கண்ணாமூச்சி ரே ரே – 34

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Latest Tamil Sex Stories – மனைவியின் முகத்தை மேலும் சில வினாடிகள் கவலையாக பார்த்தபிறகே.. ஒரு நீண்ட பெருமூச்சுடன் காலை பிக்கப் செய்தான் சிபி..!! கைபேசியை காதுக்கு கொடுத்து, இயல்பான குரலில் பேசினான்..!!

“ஹலோ.. சொல்லுங்க ஸார்..!!”

“……………………..”

“இல்ல ஸார்.. காலைலதான் கெளம்புறேன்..!!”

“……………………..”

” நைட்டா..?? சான்ஸே இல்ல..!!”

“……………………..”

“காலைல ஒம்பது மணிக்குலாம் நான் அங்க இருப்பேன்.. போதுமா..??”

“……………………..”

“ஸார்.. இங்க நான் ஹனிமூன் வந்திருக்கேன்.. அதை கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கங்க..!!”

“……………………..”

“ஹ்ம்ம்.. ஓகே.. ஓகே.. எஸ்.. ஒம்பது மணிக்கு அங்க இருப்பேன்.. ப்ராமிஸ்..!!”

“……………………..”

“யா.. வில் டேக் கேர்.. பை..!!”

சிபி சொல்லிவிட்டு காலை கட் செய்ய, ஆதிரா அவனிடம் அவசரமாக கேட்டாள்.

“யாருத்தான் ஃபோன்ல..??”

“நாவரசு ஸார்..!!”

“எ..எங்க போறீங்க காலைல..??”

“ஊட்டிக்கு..!! அன்னைக்கே உன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்ல..?? ஒரு சின்ன வேலை..!!”

“ஓ..!!” ஆதிராவின் குரலிலும் முகத்திலும் பட்டென ஒருவித ஏமாற்ற உணர்வு..!!

அன்று இரவு.. கணவனின் வெற்று மார்பில் முகத்தை சாய்த்து, மேலாடையற்று படுத்திருந்த ஆதிரா.. அவனுடைய மார்பு ரோமச்சுருள்களுக்குள் தனது விரல்களை நுழைத்து சிக்கெடுத்தவாறே.. ஏக்கமும், கொஞ்சலுமாய் கேட்டாள்..!!

“கண்டிப்பா போகணுமா..??”

“ஆமாம்.. போய்த்தான் ஆகணும்..!!”

“நீங்க இல்லாம எனக்கு இங்க கஷ்டமா இருக்கும்..!!”

“அப்போ நீயும் என்கூட வா.. ஊட்டில கொஞ்சநாள் இருந்துட்டு, அப்படியே மைசூர் கெளம்பிடலாம்..!!”

“ப்ச்.. போங்கத்தான்.. அஞ்சாறு நாள் இங்க இருக்கலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. இப்போ மூணு நாள்ல கெளம்புனா என்ன அர்த்தம்..??”

“வேற என்ன பண்ண சொல்ற என்னை..??”

“ம்ம்..?? ஒன்னும் பண்ண சொல்லல உங்கள..!! சரி.. நாளைக்கு நீங்க மட்டும் தனியா ஊட்டி போய்ட்டு வாங்க.. நான் இங்கயே இருக்கேன்..!! திருவிழா வருது.. ரெண்டு நாள்.. அதை மட்டும் முடிச்சுட்டு அகழில இருந்து கெளம்பிடலாம்.. சரியா..??”

“ஹ்ம்ம்ம்ம்.. சரி.. உன் இஷ்டம்..!!”

அடுத்த நாள் அதிகாலையிலேயே சிபி எழுந்துவிட்டான்.. ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, ஆறரை மணிக்கெல்லாம் ஊட்டி பயணத்திற்கு தயாராகி விட்டான்..!! சிபியுடைய பிரயாணம் பற்றி முதல்நாளே வனக்கொடிக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.. அவளும் அதிகாலையிலேயே தனது மகளை அனுப்பி வைத்திருந்தாள்..!! தென்றல் சமைத்துக் கொண்டிருந்த காலை உணவினை.. தாமதத்தை காரணமாகக் காட்டி புறக்கணித்தவன்.. அவள் தயாரித்து தந்த காபியை மட்டும் அருந்தினான்..!!

