கண்ணாமூச்சி ரே ரே – 64

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Kamakathaikal – ‘என்னடா இது புது குழப்பம்?’ என்று ஆதிரா திகைத்துப்போய் நிற்க.. அவளைப்பார்த்து கைகொட்டி கேலியாக சிரித்தாள் தாமிரா..!! கழுத்தை வளைத்து தலையை ஆட்டி.. கையை விரித்து விரல்களை அசைத்து.. பாட்டு பாடினாள்..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!”

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!” – பாடலுடன் சிரிப்பையும் சேர்த்துக்கொண்டாள்.

ஆதிராவுக்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை.. அவஸ்தையாய் அங்குமிங்கும் பார்வையை அலைபாய விட்டாள்..!! அப்போதுதான்.. பாறையிடுக்கில் நீட்டியிருந்த அந்த சிவப்புநிற மலர் அவளுடைய பார்வையில் பட்டது.. உடனே அவளது மூளைக்குள் பளீரென்று ஒரு மின்னல்.. தங்கை என்ன எதிர்பார்க்கிறாள் என்று இப்போது அவளுக்கு புரிந்து போயிருந்தது..!! சிரித்துகொண்டிருந்த தாமிராவை பார்த்து பட்டென கேட்டாள்.. இருகைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு..!!

“Game or Shame..??”

தனது மேனரிசத்தை அக்காவிடம் பார்த்த தாமிராவுக்கு.. ரத்த விளாறுகளாய் வெடித்திருந்த அவளது உதட்டில் மெலிதாக ஒரு கேலிப்புன்னகை கசிந்தது..!!

“என்ன கேம்..??” என்று உறுமினாள்.

“அந்தப் பூ.. அந்தப் பூவை நான் பறிக்கிறேன்.. அப்படி பறிச்சுட்டா.. அவரை நீ விட்டுறணும்..!! சொல்லு.. Game or Shame..??”

ஆதிரா கேட்டுவிட்டு காத்திருக்க.. தாமிரா இப்போது அக்காவை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. புன்னகையும் கரகர குரலுமாக சொன்னாள்..!!

“GGGame..!!!!”

அடுத்த நிமிடம் ஆதிரா அந்த மலைச்சரிவில் மேலேறிக் கொண்டிருந்தாள்.. நிலவொளியின் மசமசப்பான வெளிச்சம்.. உத்தேசமாக ஆங்காங்கே பிடித்தவாறு மெல்ல மேலே நகர்ந்தாள்.. பிடிமானம் நழுவினால் கீழே சரிந்து உயிரை இழக்க நேரிடும்..!! பாசி படர்ந்திருந்த வழுக்குப் பாறைகள்.. மழைநீரில் வேறு நனைந்து அப்படியே வழவழத்தன.. கையையோ காலையோ உறுதியாக வைக்கமுடியவில்லை.. விழுக் விழுக்கென்று நழுவி ஓடியது..!!

“ஆஆஆஆஆ..!!”

கால் அப்படி நழுவும்போதேல்லாம் ஏதாவது பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஆதிரா கத்தினாள்..!! அவளது காலின் வெட்டுக்காயம் வேறு பாறையில் உரசி திகுதிகுவென எரிந்தது.. உயிரே போவது மாதிரி வின்வின்னென வலித்தது..!! வேதனையை பொறுத்துக்கொண்டு.. உடலை நகர்த்தி நகர்த்தி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! கணவனை மீட்டு செல்வது மட்டுமே அவளது ஒற்றை நோக்கமாக இருந்து.. அவளை மேல்நோக்கி உந்தித் தள்ளியது..!!

ஆதிரா தனது இலக்கை அடைய அத்தனை எளிதாக அனுமதிக்கவில்லை தாமிரா.. அவளும் அக்காவுடன் சேர்ந்தே மலைச்சரிவில் ஏறினாள்.. அக்காவின் காலுக்கடியில் ஊர்ந்து ஊர்ந்து சென்றாள்.. ‘ஊஊ.. ஊஊ..’ என்று ஊளையிட்டவாறு அவளை மிரட்ட முயன்றாள்..!!

“பார்த்து பார்த்து… கீழ விழுந்துடப்போற..!!” என்று கெக்கலித்தவாறே, ஆதிராவின் காலை பிடித்து படக்கென கீழே இழுத்தாள்.

“ஆஆஆஆஆ..!!!!”

பிடிமானம் நழுவிய ஆதிரா, அலறிக்கொண்டே கீழே சரிந்தாள்.. சரசரவென நழுவி வந்தவள், பாறையிடுக்கில் முளைத்திருந்த ஒரு குற்றுச்செடியை பற்றிக்கொண்டாள்.. கால்கள் ரெண்டும் ஆதாரம் சிக்காமல் அலைபாய, அப்படியே அந்தரத்தில் ஊசலாடினாள்..!!

இப்போது தாமிரா மெல்ல நகர்ந்து அக்காவின் அருகே சென்றாள்.. அவளது முகத்தை பார்த்து கோரமாக கனைத்தாள்..!!

