நெஞ்சோடு கலந்திடு – 19

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil New Sex Stories – “நாளைக்கு காலைல கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சுடலாம் திவ்யா..”

“ஏன்..?”

“ஏனா..? உன் கோச் சொன்னது ஞாபகம் இல்லை.. காலைல போய் உனக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பாத்துடலாம்..!!”

“ஐயோ.. அதுலாம் ஒன்னும் வேணாம் அசோக்.. எனக்கு ஒன்னும் இல்ல..!!”

“என்ன வெளையாடுறியா..? அதுலாம் முடியாது.. காலைல கண்டிப்பா ஹாஸ்பிட்டல் போறோம்..!! போயிட்டு.. அப்படியே உனக்கு ஊருக்கு போறதுக்கு டிக்கெட்டும் புக் பண்ணிடலாம்..!!”

“…………………”

“என்ன சத்தத்தையே காணோம்..?”

“நான் வரலை..!!”

“உதை வாங்குவ..!!”

“சரி வர்றேன்.. ஆனா.. ஒரு கண்டிஷன்..!!”

“என்ன..?”

“நீயும் என் கூட ஊருக்கு வா..”

“ஊருக்கா..??? எனக்குத்தான் கம்பெனில லீவு குடுக்கலையே..?”

“லீவுன்றது குடுக்குறது இல்ல அசோக்.. எடுக்குறது..!!”

“பன்ச் டயலாக்லாம் பட்டாசாத்தான் இருக்குது.. ஆனா வேலைக்காகாது..!!”

“ஏன்..?”

“ரிலீஸ் டைம் திவ்யா.. நெறைய வேலை இருக்கு.. நான் போகலைன்னா அங்க ஒரு வேலையும் நடக்காது..!!”

“அதெல்லாம் சும்மா.. நடக்கனும்னு விதி இருந்தா எல்லாம் நடக்கும்..!!”

“என்ன சொல்ற நீ..?”

“இப்போ ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டேல..? திடீர்னு உனக்கு வாந்தி பேதி புடுங்கிடுச்சுனு வச்சுக்கோ.. என்ன பண்ணுவாங்க உன் ஆபீஸ்ல..?”

“அடிப்பாதகத்தி..!! ஏண்டி உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம்..??”

“ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..!!”

“அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது.. அதுலாம் விதி..!!”

“அதைத்தான் நானும் சொன்னேன்..!!”

“ம்ம்.. நல்லாத்தான் பேசுற.. ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி.. லீவ் போட்டுட்டு ஓடுறது அவ்ளோ ஈசி இல்லை..!!”

“ஓகே.. நான் ஒரு ஈசியான அட்வைஸ் சொல்றேன் கேக்குறியா..?”

“என்ன..?”

“உன் செல்போனை பார்ட் பார்ட்டா கழட்டி போட்டுடு..!! நாலு நாளைக்கு அப்படியே கெடக்கட்டும்..!! உனக்கு ஒரு தொந்தரவும் இருக்காது..!!”

“நல்லாத்தான் இருக்கு யோசனை.. ஆனா நாலு நாளுக்கப்புறம்.. கழட்டுனதை எல்லாம் திரும்ப மாட்டுறப்போ.. எங்கடா போய் தொலைஞ்சன்னு ஆபீஸ்ல காரணம் கேட்பாங்களே.. என்ன சொல்றது..?”

“நாலு நாள் நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு.. வீட்டுல தெண்டத்துக்கு தூங்கிட்டு இருப்பேல..? என்ன காரணம் சொல்லலாம்னு அப்போ மல்லாக்கப்படுத்து நல்லா யோசி..!!”

“ஹாஹா.!!. உனக்கு… நல்லா கொழுப்பு வச்சுப் போச்சுடி..!!”

சிகரெட்டை சுண்டி எறிந்துவிட்டு, அசோக் திவ்யாவை அடிப்பது போல விளையாட்டாக விரட்ட, அவளும் ஓடினாள். ஓடியவள் இரண்டே எட்டுகளில் ‘ஆஆஆஆ..!!’ என்று அலறியவாறு அப்படியே நின்றாள். வலியை தாங்க முடியாமல் அவள் முகம் சுருங்கிக்கொள்ள, குனிந்து தனது வலது கையால் முழங்காலை பற்றிக் கொண்டு அப்படியே அமர்ந்தாள். அசோக் பதறிப் போனான்.

“ஹேய்.. திவ்யா.. என்னாச்சு..?”

“கீழ விழுந்தப்போ கால்லயும் அடி பட்டுடுச்சுடா.. அப்போ தெரியலை.. இப்போ நல்லா வலிக்குது..!!”

