முடிவுக்கு வந்தேன்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Hot Stories – நான் சித்தார்த்.. சென்னையில் எனது அப்பாவின் ஆடிட்டர் தொழிலில் அவருக்கு பார்ட்னராக இருக்கிறேன்.. வயது 44.. காதோரம் நரை ஆரம்பமாகிவிட்டது.. இப்போது என் மகளும் சி.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். என் மனைவி மதுமிதா .. வயது 47 ஆம் என்னைவிட 3 வயது மூத்தவள்… எங்கள் திருமனம் காதல் திருமனம்.எனது கல்லூரிக் காதலை உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறேன்..

நான் பி.காம் படித்தது கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் 1980 -83 பேட்ச். அப்போது எங்கள் காலேஜில் பி.காமில் வெறும் மாணவர்கள் மட்டும்தான்.. மீதி எல்லாப் பிரிவுகளிலும் ஆண், பெண் இரு பாலாரும் படித்தார்கள்.

எங்கள் காலேஜ் மற்றக் கல்லூரிகளைப் போல இல்லாது ஒரு பூங்காவனம் போல இருக்கும்… தினமும் எங்கோ ஒரு பார்க்கிற்கு நன்பர்களுடன் சென்று மகிழந்து வந்ததுப் போலத் தான் இருந்தது.. இந்த அனுபவத்தை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் படித்தவர்கள் மட்டுமே உனர முடியும்..

எங்கள் கல்லூரி காலை 8.15க்கு ஆரம்பித்து 12.45 க்கு முடியும். அவ்வளவுதான்.. தினம் மதிய சாப்பாடு முடிந்ததும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவோம்..இரவு 10 மணிக்குதான் பெரும்பாலும் ஹாஸ்டல் திரும்புவோம்.

காலையில் சூரியன் உதிக்க மறந்தாலும் 7.45 மணிக்கு எங்கள் காலேஜ் வாசல் வந்துவிடுவோம். கேட்டிலிருந்து சுமார் 100 மீட்டருக்கு ஒரு நேர் ரோடு செல்லும் அதன் முடிவில் கல்லூரியின் மெயின் கட்டிடம் இருக்கும். அந்த ரோட்டின் இரு பக்கமும் 3 அடி உயரத்தில் சுவர் (பேரப்பட்) இருக்கும். அதுதான் எங்கள் மார்னிங் ஸ்பாட். கல்லூரிக்குள் வரும் அத்தனை டே – ஸ்காலர் பெண்களையும் அட்டென்டன்ஸ் எடுத்து விட்டு பிறகுதான் எங்கள் வகுப்பிற்கு செல்வோம். பெரும்பாலும் எங்கள் ப்ர·பஸர்கள் வகுப்பில் கவனிக்க விரும்பாதவர்கள் வருகைப் பதிவு செய்துவிட்டு வெளியே சென்றுவிடலாம் என்பார்கள்.. அவர்கள் சொல்பேச்சு மீறாத நாங்களும் வெளியேறி கேன்டீன் சென்று விடுவோம்.

கேன்டீனில் டீ, எக் போன்டா வாங்கிக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டே 1/2 மணிநேரம் ஓடும். அதன் பின் பக்கத்தில் இருக்கும் ஆடிட்டோரியம் படிக்கட்டுக்கள் தான் எங்கள் இடம். நல்ல வேப்ப மரக் காற்று.. அரட்டை சிகரெட் என்று 3 மணிநேரம் ஓடும். 12 மணிக்குமேல் ஹாஸ்டலுக்குப் போய் சாப்பாடு.. அப்புறம் டவுனுக்கு ஊர் சுற்ற.. இதுதான் எங்கள் எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கை..

2ஆம் ஆண்டு முடிந்து 3ஆம் ஆண்டு ஆரம்பமானது. அன்று 1982 ஜூன் 8ஆம் தேதி புதன் கிழமை அன்றுதான் கல்லூரிக்கு முதல் நாள்.. காலை 7.30க்கெல்லாம் கேட்டில் ஆஜரானோம். அன்று புது ·பிகர்ஸ் நிறைய வரும் ஒன்னையும் மிஸ் பன்னாம பாக்கனும் என்றுதான்.