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

“தாமிராஆஆ.. தாமிராஆஆ ப்ளீஸ்டி..!!” ஆதிரா பதறிப்போய் கெஞ்சினாள்.

“விழப்போற.. விழப்போற.. பார்த்து பார்த்து..!! ஹாஹாஹாஹா..!!”

“ஆஆஆஆஆஆ…!!”

“விழுந்தா அவ்வளவுதான்.. என்னை மாதிரியே தலை உடைஞ்சு செத்து போயிருவ..!!”

“ஆஆஆஆஆஆ…!! முடியலடி..!!”

“அப்போ விழுந்துடு.. ஹாஹா..!! ரெண்டு பேரும் சேர்ந்து விழலாமா.. செத்து செத்து வெளையாடலாமா..?? ஹாஹாஹாஹா..!!”

“தாமிராஆஆஆஆஆ…!!!!!!!!” வேதனையோடு அலறினாள் ஆதிரா.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” விடாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் தாமிரா.

ஒருவழியாக உடலை எக்கி.. கால்களை இன்னொரு பாறையில் அழுத்தமாக பதித்து.. ஆதிரா மீண்டும் மேல்நோக்கி முன்னேறினாள்..!! தாமிரா அவளை சீண்டிக்கொண்டே வந்தாள்.. அவளது கை,கால்களை இடறி விட்டாள்.. கூந்தல் மயிர்களை பற்றி இழுத்தாள்.. விகாரமாக இளித்து அவளை பயமுறுத்த முயன்றாள்..!!

“ஆஆஆஆஆஆ…!!”

அவளது சீண்டலை பொறுத்துக்கொண்டே ஆதிரா அந்த மலரை நெருங்கினாள்.. கையெட்டும் தூரத்திற்கு அந்த மலர் வந்திருந்தது..!! ஒருகையால் பாறையை பற்றிக்கொண்டு.. இன்னொரு கையை நீட்டினாள்.. கைவிரல்களை விரித்தாள்.. அந்த மலரை பற்றினாள்..!! அதேநேரத்தில் அவளது கால் ஒன்று விழுக்கென்று வழுக்கிக்கொள்ள.. பிடிமானம் இழந்துபோய், அப்படியே கடகடவென கீழே உருண்டாள்.. அவளது தலை எதிலோ சென்று நச்சென்று மோத..

“ஆஆஆஆஆஆ…!!” வென்று அலறிக்கொண்டே சுயநினைவை இழந்தாள்.

அத்தியாயம் 26

“ஆதிரா.. ஆதிரா..!!” யாரோ கன்னத்தில் பட்பட்டென்று தட்ட,

“ஹ்ஹ்ஹ்ஹா…!!” ஆதிரா படக்கென கண்விழித்தாள்.

கண்விழித்ததுமே.. கன்னத்தை தட்டியது யாரென்றுகூட கவனியாமல்.. விருட்டென எழுந்து அமர்ந்து.. இறுகிப்போயிருந்த தனது கைவிரல்களைத்தான் முதலில் பார்த்தாள்..!! அவளது கைக்குள் அந்த சிவப்பு மலரை பார்த்ததும்தான் அவளிடம் ஒரு அமைதி.. கண்ணிமைகள் மூடி மெலிதாக ஒரு நிம்மதி மூச்சை வெளிப்படுத்தினாள்..!!

உடனே தன் முகத்தை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. நிலவொளியில் தெரிந்த கணவனின் முகத்தை பார்த்ததும் அவளது மனதுக்குள் அப்படியொரு ஆனந்தம்.. கன்னத்தில் குழிவிழ சிரித்த சிபியை பார்த்து, கண்களில் கண்ணீர் முட்ட புன்னகைத்தாள்..!!

“அத்தான்ன்னன்..!!” என்று அவனை ஆரத்தழுவிக் கொண்டாள்.

“ஆதிராஆஆ..!!” அவனும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

“உ..உங்களுக்கு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே..??” அவனது உடம்பை அன்பாக, கவலையாக தடவிப் பார்த்தாள் ஆதிரா.

“எனக்கு ஒன்னுல்ல ஆதிரா.. ஐ’ம் ஆல்ரைட்..!!”

“தா..தாமிரா.. தாமிரா உங்களை..” பேச்சு வராமல் தடுமாறினாள் ஆதிரா.

“தெரியும் ஆதிரா..!!”

“நான் ரொம்ப பயந்துட்டேன் அத்தான்.. அப்படியே துடிச்சுப் போயிட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. புரியுது..!! அவ உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டாளா..??”

“இ..இல்லத்தான்.. அப்படிலாம் இல்ல..!!”

தடுமாற்றமாக சொன்ன ஆதிரா.. இப்போது அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தாள்..!! அத்தனை நேரம் நடந்த அமளி துமளிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்.. அமைதியாக உறைந்திருந்தது சிங்கமலை சிகரம்..!! மிருகங்களையோ பறவைகளையோ காணவில்லை.. தாமிராவின் ஆவியுருவும் பார்வைக்கு தென்படவில்லை..!! குழலாற்றின் சப்தம் மட்டும் சன்னமாக ‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ என்று கேட்டுக்கொண்டிருந்தது..!! ஆதிரா இப்போது சிபியிடம் திரும்பினாள்.. அவனது முகத்தை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னாள்..!!

