நெஞ்சோடு கலந்திடு – 13

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Kamakathaikal – அறைக்குள் இருந்த டேபிளின் ஒரு மூலையில் கிடந்த அசோக்கின் செல்போன் பாட்டு பாடியது. கீழே செல்லும்போது அசோக் செல்போனை அறையிலேயே விட்டு சென்றிருந்தான். ஏமாற்றம் அடைந்தவளாய் திவ்யா காலை கட் செய்தாள். அப்புறம் ஏதோ யோசனை வந்தவளாய்.. சற்றே கிண்டலான குரலில் செல்வாவிடம் சொன்னாள்.

“ம்ம்.. பையன் கலக்குறான்.. பாட்டுலாம் பட்டாசா இருக்கு..”

“எதை சொல்ற..?”

“அசோக்கோட ரிங்டோன்..”

“ஹாஹா.. ஆமாமாம்.. இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்.. இந்த மாதிரி பாட்டுத்தான புடிக்குது..?” என்று செல்வா உளறிக்கொட்ட, திவ்யா திகைத்தாள்.

“என்ன செல்வாண்ணா சொல்றீங்க..? அசோக் லவ் பண்றானா..?”

உளறிக் கொட்டிவிட்டோம் என்று செல்வா இப்போது தாமதமாக புரிந்துகொண்டார். உடனே சுதாரித்துக்கொண்டு சமாளிக்க முயன்றார்.

“ஆ.. இல்ல இல்ல.. இல்லையே..!! நான் எங்க எப்படி சொன்னேன்..?”

“ப்ச்.. இப்போ சொன்னீங்களேண்ணா..?”

“என்ன சொன்னேன்..?”

“இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்..’ அப்டி சொன்னீங்களே..?”

“அப்டியா சொன்னேன்..? இல்லையே.. இந்தக்காலத்து பசங்களுக்குலாம்னு சொல்லிருப்பேன்..”

“இல்ல இல்ல.. நீங்க அப்படி சொல்லல..”

“அப்டித்தான்மா சொன்னேன்..”

“அட இல்லண்ணா.. நீங்க எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிறீங்க..”

“ஐயோ இல்லம்மா.. நான் ஏன் மறைக்க போறேன்..?”

“ப்ச்.. பொய் சொல்லாதீங்க செல்வாண்ணா.. உண்மையை சொல்லுங்க.. அவன் யாரையாவது லவ் பண்றானா..?”

“அடடடா.. எனக்கு தெரிஞ்சா சொல்லிட மாட்டனா..? இதோ.. அசோக்கே வந்துட்டான்.. அவன்கிட்டேயே கேட்டுக்க நீ.. என்னை ஆளை விடு..”

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அசோக் உள்ளே நுழைய, இப்போது திவ்யா செல்வாவை விட்டுவிட்டு அசோக்கிடம் திரும்பி பாய்ந்தாள்.

“டேய்.. சொல்லுடா..!! நீ யாரையாவது லவ் பண்றியா..?”

அசோக் திக்கித்துப் போனான். உள்ளே நுழைந்ததுமே இந்த மாதிரி ஒரு கேள்வியை, அதுவும் திவ்யாவிடம் இருந்து.. அவன் எதிர்பார்க்கவே இல்லை..!! எதுவும் புரியாமல் செல்வாவை பார்த்தான். அவர் ‘உளறி கொட்டிட்டேன்.. எப்படியாவது சமாளி..’ என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு, திவ்யாவுக்கு தெரியாமல் இவனுக்கு சைகை செய்தார். அதற்குள்ளாகவே பொறுமை இல்லாமல் திவ்யா கத்தினாள்.

“கேக்குறேன்ல..? சொல்லுடா.. நீ யாரையாவது லவ் பண்றியா..?”

“ப்ச்.. இல்லை திவ்யா..”

“எங்க.. என் மேல ப்ராமிஸ் பண்ணு..” திவ்யா அசோக்கின் கையை பிடிக்க, அவன் பதறிப்போய் உதறினான்.

“ஐயோ.. என்ன இது.. விடு திவ்யா..”

“அப்போ.. நீ யாரையோ லவ் பண்ற..?”

“ஆ..ஆமாம்..”

“இதை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லல..?”

“ச்சை.. கத்தாதடி..!! நீ வா.. நாம வெளில போய் பேசலாம்..”

அசோக் அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான். அவளை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் தெரிந்த படியேறி இருவரும் மொட்டை மாடியை அடைந்தார்கள். அறையில் கேட்ட கேள்வியை திவ்யா இப்போது மீண்டும் கேட்டாள்.