“அச்சச்சோ.. எங்க காட்டு..”

திவ்யா துணியை மேலேற்றி தன் முழங்காலை காட்ட.. அந்த இடம் கன்றிப்போய் வீங்கியிருந்தது..!!

“சரி வா.. நான் மூவ் போட்டு விடுறேன்.. காலைல சரியாயிடும்..!!”

“ம்ம்..”

அடுத்த இரண்டாவது நிமிடம், திவ்யா மெத்தையில் கால் நீட்டி படுத்திருக்க, அசோக் அவளுடைய வலது காலை எடுத்து தன் மடிமீது வைத்திருந்தான். வீங்கியிருந்த பகுதியில் மூவ் பிதுக்கி தடவி, கவனமாக மசாஜ் செய்துவிட்டான். அசோக்கின் கவனம் திவ்யாவின் காலிலேயே இருக்க, திவ்யாவின் கவனமோ அசோக்கின் முகத்தில் படிந்திருந்தது. அன்று மாலை அவளுக்கு அடிப்பட்டதில் இருந்து நடந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனதுக்குள் வந்து போயின.

‘இவனுக்குத்தான் என் மீது எவ்வளவு அன்பு.. எவ்வளவு அக்கறை..? ஒரு அன்னை மாதிரி என்னை எப்படி கவனித்துக் கொள்கிறான்..? எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எப்படி இவனால் மட்டும் சரியாக புரிந்து கொள்ள முடிகிறது..? விவரம் தெரியாத பிஞ்சு வயதில் இருந்தே, தினம் தினம் இவன் எனக்கு புரிந்த நன்மைகள்தான் எத்தனை..? எனக்கு அள்ளிக் கொடுத்த சந்தோஷங்கள்தான் எத்தனை எத்தனை..? இதற்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன்..? எனைப்படைத்த இறைவன் கூட என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பானா..?’

“ஹேய்.. என்னாச்சு..” அசோக் நிமிர்ந்து பார்த்து கேட்க,

“ஒ..ஒண்ணுல்ல..” திவ்யா கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“அப்புறம் ஏன் அழற..?”

“நீயும் என்கூட ஊருக்கு வாடா.. ப்ளீஸ்…!!”

“அட லூசு.. இதுக்காகவா அழற..? நான் ஊருக்கு வரணும்.. அவ்ளோதான..? கண்டிப்பா வர்றேன்..!! போதுமா..?”

“தேங்க்ஸ்டா..!!”

“சரி.. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம.. நிம்மதியா படுத்து தூங்கு.. நான் உனக்கு கால் புடிச்சு விடுறேன்..!!”

“ம்ம்ம்..”

திவ்யா படுத்துக்கொண்டாள். தன் கால்கள் இரண்டையும் இதமாக பிடித்துவிட்டு கொண்டிருந்த அசோக்கின் முகத்தையே அன்போடு பார்த்துக் கொண்டு, கொஞ்ச நேரத்திலேயே சுகமாக உறங்கிப் போனாள். அவள் உறங்கியதும், அசோக் போர்வை எடுத்து அவளுடைய கழுத்து வரை போர்த்திவிட்டான். இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு மிச்ச விளக்குகளை அணைத்தான். திவ்யாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் பொலிவுடன் பிரகாசித்த திவ்யாவின் அழகு முகத்தை பார்த்துக்கொண்டே, நெடுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

அத்தியாயம் 21

‘வேற்காடு வாழ்ந்திருக்கும்.. ஆதி பராசக்தி அவள்..!! வேல்முருகன் அன்னை அவள்.. வேண்டும் வரம் தந்திடுவாள்..!! பாற்கடலாய் அவள் கருணை.. பெருகிடவே செய்திடுவாள்..!! பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள்..!!’

ஒலிப்பெருக்கியில் LR ஈஸ்வரி தன் கணீர் குரலில் அம்மனின் புகழ் பாடிக்கொண்டிருந்தார்..!! புளியங்குளம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! எந்தப்பக்கம் திரும்பினாலும் முகத்தில் சந்தோஷமும் புன்னகையுமாய் அந்த ஊர் வெள்ளந்தி மக்கள்..!! சிறுவர் சிறுமியர் ஆரஞ்சு கலரில் ஐந்து ரூபாய் குளிர் கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்கள்..!! ஆண்கள் கால்சட்டை தெரியுமாறு வெள்ளை வேஷ்டியை ஏற்றிக் கட்டிக்கொண்டு, பீடி புகைத்தார்கள்.. கடைகளில் நின்று சர்பத் குடித்தார்கள்..!! பெண்கள் கோவிலுக்கு முன்பாக கூடியிருந்தார்கள்.. பரந்து விரிந்திருந்த மைதானத்தில், மூன்று கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இன்ஸ்டன்ட் அடுப்புகளில்.. விறகு செருகிக் கொண்டிருந்தனர்.. எரியூட்டினர்.. பொங்கல் பானையில் குழவையிட்டபடியே அரிசியிட்டனர்..!!

