நெஞ்சோடு கலந்திடு – 17

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Kamaveri – அத்தியாயம் 19

அடுத்த நாள்..

“ஈவினிங் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும் ராஜன்..” என்று அசோக் காலையிலேயே சொல்லி வைத்திருந்தான். அவரும்,

“ஓ.. ஷ்யூர்.. ஷ்யூர்..!!” என்று தாராள மனசுக்காரனாய் பல்லிளித்தார். ஆனால் அசோக் கிளம்பும் நேரத்தில்,

“ப்ளீஸ் அசோக்.. இது ரொம்ப க்ரிட்டிக்கல் இஷ்யூ.. இதை மட்டும் ஃபிக்ஸ் பண்ணிட்டு போயிடேன்.. ப்ளீஸ்..!!”

என்று வெட்கமில்லாமல் கெஞ்சினார். அசோக்கும் வேறு வழியில்லாமல் அந்த வேலையை செய்ய வேண்டியதாயிற்று. ஆபீசை விட்டு கிளம்ப தாமதமாகி விட்டது. அவசரமாய் கிளம்பி பைக்கை எடுத்துக்கொண்டு, திவ்யாவுடைய காலேஜை நோக்கி பறந்தான்.

காலேஜை அடைந்து பேஸ்கட் பால் மைதானத்துக்கு விரைந்தான். அன்றொருநாள் அவன் பார்த்த அதே மைதானந்தான். ஆனால் அன்று போல் இல்லாமல், இன்று மைதானம் எண்ணெய்ப் பலகாரத்தில் ஈ மொய்த்த மாதிரி கொசகொசவென்று இருந்தது. தமிழ்நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்திருந்த மாணவ, மாணவியர் இறுதிப் போட்டியை காண ஆர்வமாகவும், உற்சாகமாகவும் காத்திருந்தனர். கேலரியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

போட்டி இன்னும் ஆரம்பமாகி இருக்கவில்லை. ஆனால்.. ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது..!! திவ்யாவின் கல்லூரிக்கும், கோவையை சேர்ந்த ஒரு மகளிர் கலைக்கல்லூரிக்கும் இடையிலான இறுதிப் போட்டி..!! இரண்டு அணியினரும் பேஸ்கட்பால் கோர்ட்டில் அணிக்கொரு பக்கமாக.. வட்ட வடிவில் குழுமியிருந்தார்கள்..!! திவ்யா தனது அணியினருக்கு மத்தியில் நடுநாயகமாக நின்றிருந்தாள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, மற்ற பெண்களுக்கு இறுதிக்கட்ட இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அசோக் கேலரியில் எங்காவது இடம் இருக்கிறதா என தேடிப் பார்த்தான். மொத்த இடத்திலும் இரண்டே இரண்டு பேர் மட்டும் அமரக் கூடிய அளவுக்கு ஒரு இடம் தென்பட்டது. அங்கே சென்று அமரலாம் என முடிவு செய்தான். கேலரியில் ஏறி.. கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து.. அந்த இடத்தை நெருங்கினான். அமரப்போகும் முன், கைகள் ரெண்டையும் வாயை சுற்றி வட்டமாக வைத்து,

“கமான் திவ்யாஆஆஆ…!!!!!!!!!!”

என்று உரத்த குரலில் கத்தினான். உடனே திவ்யாவும் திரும்பி பார்த்தாள். ஆரவாரத்துடன் அமர்ந்திருந்த அத்தனை பேரிலும், நின்று கொண்டிருந்த அசோக் மட்டும் திவ்யாவின் கண்களுக்கு தனியாக தென்பட்டான். உடனே திவ்யாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..!! அசோக் இப்போது தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட.. திவ்யாவும் தன் உடலுக்குள் புதிதாய் ஒரு நம்பிக்கை ஊற்று உடைப்பெடுத்தவள் மாதிரி.. தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள்.