எல்லா பெண்களையும் பார்த்து விட்டு, அட்டென்டன்ஸ் கொடுக்க முதல் பீரியட் வகுப்பிற்குச் சென்றோம். எங்கள் பி.காம் துறை மெயின் பில்டிங்கில் உள்ளது. எடுத்ததும் முதல்வர் அறை. அதன் எதிரே அலுவலகம் சற்று உள்ளெ சென்றால் படிக்கட்டு அதில் முதல் மாடியில் முதல் 2 வருட வகுப்புக்களும் 2 ஆவது மாடியில் 3ஆம் வருடம் மற்றும் எம். காம் வகுப்புக்களும். அன்று நாங்கள் எங்கள் வகுப்பிற்கு செல்ல முதல்வர் அறை வழியாக உள்ளே நுழைந்தப் போது அங்கு உள்ள நாற்காலியில் பிரின்ஸிபலைப் பார்க்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

வெளிர் மஞ்சள் நிற சேலை அதே நிறத்தில் ப்ளவ்ஸ். 1 இன்ச் அளவுற்கு சேலையில் கரும் பச்சை நிற பார்டர். 5.5 அடி உயரம் மெல்லியத் தேகம். சுருண்ட அழகானக் கூந்தல். அமைதியான முகம்.. மிக அடக்கமானத் தோற்றம் மொத்தத்தில் ஜானி பட ஸ்ரீதேவி 4,5 வயது குறைந்துக் காணப்பட்டால் எப்படி இருக்கும் அதுப் போல இருந்தாள். “யாரோ நியூ அட்மிசன் பிரின்சிய பாக்கனும் போல மச்சி டக்கரா இருக்கால்ல” என ஒரு நன்பன் கமென்ட் அடித்தான். நான் “மாப்பிள்ளை எனக்கும் சேத்து அட்டென்ட்டன்ஸ் கொடுத்துவிடு நான் கொஞ்ச நேரம் இவளைக் கவனிச்சுட்டு வரேன்” என்று சொல்லி விட்டு நானும் ப்ரின்ஸிபலை பார்க்க காத்திருப்பதுப் போல அவள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பக்கத்தில் ஒரு சீட் விட்டு அமர்ந்தேன். பின் அங்கிருந்து அவள் முகம் சரியாகத் தெரியாததால் எழுந்து எதிர் வரிசையில் அவளுக்கு நேராக உட்கார்ந்தேன்.

அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் இடையே 8 அடி தூரம் தான் நடுவில் ஒரு சென்டர் டேபில்.. அதில் சில மேகஸின்களும் நியூஸ் பேப்பர்களும் இருந்தன. யாராவது நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் என்னதான் வேலையில் இருந்தாலும் உள் மனதில் ஏதோ ஒருவித உணர்வு உண்டாகுமில்லையா.. அதுப் போல அவளுக்குத் தொண்றியிருக்கும் போல.. நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். நான் “என்ன நியூ அட்மிக்ஷனா?” என்றேன். ஒன்னும் பதில் சொல்லாமல் ஒரு மேகஸினைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் கவணத்தைச் செலுத்தினாள். ஹலோ உன்னத்தாம்மா கேட்கிறேன்.. நியூ அட்மிக்ஷனா.. ·பர்ஸ்ட் டேயே திமிரா பதில் சொல்லாமல் உட்கார்ந்திருக்க..க்ளாஸ்க்குப் போகாமல் ப்ரின்ஸிபல் ரூம் முன்னால் என்ன வேலை?” என்றேன்.

அவள் மீண்டும் என்னைப் பார்த்தாள்.. என் எண்ணம் என்ன என்பது கண்களிலேயேத் தெரிந்திருக்கனும்.. ஒன்றும் பதில் சொல்லாமல் படிக்க ஆரம்பித்தாள்.. நான் எழுந்து “வெளிய வா கவணிச்சுக்கிறேன்.. எந்த டிபார்ட்மென்ட் ?” என்றேன். அவள் என் கண்களை உற்றுப் பார்த்து “நியூட்ரிக்ஷன் அன்ட் டயட்டிக்ஸ்” என்றாள். “அதான் திமிரா இருக்க.. இங்கே வேண்டாம் ப்ரேக்கில கேன்டீன் வருவல்ல.. மாட்டினடி நீ இன்னைக்கு” என்று சொல்லி விட்டு நான் வெளியே சென்றுவிட்டேன்.