“எ..என் தங்கச்சி.. என் தங்கச்சியை.. நா..நான்.. நான்தான் கொன்னுருக்கேன் அத்தான்..”

“ப்ச் ப்ச்.. ஆதிரா.. என்ன பேச்சு இது..??”

“ஆ..ஆமாம் அத்தான்.. அது தெரியாம..”

“அதுலாம் ஒன்னுல்ல.. இப்படிலாம் எப்போவும் பேசாத..!! தாமிரா இறந்தது ஒரு ஆக்சிடன்ட்.. அதுல உன் தப்பு எதுவும் இல்ல..!!”

“இல்லத்தான்.. நான்தான் அவளை..”

“சொல்றேன்ல.. இனிமே அந்தப்பேச்சு வேணாம்.. புரியுதா..??”

ஆதிராவை இழுத்து அணைத்து.. அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டான் சிபி..!! அவளும் இப்போது கணவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள்.. அவனது அணைப்பு தந்த கதகதப்புக்குள் சுகமாக அடங்கிப்போனாள்..!! ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. தயங்கி தயங்கி அவனை அழைத்தாள்..!!

“அ..அத்தான்..!!”

“ம்ம்..??”

“நான் ஒன்னு கேக்கட்டுமா..??”

“கேளுடா..!!”

“நெ..நெஜமாவே.. நெஜமாவே என்னை நீங்க லவ் பண்றீங்களா..?? என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா..??” ஆதிரா பரிதாபமாக கேட்க, அவளது முகத்தை கூர்மையாக பார்த்தான் சிபி.

“லூசு.. என்ன கேள்வி இது..?? உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. அப்படிலாம் இருந்திருந்தா உன்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சிருப்பனா..?? உன்னை நான் ரொம்ப ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் ஆதிரா.. என் லைஃப்ல இனிமே எனக்கு எல்லாமே நீதான்.. போதுமா..??”

“ம்ம்ம்ம்..!!!!!!!!” ஆதிராவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, கணவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“நீ ரொம்ப நல்ல பொண்ணுடி.. நீ பொண்டாட்டியா கெடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்..!! இனிமே இந்தமாதிரிலாம் உனக்கு எப்போவும் சந்தேகம் வரக்கூடாது.. சரியா..??”

“ம்ம்ம்.. சரித்தான்..!!” ஆதிரா அழுகையுடனே சொல்ல,

“லூசு..!!” என்றவாறு மீண்டும் அவளது நெற்றியில் முத்தம் பதித்தான் சிபி.

அடுத்தநாள் அதிகாலை..

ஆதிரா தங்கள் வீட்டின் மாடியறை ஜன்னலுக்கு முன்பாக நின்றிருந்தாள்.. தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்புறமாக வந்த சிபி.. மனைவியின் தோள்மீது கைபோட்டு அவளை அன்பாக அணைத்துக்கொண்டான்..!! கவனம் சிதறிய ஆதிரா.. தன்னை அணுகியது கணவன்தான் என்று புரிந்ததும்.. மெலிதாக புன்னகைத்தாள்.. அவனது அணைப்புக்குள் வசதியாக அடங்கிப்போனாள்..!! சிபி இப்போது அவளது கன்னத்தில் முத்தமிட்டவாறே கேட்டான்..!!

“ஹ்ம்ம்.. அப்படி என்னத்த இவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்குற..??”

“என் தங்கச்சி வாழ்ற வீட்டை பாத்துட்டு இருக்கேன்..!!”

“எது..?? அதுவா.. அந்த சிங்கமலையா..??” சிபி தூரத்தில் தெரிந்த சிங்கமலையை கைநீட்டி கேட்டான்.

“ம்ம்.. ஆமாம் அத்தான்.. அங்கதான தாமிரா வாழ்றா..??”

“ஹ்ம்ம்..!! அதுசரி.. உன் தங்கச்சி வாழ்ற வீடு இருக்கட்டும்.. நாம வாழப்போற வீட்டுக்கு எப்போ கெளம்புறது..??”

“ஹ்ஹ.. கெளம்ப வேண்டியதுதான்..!!”

“அப்போ ரெடியா..??”

“ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டா ரெடிதான்..!!”

“ஹாஹா..!!”

சிபி சிரித்துக்கொண்டே ஆதிராவை அணைக்க முற்பட.. அதேநேரம் அவனது முழங்கால் அவளது கால்க்காயத்தை இடிக்க..

“ஆஆஆஆ..!!” ஆதிரா வேதனையில் முனகினாள்.

“என்னாச்சு..??” பதறினான் சிபி.

“காலு.. இடிச்சுட்டிங்க.. வலிக்குது..!!” வேதனையை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள் ஆதிரா.

“ஓ.. ஸாரி ஸாரி..!!”

“ச்ச.. பரவாலத்தான்..!!”

– தொடரும் Ilampen Pundaiyai Kuthum Tamil Kamakathaikal

LAST PART

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.