அசோக் அமர்ந்து கொள்ள, ஓரிரு நிமிடங்களிலேயே போட்டி ஆரம்பமானது..!! கோவை அணி அதிரடியாக ஆரம்பித்தது..!! அந்த அணியின் கேப்டன் ஒருத்தி.. பொம்பளை டார்ஜான் மாதிரி இருந்தாள்.. அசால்ட்டாக நாலைந்து ஷூட்கள் போட.. கோவை அணி முன்னிலை வகித்தது..!! சென்னை அணியும் விடவில்லை.. திவ்யா அடுத்தடுத்து வளையத்துக்குள் பந்துகளை போட்டு, பாயின்ட் கணக்கை சமன் செய்தாள்..!! ஆட்டம் சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த போதுதான்.. அத்தனை நேரம் அசோக்குக்கு அடுத்து.. சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்தப்பெண்.. இப்போது அவனை நெருங்கி அமர்ந்தாள்..!!

“ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..” என்றாள் அசோக்கிடம் மெல்லிய குரலில்.

“யெஸ்..”

“நீங்க எந்த காலேஜ்..?”

“நானா..? நா..நான்.. அண்ணா யுனிவர்சிட்டி..!!” என்றான் சற்றே கிண்டலான குரலில்.

“என்ன படிக்கிறீங்க..?”

“படிக்கலைங்க.. அங்க வொர்க் பண்றேன்.. ஐ’ஆம் எ ப்ரொஃபசர்..!!”

“ப்ரொஃபசரா..? பாத்தா அப்படி தெரியலையே..?”

“ரொம்ப யங்கா இருக்கேன்ல..? அது என் தப்பில்லைங்க..!!”

“ம்ம்.. எங்க காலேஜ் பொண்ணை உங்களுக்கு எப்படி தெரியும்..?”

“யாரு..?? ஓ.. திவ்யாவா..? அ..அது.. அவ.. நான் கட்டிக்க போற பொண்ணு..!! ஐ லவ் ஹர்..!!”

“ஓஹோ.. இப்போ தெரியுது நீங்க யாருன்னு..? என்னடா எங்கேயோ கேட்ட நக்கல் குரல் மாதிரி இருக்கேன்னு நெனச்சேன்..!!” அந்தப்பெண் சொல்ல, அசோக் இப்போது பதறினான்.

“எ..என்னங்க சொல்றீங்க..?”

“அசோக்தான உங்க பேரு..?”

“ஆ..ஆமாம்.. நீங்க..?”

“ம்ம்…?? நானா..?? நான்தான் அந்த கல்லை முழுங்குன காக்கா..!!” அந்தப்பெண் முறைப்பாக சொல்ல,

“ஓ.. அ..அது.. அன்னைக்கு நீங்க.. அந்த ஃபோன்ல..?” அசோக் அசடு வழிந்தான்.

“ஆமாம்.. அதேதான்..!!”

“ஓகே ஓகே..!!! ம்ம்ம்.. திவ்யா எல்லாம் சொல்லிட்டாளா உங்ககிட்ட..? ஸாரிங்க..!!”

“பரவால..!!”

“ஆனா.. நீங்க சொன்னது தப்புங்க..!!”

“தப்பா..? என்ன தப்பு..?”

“அது.. கல்லை முழுங்குன காக்கா இல்ல.. கருங்கல்லை முழுங்குன காக்கா..!!” அசோக் சொல்ல அந்தப்பெண் மறுபடியும் முறைத்தாள்.

“ரொம்பதான் நக்கல் உங்களுக்கு..!! திவ்யா உங்களை பத்தி சொன்னது சரியாத்தான் இருக்கு.!!”

“என்ன சொன்னா..?”

“உங்களுக்கு வாய் மட்டும் இல்லைன்னா.. நாய் தூக்கிட்டு போயிடுமாம்..!!”

“ஹாஹா..!! அப்படியா சொன்னா..? வச்சுக்குறேன் அவளை..!! ம்ம்ம்.. அப்புறம்.. உங்க பேரு என்னனு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே..?”

“அது எதுக்கு உங்களுக்கு..?”

“என்னங்க நீங்க..? அன்னைக்கு கேட்ட மாதிரியே இன்னைக்கும் கேக்குறீங்க..?”

“ஏன் கேட்க கூடாதா..? இன்னைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்..?”

“அன்னைக்கு என்னை யார்னே தெரியாது.. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுனீங்க.. அதுல ஒரு நியாயம் இருந்தது..!! இன்னைக்குத்தான் நாம இவ்வளவு நெருங்கிட்டோமே..?”

அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். உடனே அசோக்,

“ஐயையோ.. நான் அந்த நெருக்கத்தை சொல்லலைங்க.. ஃபிரன்ஷிப்ல நெருங்கிட்டோம்னு சொன்னேன்..!! பேரை சொல்லுங்கங்க.. ப்ளீஸ்..” அசோக் இளிப்பாக கேட்க,

“ம்ம்ம்..?? அஞ்சு..!!” அந்தப்பெண் முறைப்பாக சொன்னாள்.

“ஐயயோ.. நான் டைம் கேக்கலைங்க.. உங்க பேரை கேட்டேன்..!!”

“ஆஆஆஆ..!!!!! என் பேர்தான் அஞ்சு..!!”

“அப்போ டைம்..??”

“ம்ம்.. அதுவும் அஞ்சுதான்..!!” அவள் மணிக்கட்டை திருப்பி பார்த்துவிட்டு சொன்னாள்.

“நீங்க ரொம்ப வெவரங்க.. வேற யார்கிட்டயாவது நீங்க டைம் கேட்டா தப்பா சொல்லுவாங்கன்னு.. நீங்களே கைல வாட்ச் கட்டிருக்கீங்க..!!”

“என்ன சொல்றீங்க நீங்க..? எனக்கு புரியலை..!!”

“ஆமாம்.. டைம் என்னன்னு அவங்ககிட்ட கேட்டு பாருங்க.. அஞ்சு அஞ்சுன்னு தப்பா சொல்வாங்க..!!”

“ஷ்ஷ்ஷ்ஷ்… அப்பாஆஆஆ..!!! உங்க மொக்கை தாங்க முடியலை..!! என்னை ஆளைவிடுங்க.. நான் மேட்ச் பாக்குறேன்..!!”

இருவரும் பேச்சை குறைத்துக் கொண்டு, மேட்சை பார்க்க ஆரம்பித்தார்கள். கை தட்டி சென்னை அணியை உற்சாகப் படுத்தினார்கள். ஆட்டம் விறுவிறுப்பாகவே சென்றது. கோவை அணியில் மூன்று பெண்கள் நன்றாக விளையாடினார்கள். சென்னை அணியில் திவ்யாவை தவிர மற்ற எல்லாப் பெண்களும் சொதப்பினார்கள். பாதி நேரம் முடிந்த நிலையில் 32 – 27 என, கோவை அணியின் கையே ஓங்கியிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ஓய்வு எடுக்கையில் திவ்யா, கேலரிப்பக்கம் பார்வையை வீசினாள். அசோக்கும் அவளுடைய தோழி அஞ்சுவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, மகிழ்ச்சியாக அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.

இடைவேளைக்கு அப்புறம் ஆட்டம் இன்னும் சூடுபிடித்தது. இந்த முறை கோவை அணியின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. திவ்யாதான் சென்னை அணியின் கீ ப்ளேயர் என்பதை புரிந்து கொண்டு, அவளை ப்ளாக் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். அவளுடைய கைக்கு பந்து போவதை அரும்பாடுபட்டு தடுத்தார்கள். விளைவு.. கோவை அணியின் ஸ்கோர் மளமளவென உயர.. சென்னை அணியின் ஸ்கோர் மந்தமாகியது..!!

“அச்சச்சோ.. என்னங்க இது..? ஊத்திக்கும் போல இருக்கே..?” அஞ்சு அசோக்கிடம் கவலையாக சொன்னாள்.

“எனக்கு நம்பிக்கை இருக்குங்க.. திவ்யா விடமாட்டா.. பட்டாசு கெளப்புவா பாருங்க..!!” சொன்ன அசோக் எழுந்து ‘கமான் திவ்யா..!!’ என்று ஒருமுறை கூவிவிட்டு அமர்ந்தான்.

“எனக்கென்னவோ நம்பிக்கையே போச்சு.. ’54-38′.. ரொம்ப கஷ்டங்க..!!”

“ப்ச்.. திவ்யாவால முடியாதது எதுவும் இல்ல.. நீங்க வேணா பாருங்க..!!”

அசோக் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் சொல்ல, அஞ்சு அவனுடைய முகத்தையே ஒரு சில வினாடிகள் வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் குரலில் ஒருவித ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.

“உங்களுக்கு திவ்யாவை ரொம்ப பிடிக்குமா..?”

“ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஏன் கேக்குறீங்க..?”

“இல்ல.. அவளை லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்லாம்..”