எங்கள் கேண்டீன் 5 பிரிவுகளாக இருக்கும்.ஒன்று ஸ்மோக்கர்ஸ் டென், இன்னொரு ஹால் காமன், 3 வது ஹால் லெக்சரர்ஸ்க்கு 4 வது லேடீஸ் தனியா சாப்பிட விரும்பினால் யூஸ் பன்னிக்கலாம். இன்னொரு பிரிவில் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வருபவர்கள் சாப்பிட பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் செட் லெக்சரர் ஹால் தவிர எங்களுக்குத் தோனும் மற்ற எந்த ஹாலிலும் இருப்போம்.

10.30க்கு காலேஜ் டீ ப்ரேக்..நாங்கள் எப்போதுமே டீ ப்ரேக் பொழுதில் கேன்டீனில் இருக்க மாட்டோம். அப்போது ஆடிட்டோரியம் படிக்கட்டில் உட்கார்ந்திருப்போம். 11 மணிக்கு கும்பல் முடிந்ததும்தான் நாங்கள் கேன்டீன் போவோம். அன்றும் அப்படி உட்கார்ந்திருக்கும் போது காலையில் பிரின்ஸிபல் ரூம் முன்னால் பார்த்த அந்த மஞ்சள் சேலை பெண் கேன்டீன் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். நான் அடிச்சுக்கிட்டிருந்த தம்மை வேகமா ஒரு இழு இழுத்துட்டு மீதியை ஒரு ·பிரன்ட் கையில் கொடுத்துவிட்டு கட கட வென கேன்டீன் நோக்கிச் சென்றேன். உள்ளே அவள் லெக்சரர்ஸ் உட்காரும் பிரிவில் அமர்ந்து கா·பிக் குடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அருகேப் போய் ஒரு சேரில் உட்கார்ந்தேன்.. ” ஹலோ உன் பேர் என்ன? இது லெக்சரர்ஸ் சாப்பிடற இடம். போய் அங்க காமன் ஹால் அல்லது லேடீஸ் ஹாலில் உட்காரு” என்றேன். அதற்குள் அவள் டீ சாப்பிட்டு முடித்திருந்ததால் எழுந்துவிட்டாள்.. என்னைப் பார்த்து..”சாரி சார் நாளையிலிருந்து அங்க உட்கார்ந்துக்கிறேன்” என்று சொல்லி வெளியே செல்ல ஆரம்பித்தாள். நான், “ஏய்.. பேசிக்கிட்டு இருக்கேன்ல என்ன அவசரம்.. நீ பாட்டுக்கு வெளியேப் போனால் என்ன அர்த்தம்?” என்றேன். அவள் அதற்கு சாரி சார் “க்ளாஸிற்கு லேட் ஆகிடுச்சு அதான்” என்றாள்..

“நாங்க எல்லாம் லேட்டானாலும் கவலைப் படுறோமா பார்.. அது என்ன நீ மட்டும் ஸ்பெசல்.. ” என்றேன்.. அதற்கு அவள்.. நீங்கல்லாம் ஸ்டூடன்ட்ஸ் லேட்டாப் போகலாம் பட் நான் லெக்சரர்.. நானே லேட்டாப் போனால் தப்பில்லையா அதான்” என்று சொல்லிவிட்டு சர சர வென வகுப்பு நோக்கி சென்றாள். நான் அதிர்ந்து நின்றேன். இவ்வளவு அழகா ஒரு லெக்சரரா?..என..

என் நன்பர்களிடம் இதை சொன்னப்ப எல்லொரும் என்ன மச்சி ·பர்ஸ்ட் நாளே ஒருத்தி ஆப்பு வச்சுட்டாளா எனக் கிண்டலடித்தார்கள். நான் உடனே அவர்களிடம் சவால் விட்டேன்.. ஏய் இவளை மடக்கிக் காட்டுறேன்டா.. சேலஞ்ச்டா என்றேன்.. இதெல்லாம் அந்த வயதின் திமிர்.. எதையும் யோசிக்கிறதில்லை.. எதுக்கும் பயப்படுவதில்லை..வருவது வரட்டும் என்ற வரட்டுத் தைரியம்..