அசோக்கின் குடும்பமும், திவ்யாவின் குடும்பமும் அருகருகே பொங்கலிட தயாராகிக் கொண்டிருந்தார்கள். அசோக் குடும்பத்தில் அவனுடைய அம்மாவும், திவ்யாவின் குடும்பத்தில் சித்ராவும் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்க, அசோக்கின் அப்பா, திவ்யாவின் அப்பா, கார்த்திக் மூவரும் ஏதோ ஒரு பிரச்னை பற்றி சூடாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அசோக் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் இருந்தான். திவ்யா பாவாடை தாவணியில் பாந்தமாக நின்றிருந்தாள். இருவரும் ஏதோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். ‘அம்மனுக்கு பொங்கல் வைக்க நேரமாகிவிட்டபடியால்.. ஆங்காங்கே இருக்கும் ஊர் பொதுமக்கள்..’ என்று நிமிடத்துக்கு ஒருமுறை, ஒரு பையன் ஒலிப்பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தான்.

“என்ன இஞ்சினியர் மச்சான்.. நல்லாருக்கீகளா..?” அசோக்கை கடந்து சென்ற வளர்மதி என்ற ஒரு உறவுக்காரப்பெண் கேட்டாள்.

“ம்ம்.. நல்லாருக்கேன் வளர் மதினி.. நீங்க எப்படி இருக்கீக..?”

“எங்களுக்கென்ன.. ஏதோ இருக்கோம்..!! என்னைக்கு வந்தீக ஊர்ல இருந்து..?”

“நேத்து காலைல மதினி..”

“சரி சரி.. ரொம்ப நேரம் வெயில்ல நிக்காதீக.. அப்புறம் வாடி வதங்கிப்போய்.. இஞ்சினியர் மச்சான், சுக்குனியர் மச்சானாயிட போறீக..!!” அவள் கிண்டலாக சொல்ல,

“ஹாஹா..!! நாலு புள்ளை பெத்தப்புறமும் நக்கலு மட்டும் உங்களுக்கு கொறையலையே மதினி.. உங்களை எல்லாம் கட்டிக்கிட்டு எங்க அண்ணன் எப்டித்தான் குடும்பம் நடத்துறாரோ..?”

அசோக் சொல்லிவிட்டு சிரித்தான். இப்போது அசோக்கின் அம்மா, அவனுக்கு சப்போர்ட்டாக வந்தாள்.

“அடிப்போடி.. கிறுக்கச்சி மவளே..!! எம்புள்ளைக்கு என்னடி.. எவ்வளவு வெயில் அடிச்சாலும்.. தங்கக்கட்டி மாதிரி சொலிப்பான்..!!”

“ஆத்தாடி..!! தங்கக்கட்டியாம்ல இவுக புள்ள..? தங்கக்கட்டியா இருந்தா ரெண்டு தொங்கட்டமா செஞ்சு காதுல மாட்டிக்கங்கத்தை..!!” வளர்மதி தூரமாக சென்று நின்று, கத்திவிட்டு போனாள்.

உலை கொதித்ததும், அசோக்கின் அம்மா குழவையிட்டபடியே பொங்கல் பானையில் பச்சரிசியை கொட்டினாள். அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறினாள். அந்தப்பக்கம் சித்ரா வைத்த உலையும் இப்போது கொதிக்க ஆரம்பித்தது. அரிசியிட அவள் தயாராகும்போது, அவளுடைய மாமனார் தடுத்தார்.

“இரும்மா.. திவ்யாவை எங்க.. ஆளைக்காணோம்..?”

உடனேதான் அசோக் அருகில் திரும்பி பார்த்தான். அவனோடு சேர்ந்து அனைவரும் அவளை தேடினார்கள். திவ்யாவை எங்கும் காணவில்லை..!!

“இங்கதான மாமா இருந்தா.. எங்க போனான்னு தெரியலையே..?” அசோக் குழப்பமாக சொன்னான்.

“அவ எங்க போனாளோ..? நேரம் ஆயிட்டு இருக்கு மாமா..!!” சித்ரா அவசரப்படுத்த,

“இரும்மா.. அவ வந்து அரிசியை போடட்டும்..!! அசோக்.. நீ போய்.. அவ எங்க போயிட்டான்னு கொஞ்சம் தேடிப்பாரேன்..!!”