“ஐயையோ.. அது சும்மா சொன்னேங்க..!! நீங்க யார்னு தெரியாம..”

“ம்ம்.. அதான பார்த்தேன்..!! அப்டி ஏதாவது இருந்திருந்தா திவ்யா எங்கிட்ட சொல்லிருப்பாளேன்னு நெனச்சேன்..!!”

“இல்லைங்க.. அது வெளையாட்டுக்கு சொன்னேன்.. அவகிட்ட போட்டு கொடுத்துடாதீங்க..!!”

“ஹாஹா..!! என்ன.. அவளுக்கு எப்படி பயப்படுறீங்க..? ம்ம்ம்ம்.. கவலைப்படாதீங்க.. அவகிட்ட எதுவும் சொல்லலை.. நீங்க வெளையாட்டுக்குத்தான் சொன்னீங்கன்னு எனக்கு புரிஞ்சது..!!”

“தேங்க்ஸ்..!!”

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா ஒரு த்ரீ ஷூட் போட, மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அசோக் எழுந்து விசில் அடித்தான். ஆட்டம் பரபரப்பான இறுதி நிமிடங்களை எட்டியது. திவ்யா ஆடுகளத்தில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். ஒற்றை ஆளாக தன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினாள். பம்பரமாக சுழன்றாள். பந்துகளை கைப்பற்றி வளையம் நோக்கி வீசி, பாயிண்டுகளாக மாற்றினாள். தனது அணித்தோழிகளுடன் கை தட்டிக் கொண்டு ஓடினாள்..!! ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில் அவள் அடுத்தடுத்து இரண்டு த்ரீ ஷூட் போட.. இப்போது சென்னை அணி முன்னிலை வகித்தது..!!

இன்னும் ஒரே நிமிடம்தான்..!! சென்னை அணி ஐந்து பாயிண்டுகள் அதிகமாக இருந்தது..!! அந்த அணி வெல்லப் போவது உறுதி என்று ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆராவாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போதுதான் அது நடந்தது..!!

திவ்யாவின் கையில் பந்து கிடைக்க, அவள் எதிர் அணியின் போஸ்ட் நோக்கி நகர்ந்தாள். அவளை கோவை அணியின் கேப்டன் அந்த டார்ஜான் இரு கைகள் விரித்து வழி மறித்தாள். அவளிடம் இருந்து அழகாக தப்பித்த திவ்யா மேலும் முன்னேற.. எதிரணி கேப்டன் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றாள். அதற்குள் திவ்யா கூடையை நெருங்கியிருக்க, வேகமாக அவள் பின்னால் ஓடிவந்த அந்தப்பெண் திவ்யாவின் முதுகைப் பிடித்து அப்படியே அதிக பலத்துடன் தள்ளிவிட்டாள்.

திவ்யா தடுமாறிப் போனாள். பந்து அவளுடைய கையை விட்டு எங்கோ பறந்து சென்றது. அவளுடைய ஷூ கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ள.. பேலன்ஸ் செய்ய இயலாமல்.. ஓடியவாக்கிலே சென்று.. பேக்போர்ட் போஸ்டிலேயே போய் ‘நச்ச்..!!’ என்று மோதினாள்..!! அவளுடய நெற்றி போஸ்ட்டில் சென்று முட்டியது. முட்டிய வேகத்தில் திவ்யா, மூச்சு பேச்சு இல்லாமல்.. ‘சொத்த்த்..!!’ என்று தரையில் விழுந்தாள்..!!

அவ்வளவுதான்..!! மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனது..!! யாரோ ஒரு பெண் மட்டும் ‘ஓஓஓஓஓவ்வ்வ்..!!’ என்று பெரிதாக அலறினாள்..!! அசோக் நடந்ததை நம்பமுடியாதவனாய்.. பதறிப்போய் எழுந்தான்..!! திவ்யாவுடைய அணித்தோழிகள் அவளை நோக்கி ஓட.. அசோக் கேலரியை விட்டு குதித்து இறங்கினான்..!!

“திவ்யா…!!!” அசோக்கின் அலறல் தனியாக ஒலித்தது.