காபி குடித்து முடித்து கார்ச்சாவியை எடுத்துக் கொண்டான்.. லேப்டாப்பை தோளில் மாட்டிக்கொண்டான்.. கேமரா கேஸை ஒரு கையில் தூக்கிக் கொண்டான்..!! சலனமில்லாமல் நின்று கொண்டிருந்த ஆதிராவை நெருங்கினான்.. கிளம்புவதற்கு முன்பு மனைவியிடம் சொல்ல நினைத்ததை சொன்னான்..!!

“சரிடா.. கெளம்புறேன்.. நைட்டே திரும்ப வந்துடுவேன்.. எப்படியும் ஒம்பது மணிக்குள்ள வந்துடுவேன்னு நெனைக்கிறேன்.. ஏதாவதுன்னா கால் பண்ணு..!!”

“ம்ம்..!!”

“அப்புறம்.. நேத்து மாதிரி அந்த கதிரோட சேர்ந்துக்கிட்டு அங்க இங்கன்னு சுத்திட்டு இருக்காத.. புரியுதா..?? இன்னைக்கு ஒருநாள் எங்கயும் அலையாம வீட்லயே நல்லா ரெஸ்ட் எடு..!!”

“ம்ம்.. சரித்தான்..!!”

“ஹனிமூன் வந்த எடத்துல, மூளையை கசக்கி டிடக்டிவ் வேலை பாத்ததுலாம் போதும்.. சரியா..??” குறும்பாக சொன்ன சிபி ஆதிராவின் மூக்கை பிடித்து திருக,

“ம்ம்.. சரி..!!” அவளும் இலகுவாக புன்னகைத்தாள்.

“ஓகேடா.. கெளம்புறேன்.. பை..!!”

“பை அத்தான்.. பார்த்து நிதானமா கார் ஓட்டுங்க..!!”

” ம்ம்.. சரிம்மா..!!”

சிபி கிளம்புகிற வரைக்கும் அமைதியாக நின்றிருந்த ஆதிரா.. வாசலில் அவனது தலை மறைந்ததும், இந்தப்பக்கம் உடனடியாக பரபரப்பானாள்..!! அவசரமாக சென்று செல்ஃபோனை எடுத்தவள்.. அதன் திரையை தேய்த்து செயல்புரிய வைத்தாள்..!! கான்டாக்ட் லிஸ்டில் கட்டை விரலால் சறுக்கியபோதுதான்.. கதிருடைய எண்ணை கேட்டுப்பெற மறந்ததை உணர்ந்தாள்..!!

“ப்ச்..!!”

சலிப்பை உதிர்த்தவள் சளைத்துப் போகவில்லை.. ஹாலில் நின்றபடியே தலையை திருப்பி கத்தினாள்..!!

“தென்றல்..!!!!”

“என்னக்கா..??” சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் தென்றல்.

“உன் அண்ணனோட மொபைல் நம்பர் சொல்லு..!!”

பத்து இலக்க எண்ணை தென்றல் சொல்ல சொல்ல.. படபடவென டைப் செய்து, அப்படியே டயல் செய்தாள் ஆதிரா.. காதில் வைத்துக்கொண்டு கால் கனெக்ட் ஆவதற்காக காத்திருந்தாள்..!!

“அக்கா..!!” ஏதோ சொல்வதற்காக தென்றல் அவளை அழைத்தாள்.

“ஒரு நிமிஷம் இரு தென்றல்..!!” – அடுத்த முனையில் ரிங் செல்ல, ஆதிராவின் கவனம் அதிலேதான் இருந்தது.

“இல்லக்கா.. ஒன்னு..” தென்றல் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

“ப்ச்..!!”

ஆதிராவோ எரிச்சலை வெளிப்படுத்தினாள்.. முழு ரிங்கும் சென்று கால் கட் ஆனதாலேயே அந்த எரிச்சல்.. மீண்டும் டயல் செய்து செல்ஃபோனை காதில் வைத்துக் கொண்டாள்.. அந்தப்பக்கம் ரிங் போகிற கேப்பில்,

“சொல்றேன்ல.. இரு.. பேசிட்டு வந்துடுறேன்..!!”

என்று இந்தப்பக்கம் தென்றலிடம் சொன்னாள்..!! தென்றல் இப்போது ஒருவித அவஸ்தையுடன் ஆதிராவையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!! கால் மீண்டும் பிக்கப் செய்யப்படவில்லை.. ஆதிரா திரும்ப முயற்சித்தாள்.. நான்காவது முறையாக முயற்சிக்கும்போதுதான் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! ஆதிரா இந்த முனையில் ‘ஹலோ’ என்று சொல்ல வாயெடுக்கும் முன்பாகவே.. அடுத்த முனையில் கதிரின் குரல் அவசரமாக ஒலித்தது.. தூக்க கலக்கமும், எரிச்சலும் மிகுந்த குரல்.. எடுத்ததுமே படபடவென பொரிந்து தள்ளினான்..!!

