கருகே காத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் ரொம்ப நேரம் மெயில் டைப் செய்வது மாதிரி நடிக்க முடியவில்லை. மெயிலை அனுப்பிவிட்டு, ஐந்து நிமிடத்திலேயே எழுந்து கொண்டேன். எமியிடம் திரும்பி கேட்டேன்.

“போலாமா எமி..?”

“ஓகே..!!”

அவளும் எழுந்துகொள்ள, இருவரும் எங்கள் கேபினை விட்டு வெளியே வந்தோம். ஆபீசின் ஒரு மூலையில் இருந்த லிஃப்ட்டை நோக்கி நடந்தோம். லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு, அது வருவதற்காக காத்திருந்தோம். நான் ஓரக்கண்ணால் எமியை பார்த்தேன். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், லிஃப்ட் இன்டிகேட்டரையே பார்த்துக் கொண்டிருந்தாள். வானத்தில் இருந்து குதித்த தேவதை மாதிரி இருக்கிறாள்..!! என்னைப் போய் காதலிக்கிறாளே..? அப்படி என்ன இருக்கிறது என்னிடம்..? என் மூளை தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது..!!

அந்த முதல் அறிமுகத்துக்கு பிறகு, பார்க்கும்போதெல்லாம் எமி ‘ஹாய்..!!’ சொல்லி அழகாக சிரிப்பாள். காலை, மாலை எனஇருமுறை காஃபி.. மதியம் லஞ்ச்.. இருவரும் ஒன்றாகத்தான் செல்வோம். இந்தியாவை பற்றி, நம் பழக்க வழக்கங்கள் பற்றி மிக ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்வாள். என்னைப் பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் வாஞ்சையாக விசாரிப்பாள். நான் அடிக்கும் சின்ன ஜோக்குக்கு கூட, எளிறுகள் தெரிய, கலகலவென சிரிப்பாள்.

எமியை பற்றியும் கொஞ்ச நாட்களிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. எமிக்கு அம்மா மட்டும்தான். அப்பா டைவர்ஸ் வாங்கி பிரிந்து சென்று விட்டார். அம்மாவும் இப்போது அவளுடன் இல்லை. அவளுடைய அம்மா பாஸ்டனில் ஒரு லா ஃபர்மில் வேலை செய்கிறாள். இவள் இங்கே ந்யூயார்க்கில் சுயமாக சம்பாதிக்கிறாள். தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறாள். அவளுடைய அங்கிள் ஒருத்தர் இதே ந்யூயார்க்கில் இருப்பதாக சொன்னாள். அவரை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருவாள். மற்றபடி யாருடனும் நெருக்கம் கிடையாது.

எனக்கும், எமிக்கும் ஒரு இனிய நட்பு மலர ஆரம்பித்து ஒரு மாதம் ஆன சமயத்தில்தான், அந்த சம்பவம் நடந்தது. எங்கள் நட்பு தடம் மாற ஆரம்பித்த சம்பவம். இன்று நான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த சம்பவம்.

வழக்கமாக பதினோரு மணிக்கெல்லாம் நானும் எமியும் காஃபி சாப்பிட செல்வோம். அவளே என்னுடைய இருப்பிடத்துக்கு வந்து விடுவாள். அன்று அவள் வரவில்லை. மெசெஞ்சரில் பிங் செய்தபோது ரிப்ளை இல்லை. எனக்கு குழப்பமாக இருந்தது. நானே எழுந்து அவளுடைய கேபினுக்கு சென்றேன். உள்ளே எமி, தன் கம்ப்யூட்டர் டேபிளில் தலை கவிழ்த்து படுத்திருந்தாள். நான் பதறிப் போனேன்.

“எமி..!! வாட் ஹேப்பன்ட்…?”

நான் கேட்டதும் எமி பட்டென்று எழுந்து கொண்டாள். அவளுடைய கூந்தல் ஒருமாதிரி கலைந்திருந்தது. கண்களில் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று உடனே எனக்கு புரிந்து போனது. அவளோ சமாளிக்க முயன்றாள்.

“நத்திங் அசோக்.. ஐ ஆம் ஆல்ரைட்..!!”

“இல்லை எமி.. பார்த்தாலே தெரியுது.. உடம்பு சரியில்லையா..?”

எமி அப்புறமும் தயங்கினாள். என்னை ஒரு மாதிரி பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் தலையை குனிந்து கொண்டு சொன்னாள்.

“லைட்டா ஃபீவர்..!! தலை வேற வலிக்குது..!!”

நான் தயங்கி தயங்கி என் கைகளை நீட்டி அவளுடைய நெற்றியை தொட்டுப் பார்த்தேன். லைட்டாக எல்லாம் இல்லை. அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. Kaamam Kalantha Tamil Sex Story

– தொடரும்

NEXT PART

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.