அதற்குள் திவ்யாவின் தோழிகள் அவளை சூழ்ந்திருக்க, அசோக் அவர்களை விலக்கிக்கொண்டு உள்ளே புகுந்தான். தரையில் வீழ்ந்து கிடந்த தன் தேவதையை கைகளில் அள்ளி எடுத்தான். திவ்யா மயங்கிப் போயிருந்தாள். அவளுடைய நெற்றி உடைந்து உதிரத்தை கொப்பளிக்க ஆரம்பித்திருந்தது.

“திவ்யா.. திவ்யா.. கண்ணைத் தொறந்து பாரு திவ்யா..”

அசோக் அவளுடைய கன்னத்தில் ‘பட் பட் பட்’ என தட்டினான். அதற்குள் இப்போது அந்த அஞ்சுவும் ஓடி வந்து அவளை இன்னொரு பக்கமாக தாங்கி பிடித்தாள். தனது காதல் மகாராணி.. தன் கைகளிலே.. நெற்றியில் குருதி ஓட… இமைகள் மூடிய விழிகளோடு.. பரிதாபமாய் கிடக்க.. அசோக்குடைய இதயம் இப்போது வெடித்து விடும்போல் வலித்தது.. அவனையும் அறியாமல் அவனது கண்கள் உடைப்பெடுத்து நீரை கொட்ட ஆரம்பித்தன..!! ‘திவ்யா.. திவ்யா..’ என அழுது அரற்றினான்..!! அந்த அஞ்சு இப்போது நிமிர்ந்து அசோக்கை பாவமாக பார்த்தாள்..!!

யாரோ முகத்தில் நீரை தெளிக்க, திவ்யாவின் மயக்கம் தெளிந்தது. இமைகளை மெல்லப் பிரித்தாள்..!! மயக்கம் தெளிந்து எழுந்ததுமே.. ‘எனக்கு ஒன்னும் இல்ல.. ஐ ஆம் ஆல்ரைட்.. ஐ கேன் ப்ளே..’ என்று, நெற்றியில் ரத்தத்துடன் எழ முற்பட்ட திவ்யாவை பார்த்து அசோக்கிற்கு அழுகை இன்னும் பீறிட்டது..!! அழுதான்..!! அதற்குள் அவளுடைய கோச் வந்து.. அவளை தட்டிக் கொடுத்தார்..!!

“இல்லம்மா.. நீ வெளையாண்டது போதும்.. இன்னும் ஒரு நிமிஷம்தான் இருக்கு..!!” என்றார்.

நல்லவேளையாக அவர்கள் கல்லூரியின் மருத்துவர் அங்கேதான் இருந்தார். அவர் வந்து முதலுதவி செய்தார். ‘ஒண்ணுல்ல.. சின்ன அடிதான்..’ என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவாறே, அவளுடைய காயத்தை சுத்தம் செய்து, பிளாஸ்திரி போட்டார்..!!

அந்தப்பக்கம் இரண்டு அணிகளின் கோச்சுகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்புறம் அந்த டார்ஜான் பெண்ணுக்கு வார்னிங் கொடுத்தார்கள். அவளை வெளியேற்றிவிட்டு வேறொரு பெண்ணை சேர்த்துக் கொண்டு.. ஆட்டத்தை தொடர்ந்தார்கள். அசோக்குடைய தோளில் ஆதரவாய் சாய்ந்தவாறே திவ்யா மீதி ஆட்டத்தை பார்த்தாள். அதற்கு மேல் நடந்த ஒருநிமிட ஆட்டத்தில் எந்த அணியும் ஸ்கோர் செய்யாமல் போக.. சென்னை அணி வென்றது..!!

அந்த வெற்றியை மொத்த கும்பலும் ஆரவாரம் செய்து கொண்டாடியது..!! யாராரோ வந்து திவ்யாவின் கையை குலுக்கி பாராட்டினார்கள்..!! திவ்யாவின் கோச் அவளுடய தலையை தடவிக்கொடுத்து வாழ்த்தினார்.. பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தார்..!! பார்த்தவர்..

“சரிம்மா.. நீ ரொம்ப நேரம் இங்க இருக்க வேணாம்.. ஆளாளுக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ வீட்டுக்கு கெளம்பு.. போய் நல்ல ரெஸ்ட் எடு..!! எதுக்கும் நாளைக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துக்கோ.. பில் க்ளெயிம் பண்ணிக்கலாம்.. சரியா..?” என்றார். Koothi Tamil Kamaveri

– தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.