அன்று ஆரம்பித்ததுதான்.. தினம் காலை கேட்டில் நிற்போம்.. மதுமிதா அதான் அந்த “நியூட்ரிக்ஷன் அன்ட் டயட்டிக்ஸ்” டிபார்ட்மென்ட் புது லெக்சரர் வர வரைதான் நான் அங்கு இருப்பேன். அவள் வந்த்ததும் அவள் கூடவே ஆபீஸ் ரூம் வரை வந்து அவள் அட்டென்டன்ஸ் சைன் பன்னிவிட்டு அவளது டிபார்ட்மென்ட் செல்லும் போது கூடவே சென்று விட்டு விட்டு பின்தான் கேன்டீன் செல்வேன். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் ஏதாவதுப் பேசுவேன். என் எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட அவள் என்னைப் பார்த்ததும் விலகி விடுவாள். காலேஜ் முடிந்ததும் 1.00 மணிக்கு 2ஆம் நம்பர் பஸ்ஸில்தான் அவள் செல்வாள்.. அவளை பஸ் ஏத்தி விட்டுத்தான் ஹாஸ்டல் வருவேன். இப்படியாக என் மதுமிதா முயற்சித் தொடர்ந்தது.

அன்று எங்கள் காலெஜில் புதிய ஸ்டூடன்ஸ்க்கு வெல்கம் கொடுக்கும் விழா. கோவையின் அப்போதைய முன்னனி இசைக்குழு ” சேரன் ஆர்கெஸ்ட்ரா” வினரின் கச்சேரி.. ஆடிட்டோரியத்தில் எல்லோரும் இருந்தோம். மதுமிதா 5 ஆவது வரிசையில் அமர்ந்திருந்தாள். சிலப் புதுப் பாடல்களுக்குப் பின் “ரோஜா மலரே ராஜக்குமாரி” பாடல் பாடப்பட்ட்து. அதைப் பாடிய ஆண் குரல் எங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன். நான் மதுமிதாவையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலை தன் கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். பாடல் முடிந்ததும் நான் மேடையேறி மைக்கில் பாடலைப் பாடிய சேகரைப் பாராட்டிவிட்டு “நாம் எல்லோரும் இந்தப் பாட்டை ரசிச்சோம் ஆனால் நம்மில் ஒருவர் மட்டும் தவறிப் போய் தூங்கி விட்டார்..அது வேறு யாரும் இல்லை நம்ம லெக்சரர் மதுமிதா மேடம்தான் அவருக்காக மீண்டும் இதேப் பாடலை பாடவேண்டும்” என்றேன். மொத்த கல்லூரி மானவர்களும் கைத்தட்டினார்கள். பின் நான் “மன்னிக்கனும் மதுமிதா மேடம் தூங்கவில்லை கண்மூடி அழகாக ரசித்தார்கள் அதற்காக ஒன்ஸ்மோர் வெண்டும்” என்றேன். பலத்த கரகோசத்துடன் அதேப் பாடல் மீண்டும் பாடப் பட்டது.

அன்று விழா முடிந்ததும் வழக்கம்போல மதுமிதாவை பஸ்ஸ்டாப்பில் ஸீ ஆ·ப் பன்ன நின்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் நேராக என்னிடம் வந்தவள்.. “மிஸ்டர் சித்தார்த் நான் உங்களுக்கு என்னத் தப்பு பன்னினேன் ஏன் என்னை ஓட ஓட விரட்டுகிறீர்கள்..ப்ளீஸ் இன்னையோட என்னை விட்டு விடுங்கள்.. நான் என்னை அறியாமல் ஏதாவது தப்பு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு முறை என்னிடம் இப்படி பிஹேவ் பன்னினால் நான் ரிஸைன் பன்னிட்டுப் போவதைத் தவிர வேற வழியில்லை” என்றாள்.

எனக்கு பயங்கர அதிர்ச்சி.. எதுவுமே பேசமுடியலை.. அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஹாஸ்டல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதன் பின் 15 நாட்களுக்கு நான் மதுமிதாவின் கண்களிலெயேப் படவில்லை..

ஒருநாள் நாங்கள் நன்பர்கள் எல்லோரும் புதிதாக ரிலீஸ் ஆகியிருந்த “சாமரம்” எனும் மலையாளப் படம் சென்றோம். பிரதாப் போத்தன், ஜரினாவஹாப் நடித்தது. ப்ரதாப் காலெஜ் ஸ்டூடன்ட் ஜரினா லெக்சரர்.. இருவரும் ப்ரதாப் ஜரினாவைக் காதலிப்பதாகக் கதை.. அது என்னை மிகவும் பாதித்தது.. படம் முஇந்தும் 2,3 நாள் அதே நினைவாக இருந்தது.