“ஹலோ.. யாருங்க இது..?? காலங்காத்தால..?? கால் பிக்கப் பண்ணலைன்னா விட மாட்டிங்களா.. திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்கீங்க..?? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல..?? ச்சே..!!”

ஆதிரா ஓரிரு வினாடிகள் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள்.. கதிரிடமிருந்து இந்த மாதிரி ஒரு ரெஸ்பான்ஸை அவள் சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! என்ன செய்வது என்று திருதிருவென விழித்தவள்.. பிறகு திக்கித் திணறி சொன்னாள்..!!

“நா..நான்.. நான்.. ஆ..ஆதிரா பேசுறேன் கதிர்..!!”

அழைப்பு விடுத்தது ஆதிரா என்று புரிந்ததும்.. அந்தப்பக்கம் கதிருமே திகைத்துப் போனான்.. அவசரப்பட்டு வார்த்தைகளை சிந்திவிட்டோமே என்று அவனிடம் ஒரு பதற்றம்.. அவன் பேசிய வார்த்தைகளில் ஒருவித தடுமாற்றம்..!!

“ஆ..ஆதிரா நீங்களா..?? நா..நான் வேற யாரோன்னு நெனச்சுட்டு.. என்னன்னவோ..!! ஸா..ஸாரி.. ஸாரிங்க.. ஐ’ம் ரியல்லி வெரி ஸாரி..!!”

“ப..பரவால..!!”

“அ..அன்னோன் நம்பரா இருந்தது.. அதான்.. யோசிக்காம.. ஸாரி..!!”

“இ..இதுதான் என் நம்பர்..!!”

“அப்படியா..?? அப்போ எங்கிட்ட இருக்குறது உங்களோட பழைய நம்பரா..??”

“அப்படித்தான் இருக்கும்..!! நா..நான் மைசூர் போனதுல இருந்து இந்த நம்பர்தான் யூஸ் பண்றேன்..!!”

“ஓ.. சரி சரி..!! ஸேவ் பண்ணிக்கிறேங்க ஆதிரா..!!”

“ம்ம்..!! அ..அப்புறம்.. இன்னைக்கு அந்த ப்ரொஃபஸர போய் பாக்கலாம்னு பேசிட்டு இருந்தோம்..!!”

“ஆமாம்..!!”

“அதான்.. எ..எப்போ கெளம்பலாம்னு கேக்குறதுக்குத்தான் கால் பண்ணேன்..!!”

“இ..இதோ.. குளிச்சுட்டு இன்னும் ஒரு.. ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுறேன்..!! போதுமா..??”

“ஹையோ.. ஒ..ஒன்னும் அவசரம் இல்ல..!! உ..உங்களுக்கு தூக்கமா இருந்துச்சுனா.. ந..நல்லா தூங்கிட்டு.. பொறுமையாவே வாங்க..!!”

“இ..இல்ல இல்ல.. இனிமே தூக்கம் வராதுங்க ஆதிரா.. அவ்வளவுதான்.. நான் ரெடியாகி வந்துடுறேன்.. சீக்கிரமே கெளம்பிடலாம்..!!”

“சரி கதிர்.. வாங்க..!!”

காலை கட் செய்த பிறகும்கூட ஒருசில வினாடிகள்.. கதிரின் எரிச்சல் தந்த தாக்கத்திலேயே ஆதிரா இருந்தாள்..!! ‘உஃப்’ என்று உதடுகள் குவித்து மூச்சு வெளியிட்டாள்..!! பிறகு.. இருவரும் மாறி மாறி பம்மியதையும், வழிந்து கொண்டதையும் நினைத்து மெலிதாக புன்னகைத்தாள்..!!

அறைக்கு செல்லலாம் என்று ஆதிரா திரும்பவும், அவளுடைய பார்வையில் தென்றல் தென்பட்டாள்.. உடனே ஞாபகம் வந்தவளாய்..

“ம்ம்.. சொல்லு தென்றல்.. நீ ஏதோ சொல்ல வந்த..??” Chinna Mulai Latest Tamil Sex Stories

– தொடரும்

NEXT PART

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.