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சித்ரா தன் தம்பிக்கு அருகில் வந்து நின்று கொண்டாள். அவனுக்கு மட்டும் கேட்குமாறு சன்னமான குரலில் பொருமினாள்.

“ம்க்கும்.. காலைல இருந்து எல்லா வேலையும் பாத்தது நானு.. அரிசி போடுறது மட்டும் அவளா..? என்னமாத்தான் வருது..!! அப்படி என்ன பாசமோ.. ஆடுகாலி பொண்ணு மேல..!!”

“ப்ச்.. சும்மா பொலம்பிட்டு இருக்காதக்கா..!!” அக்காவிடம் முணுமுணுத்த அசோக்,

“இருங்க மாமா.. நான் போய் பாத்துட்டு வர்றேன்..!!”

என்று திவ்யாவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். கோயிலுக்கு முன்பு ஆங்காங்கே போடப்பட்டிருந்த உடனடி கடைகளில் தேடிப்பார்த்தான்.. இல்லை..!! கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தான்.. இல்லை..!! கோவிலுக்கு பின்புறம்.. அங்கேயும் இல்லை..!! ‘எங்கே சென்றிருப்பாள்..?? கால் செய்து பார்க்கலாம் என்றால்.. இவள் பேச்சை கேட்டு செல்போனை வேறு அக்கு அக்காக கழட்டிப் போட்டுவிட்டேன்..?’ அசோக் குழம்பினான்.

அப்போதுதான்.. எதேச்சையாக பார்வையை தூரமாக வீசியவனுக்கு.. தனியாக நின்றிருந்த அந்த வேப்ப மரமும், அதன் கீழே நின்றுகொண்டிருந்த திவ்யாவும் கண்ணில் தென்பட்டார்கள்..!! ‘இவள் எதற்கு அங்கே சென்று தனியாக நின்று கொண்டிருக்கிறாள்..?’ அசோக்கிற்கு விளங்கவில்லை. அந்த வேப்ப மரத்தை நோக்கி மெல்ல நடையை போட்டான். நெருங்கினான்..!!

திவ்யா அங்கே பதட்டமும், நடுக்கமுமாக கைகளில் வைத்திருந்த செல்போனின் பட்டன்களை அமுக்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய முகமெல்லாம் அழுது வடிந்து கொண்டிருந்தது. உதடுகள் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. கண்களில் ஒரு அதீத பயம்..!! அசோக்கை பார்த்ததும்,

“அசோக்..!!!!” என்று அலறிக்கொண்டே ஓடிவந்து அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“ஏய்.. திவ்யா.. என்னாச்சு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?”

“நான் தப்பு பண்ணிட்டேன்டா அசோக்.. தப்பு பண்ணிட்டேன்..”

“என்னம்மா சொல்ற..? எனக்கு எதுவும் புரியலை..!!”

“நீ சொல்ல சொல்ல கேட்காம.. நேத்து ஃபோன் பண்ணி.. திவாகர்ட்ட நல்லா சண்டை போட்டுட்டேன்..!! ‘உங்களுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருக்குறதை ஏன் எங்கிட்ட இருந்து மறைச்சீங்க.. ஏன் என்னை பொய் சொல்லி ஏமாத்துனீங்க.. இனிமே என்கூட பேசவே செய்யாதீங்க’ன்னு.. நல்லா கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டேன்..!!”

“ஐயோ.. ஏன் திவ்யா அப்படி செஞ்ச..? நான் தான் அவ்ளோ தூரம் சொன்னேன்ல..? அவர் கூட எப்போவும் போல பேசுன்னு..!!”

“என்னால மனசுல உறுத்தலை வச்சுக்கிட்டு.. வெளில சிரிச்சு அவர்கிட்ட பேச முடியலை அசோக்..!! என்னை பொய் சொல்லி ஏமாத்திட்டார்னு ஆத்திரம்.. அதான்..!!”

“சரி விடு..!! ஆனா.. அதனால இப்போ என்ன பிரச்னை..?”

“கொஞ்ச நேரம் முன்னாடி அவர்கிட்ட இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது..!!”

“என்னன்னு..??”

“ட்ரிங்க்ஸ்தான குடிக்க கூடாது.. பாய்சன் குடிக்கலாம்லன்னு..!!”

“ஷிட்..!!” அசோக் தலையில் கைவைத்துக் கொண்டான். Sunni Oombum Tamil New Sex Stories

– தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.