பின் ஒரு முறை என்எஸ்எஸ் க்காக பக்கத்தில் உள்ள கிராமத்தை சுத்தம் செய்ய எங்கள் கல்லூரி மாணவர்கள் சென்றோம். அங்கு மதுமிதாவும் வந்திருந்தாள். அவளை கிடத் தட்ட 20 நாட்களாக நான் பார்க்கவேயில்லை. மதியம் சாப்பிடும் போது என் அருகில் வந்தாள். “என்ன சித்தார்த்.. என்னை கலாட்டா பன்ன வேண்டாம் என்றுதானே சொன்னேன்.. என் பக்கமேத் திரும்ப மாட்டேன் என்கிறீர்கள்.. கோபமா” என்றாள். நான் ” அதெல்லாம் ஒன்றுமில்லை மேடம் நான் சும்மா விளையாட்டா ஏதோ செய்யப் போய் அது உங்களை ஹர்ட் பன்னிடுச்சென்னு வருத்தம்.. த்ட்ஸ் ஆல்” என்று சொன்ன்னேன்.ஆனால் இந்த 20 நாளில் நான் என்னையறியாமல் மதுமிதாவை நேசிக்கிறேனோ என எனக்குள் பயம்.. காதல் கத்தரிக்காய் எல்லாம் நம்பாத வயது.. கொஞ்ச நேரத்தில் அவளை சீண்டிப் பாக்கலாமே என ” மேடம் சாமரம் ன்னு ஒரு மூவி வந்திருக்கு பாத்தீங்களா.. சூப்பர்ப் மூவி.. மிஸ் பன்னாதீங்க” என்றேன். மாலை கலையும் நேரத்தில் அவளிடம் மீண்டும் சாமரம் பாக்கச் சொல்லிவிட்டு பைக்கில் நான் ஹாஸ்டல் வந்துவிட்டேன்.

3 நாட்கள் கழித்து நாங்கள் ஆடிட்டோரியம் படியில் உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டிருந்தோம். திடீரென மதுமிதா அங்கு வந்தாள். ” சித்தார்த் ஒரு நிமிடம் வரமுடியுமா?” என்றாள். நான் அவளுடன் கேன்டீன் சென்றேன். அங்கு யாரும் இல்லாத 5 ஆவது ஹாலுக்குச் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தாள். என்னையும் உட்காரச் சொன்னாள். நேராக என்னிடம் ” உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.. ஆர் யூ இன் லவ் வித் மீ? சொல்லு.. நான் உன்னைவிட வயசில பெரியவ.. நீ ஸ்டூடன்ட் நான் லெக்சரர்.. எதை வச்சு இப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்தது..” என்றாள்.

நான் பதிலுக்கு ” ஹலோ நான் தானே லவ் பன்றேன் பதிலுக்கு நீங்களும் என்னை லவ் பன்னனும்னு சொன்னேனா? உங்களுக்கு தொல்லைத் தரக்கூடாதுன்னுதான் நான் விலகி வந்துட்டேன்ல.. இப்பா நீங்களாதான் என்னைக் கூப்பிட்டுப் பேசுறீங்க.. எஸ் ஐ லவ் யூ.. அன்ட் ஐ வில் பி லவ்விங் யூ எவெர்.. டில் தெ என்ட் ஆ·ப் மை லை·ப் ” என்றேன்.

அவள் கண்கள் கலங்க ” சித்தார்த் ப்ளீஸ் லிசன் மீ.. நான் ஒரு விடோ.. எம்.எஸ் சி படிக்கும்போதே எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.. கல்யானம் ஆன 2 மாதத்திலேயே புருசனை பலிக் கொடுத்துட்டு விதவையா இருக்கேன். என்னால இன்னொரு ஆள நினச்சுக் கூடப் பாக்க முடியாது.. என் துக்கத்தைக் கரைச்சுக்கத்தான் நான் வேலைக்கு வரேன்.. ஆனால் இங்கேயும் இப்படியா?.. என்னை ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறான்னு தெரியலை.. ப்ளீஸ் லீவ் மீ.. என்னை விட்டுடு” என நா தழுத்தழுக்கச் சொன்னாள்.

நான் பயங்கர அதிர்ச்சியடைந்தேன்.. இவள் வாழ்க்கை இத்தனை சோகமானதா.. அந்த சோகம்தான் அவள் கண்களில் எப்போதும் தெரிவதா?.. அந்த கணமே முடிவுக்கு வந்தேன்.. எப்படியாவது மதுமிதாவின் மனதை மாற்றி அவளை வாழ்க்கைத் துனையாகக் கொள்ள வேண்டும் என்று. Kunju Sappum Tamil Hot Stories

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.