“ம்ம்.. இப்போ சொல்லு.. நீ லவ் பண்ற மேட்டரை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து மறைச்ச..?”

“ப்ச்.. மறைக்கனும்லாம் இல்ல திவ்யா..!! சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. அதுக்குள்ளே நீ உன் லவ் மேட்டரை சொல்லி.. அதுல பிரச்னையாகி.. அப்புறம் சொல்ல எனக்கு சான்ஸ் கிடைக்கலை..!!” அசோக் இதமான குரலில் சொல்ல, திவ்யா இப்போது சற்றே சமாதானம் அடைந்தாள்.

“ம்ம்ம்… ஓகே… பொழைச்சுப் போ..!! சரி.. எப்போ உன் ஆளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்க போற..?”

“அம்மா தாயே.. இது ஜஸ்ட் ஒன்சைட்..!! மொதல்ல டபுள் சைட் ஆகட்டும்.. அப்புறமா உனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்கிறேன்..”

“அட்லீஸ்ட் அவங்க பேராவது சொல்லேன்..”

“அது எதுக்கு உனக்கு..?”

“அடப்பாவி.. என்கிட்டயேவா..?” திவ்யா முறைக்க,

“ஹஹாஹஹாஹஹாஹஹா…!!” அசோக் எளிறுகள் தெரிய சிரித்தான்.

“சிரிக்காத..!! அப்போ அவங்களும் உன்னை லவ் பண்ற வரைக்கும்.. அவங்களை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?”

“என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு..?”

“அவங்க யாருனு சொல்லு..”

“ம்ம்.. அவ ஒரு லூசு..”

“என்ன பண்றாங்க..?”

“லூசுத்தனமான வேலை எல்லாம் பண்ணுவா..”

“உன் லவ்வை அவங்ககிட்ட சொல்லிட்டியா..?”

“இல்ல.. அவளுக்கு புத்தி தெளியட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..”

“ஐயோ கடவுளே.. என்ன பதில்டா சாமி இது..?”

“பைத்தியக்காரத்தனமான பதிலா தோணுதா..? பரவால.. இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்..!! சரி.. நீ உன் மேட்டருக்கு வா.. என்ன விஷயமா வந்த..?”

“பாரேன்.. கடைசில நான் வந்த மேட்டரையே மறந்துட்டேன்..!! ம்ம்ம்.. ஆக்சுவலா உன்கிட்ட ஸாரி கேக்கலாம்னு வந்தேன்..”

“ஸாரியா.. எதுக்கு..?”

“நேத்து மிட்னைட் உனக்கு கால் பண்ணினேன்..”

“ம்ம்.. காலைல மிஸ்ட் கால்ல பார்த்தேன்..!! அதுக்குலாமா ஸாரி கேட்ப..?”

“ஐயோ.. அதுக்கு இல்லடா.. என்னை கொஞ்சம் பேச விடுறியா..?”

“சரி.. சொல்லு..”

“நேத்து நைட்டு அவருக்கு என் நம்பர் கொடுத்துட்டேன்.. அவரும் உடனே கால் பண்ணிட்டார்.. கொஞ்ச நேரம் பேசினோம்..” திவ்யா சற்றே குற்ற உணர்வுடன் சொல்ல, அசோக்கிடம் அவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் ஏனோ இப்போது பட்டென குறைந்தது.

“ஓ..!!”

“சாரிடா.. அவர் ரொம்ப கெஞ்சினார்.. என் குரலை கேட்கனும்னு..!! நான் உனக்கு கால் பண்ணினேன்.. நீ பிக்கப் பண்ணவே இல்ல.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.. உன்கிட்ட கேட்காமலே நம்பர் கொடுத்திட்டேன்..!! நான் நம்பர் கொடுத்தது தப்பா அசோக்..?”

“சேச்சே.. இதுல என்ன இருக்கு..?”

“ம்ம்.. அ..அப்புறம் இன்னொரு விஷயம்..” திவ்யா மீண்டும் தயக்கமான குரலில் சொன்னாள்.

“என்ன..?” அசோக் உதறலாக கேட்டான்.

“இந்த வாரம் எங்கயாவது நேர்ல மீட் பண்ணலாமான்னு கேட்டார்.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்..!!”

“ம்ம்..”

“நான் என்ன பண்ண அசோக்..? போய் மீட் பண்ணவா..?”

“ம்ம்.. போ.. போய் மீட் பண்ணு..!! நேர்ல பாத்து பேசினாத்தான அவரை பத்தி நீயும், உன்னை பத்தி அவரும் புரிஞ்சுக்க முடியும்..? இதுக்குலாமா என்கிட்டே பெர்மிஷன் கேட்டுட்டு இருப்ப..?” மனதுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே அசோக் சொன்னான்.

“அப்டி இல்லடா.. இத்தனை நாள் பரவால்ல.. சேட் மட்டுந்தான்..!! நேர்ல பாக்கனும்னதும்.. ஒரே உதறலாவே இருக்கு..!! நீ இருக்கேன்ற தைரியத்துலதான் நான் இருக்கேன்.. நீதாண்டா எனக்கு ஹெல்ப் பண்ணனும்..!!”

“நானா..? நான் என்ன பண்றது..?”

“எங்கே மீட் பண்றது.. என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது.. எப்படி அவர்கிட்ட பேசுறது..”

“ஐயோ.. அதுலாம் ஒன்னும் மேட்டரே இல்ல திவ்யா.. ஏதோ ஒன்னு..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“இல்லடா.. அவருக்கு புடிக்கனும்ல..?”

திவ்யா குறுக்கில் புகுந்து வெடுக்கென சொல்ல, அசோக் இப்போது அமைதியானான். அவளுடைய குழந்தைத்தனமான முகத்தையே சில வினாடிகள் பாவமாய் பார்த்தான். லேசாக புன்னகைத்தான். அப்புறம்..

“சரி.. நான் ஹெல்ப் பண்றேன்..” என்றான் சுரத்தே இல்லாத குரலில்.

“தேங்க்யூடா.. தேங்க்யூ வெரி மச்..”

உற்சாகமாக கத்திய திவ்யா அசோக்கை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இதமாக அணைத்துக் கொண்டான். அசோக்கிற்கு இப்போது இதயம் விரிசல் விடுவது மாதிரி ஒரு உணர்வு. திவ்யா தன்னிடம் இருந்து விலகிக் கொண்டே செல்கிறாள் என்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. ஒருவித விரக்தி மனோபாவம் அவனுள் பரவ ஆரம்பித்தது. அவனுடைய குரலிலும் அந்த விரக்தி தென்பட்டது.

“நானும் உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும் திவ்யா..”

“என்னடா..?”

“எனக்கு ஆன்சைட் போறதுக்கு ஒரு ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு..”

“வாவ்.. ரியல்லி..? எங்கே..?”

“ஜெர்மனி..”

“எவ்ளோ நாள்..?”

“மூணு வருஷம்..!!”

அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த திவ்யாவின் முகம், பட்டென சுருங்கிப் போனது. ஒரு இனம் புரியாத சோகம் ஒன்று அவளுடைய மனதை வந்து கவ்வியது மாதிரி இருந்தது. ஒரு வாரமோ, இரண்டு வாரமோ என்று எண்ணியிருந்தவள், மூன்று வருடங்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. அசோக்கின் முகத்தையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள். சோர்ந்து போன குரலில் கேட்டாள்.

“என்னடா சொல்ற..? மூணு வருஷமா..?”

“ம்ம்.. கொஞ்சம் அதிகமா கூட ஆகலாம்..”

“கண்டிப்பா போகனுமா அசோக்..?”

“அப்படி இல்ல.. போறியான்னு கேட்டுருக்காங்க.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்..”

“நீ என்ன சொல்லப் போற..?”

“இன்னும் டிஸைட் பண்ணல திவ்யா..”

இப்போது திவ்யா அவசரமாக சொன்னாள்.

“ப்ளீஸ் அசோக்.. நீ போக வேணாம்..!!”

“ஏன்..?”

“சொன்னா கேளேன்.. ப்ளீஸ்.. போக வேணாம்..!! நான் சொன்னா நீ கேட்பியா மாட்டியா..?”

“ஏன் போக வேணாம்னு சொல்லு..!! ஒருவேளை நான் போயிட்டா.. உன் லவ்க்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு யோசிக்குறியா..?”

“ச்சே.. என்ன பேசுற நீ..? என்னை என்ன அவ்ளோ செல்ஃபிஷாவா நெனச்சுட்ட..?”

“அப்புறம் என்ன..?”

“என்னன்னு எனக்கு சொல்ல தெரியலைடா. ஆனா உன்னை பிரியுறது.. நெனச்சு பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு.. அவ்ளோ நாள் என்னால உன்னை பார்க்காம இருக்க முடியாது..!! ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

திவ்யா பரிதாபமாக கெஞ்ச ஆரம்பிக்க, சற்று முன் இழந்த உற்சாகத்தை அசோக் இப்போது மீண்டும் பெற்றான். அவன் உடலுக்குள் ஏதோ புது ரத்தம் பாய்வது மாதிரி உணர்ந்தான். கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்த புன்னகை இப்போது மீண்டும் அவன் உதடுகளில் வந்து ஒட்டிகொண்டது. திவ்யாவின் தோள் மீது உரிமையாக கைபோட்டு, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“சரி.. உன்னை விட்டு எங்கயும் போகலை.. போதுமா..?” என்றான்.

“தேங்க்ஸ்டா..!!”

சொல்லிவிட்டு திவ்யாவும் அசோக்கின் தோளில் சுகமாக சாய்ந்து கொண்டாள்.

அத்தியாயம் 16

அந்த வார இறுதியில் ஒருநாள் திவ்யாவும் திவாகரும் நேரில் சந்தித்துக் கொள்வது என்று முடிவானது. ‘ஏதாவது காபி ஷாப்ல மீட் பண்ணிக்குங்க..’ என்று அசோக் கொடுத்த ஐடியாவைத்தான், திவ்யா திவாகருக்கு முன்வைத்தாள். அவனும் ஒத்துக் கொண்டான். அவளை சந்திக்க மிக ஆர்வமாக இருப்பதாக சொன்னான். இடையில் இருந்த நான்கு நாட்களில் திவ்யா அசோக்கை கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு வறுத்தெடுத்து விட்டாள்.

“என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது..? ஸாரி ஓகேவா..?”

“அதுலாம் வேணாம்.. உன் ஆளுக்கு புடிக்காது..”

“உனக்கு எப்படி தெரியும்..?”

“நானும் அவர் கூட சேட் பண்ணிருக்கேன்ல..? அவரோட டேஸ்ட் என்னன்னு ஓரளவு என்னால அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியுது..”

“ஓ..!! அப்போ நீ என்ன சஜஸ்ட் பண்ற..?”

“ஜீன்ஸ் டி-ஷர்ட்..!!”

“போடா.. எனக்கு ஜீன்ஸே பிடிக்காது..”

“உனக்கு புடிக்காட்டா என்ன.. அவருக்கு புடிக்கனுமா இல்லையா..?”

“ஆமாம்.. புடிக்கணும்..”

“அப்போ போட்டுட்டு போ..!!”

“அது எப்படி அவருக்கு புடிக்கும்னு நீ இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற..?”

“ஒரு ஆம்பளை மனசு.. இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்..!!”

“ஆஆஆ…!! அப்பா… முடியலை..!!”

“ஹாஹா..!! ம்ம்ம்.. கொஞ்சம் கிளாமரா.. கொஞ்சம் செக்ஸியா.. போ..!! ஜீன்ஸ்ல.. பேன்ட் கூட வேணாம்.. குட்டியா ஷார்ட்ஸ் இருக்குல.. அது போட்டுட்டு போ.. உன் ஆளுக்கு ரொம்ப பிடிக்கும்..!!”

“அய்யே..”

“நல்லா மேக்கப் போட்டு போ.. லிப்ஸ்டிக் மறக்காத..”

“அதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காதுடா..”

“உனக்கு பிடிக்குமா இல்லையான்னு யார் கேட்டா இங்க..?”

“சரி.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.. போட்டுட்டு போறேன்..!! சரி.. எப்போ போகலாம்..?”

“எங்க..?”

“எனக்கு ட்ரஸ் செலக்ட் பண்றதுக்கு..”

“அடிப்பாவி.. அதுவும் நான்தான் பண்ணனுமா..?”

அன்று மாலையே ஒரு கடைக்கு சென்று திவ்யாவுக்கு உடைகள் வாங்கினார்கள். மாடர்னாக.. அணிந்து கொண்டால் கவர்ச்சியை கொப்பளிக்கும்.. நான்கைந்து செட் உடைகள்..!! ட்ரையல் ரூம் சென்று அணிந்து கொண்டு வந்து, அசோக்கிடம் காட்டி ஒப்பீனியன் கேட்டாள்.

“நல்லாருக்காடா..? ரொம்ப வல்கரா இருக்கோ..?”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. உனக்கு எது போட்டாலும் அழகாத்தான் இருக்கும்..!!” Trail Room Tamil Kamakathaikal

– தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.