ஆண்மை தவறேல் – 34

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Hot Sex Stories – அறைக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டதுமே டெய்ஸி, அசோக்கின் மடியில் இருந்து படக்கென எழுந்து கொண்டாள். வாசலில் நின்ற இருவரையும் பார்த்து திருதிருவென விழித்தாள். தந்தையையும் மனைவியையும் அத்தகைய சூழ்நிலையில் காணநேர்ந்த அசோக்கோ, அப்படியே தளர்ந்து போனான். தலையை பிடித்துக் கொண்டான். மஹாதேவனும், நந்தினியும் இன்னுமே தாங்கள் கண்ட காட்சியை நம்பமுடியாதவர்களாய் நின்றிருந்தார்கள். மஹாதேவன் தன் மகனையே எரித்துவிடுவது போல பார்த்துக் கொண்டிருக்க, நந்தினியோ விரிந்த விழிகளும், வாய் பொத்திய கையுமாக நின்றிருந்தாள்.

முதலில் சுதாரித்துக்கொண்டது டெய்ஸிதான்..!! அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்பது நல்லது அல்ல என்பதை உடனே புரிந்து கொண்டாள்…!! டேபிள் மீதிருந்த தனது ஹேன்ட் பேகை எட்டி எடுத்துக் கொண்டாள்..!! அதுவரை செய்ததெல்லாம் பத்தாது என்று..

“பை அசோக்.. நான் கெளம்புறேன்.. ஸீ யு லேட்டர்..!!”

என்று பதட்டமாய் சொல்லிவிட்டு.. அசோக்கின் நிலையை மேலும் கவலைக்கிடமாக்கிவிட்டு.. அந்த அறையை விட்டு கிளம்பினாள்..!!

மஹாதேவனுக்கும், நந்தினிக்கும்.. அசோக்கை பார்க்க பார்க்க.. ஒரு உச்சபட்ச கோபம், உடலெல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தது. அவன் செய்ததாக அவர்கள் கருதிய காரியம், அவர்கள் இவருடைய நெஞ்சையுமே குமுற செய்தது..!! இருவருக்குமே அவனுடைய பெண்கள் சகவாசம் பற்றி ஏற்கனவே தெரியும்.. இருந்தாலும் கண்ணுக்கேதிரே அதை காண நேரிடும்போது..???

கணவனுடைய மடியில் இன்னொரு பெண் அமர்ந்து முத்தமிடுவதை கண்ட அதிர்ச்சியில்.. நந்தினிக்கு மயக்கம் வரும்போல் இருந்தது.. நெஞ்சை அடைத்த துக்கத்தில் கண்கள் உடனே கலங்கிப்போயின..!! மஹாதேவனுக்கோ வேறுமாதிரியான கோபம்.. தான் கோவிலாக கருதிய அலுவலகத்தை, கூத்தடிக்கிற இடமாக மகன் மாற்றி விட்டானே என்று கட்டுக்கடங்காத ஆத்திரம்..!! அந்த ஆத்திரத்தை அடக்க முடியாதவராக அசோக்கை பார்த்து கத்தினார்..!!

“ச்ச்சை.. நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..?? இப்படி ஆபீஸுன்னு கூட பாக்காம அசிங்கமா..!!! உன்னல்லாம் புள்ளைன்னு சொல்லிக்கிறதே எனக்கு வெக்கமா இருக்குடா..!!”

“டாட் ப்ளீஸ்.. நா..நான் சொல்றதை கொஞ்சம்..” அசோக் பரிதாபமாக சொன்னான்.

“பேசாதடா.. என் மூஞ்சிலையே இனி முழிக்காத.. எக்கேடோ கெட்டு ஒழி..!! உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா.. தயவு செஞ்சு இனிமே நீ கூத்தடிக்க, இந்த ஆபீஸை யூஸ் பண்ணாத.. உன்னை கையெடுத்து கும்புட்டுக்குறேன்..!!” என்றவர் நந்தினியிடம் திரும்பி,

“வாம்மா.. போலாம்..” என்றார்.

நந்தினி அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், சில வினாடிகள் அப்படியே சிலை மாதிரி நின்றிருந்தாள். அவளுடய கலங்கிய கண்கள் இரண்டும், தலை கவிழ்ந்து நின்றிருந்த கணவனையே வெறித்துக் கொண்டிருந்தன. அப்புறம் விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே, மாமனாரிடம் மென்மையான குரலில் சொன்னாள்.

“நீங்க போங்க மாமா.. அவர் பசில இருப்பாரு.. நான் சாப்பாடு குடுத்துட்டு வர்றேன்..!!”

மருமகள் சொன்னதை கேட்ட மஹாதேவன், அதற்கு என்ன பதில் சொல்வது என்றுகூட புரியாமல் திகைத்தார். மகனையும் மருமகளையும் ஓரிரு முறை மாறி மாறி பார்த்தார். அப்புறம் அசோக்கை ஏறிட்டு முறைத்து, ‘ச்ச்சை….!!!’ என்று மீண்டும் ஒரு முறை வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

வெளியே வாசலுக்கருகிலேயே கற்பகம் தலை கவிழ்ந்தவாறு நின்றிருந்தாள். என்ன நடந்திருக்கிறது என்பதை அவள் முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய முகமே காட்டியது. உள்ளே மஹாதேவன் போட்ட சப்தத்திற்கு, ஆபீசில் ஆங்காங்கே ஆட்கள் எழுந்து நின்றிருந்தார்கள். இப்போது அவரை கண்டதும் அனைவரும் மீண்டும் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு, வேலை பார்ப்பது மாதிரி நடித்தார்கள்.

“உ..உள்ள நடந்த அசிங்கம்.. வெளில ஸ்ப்ரெட் ஆகாம.. கொ..கொஞ்சம் பாத்துக்கோ கற்பகம்..” இறுகிய குரலில் சொன்ன மஹாதேவன்,

“ம்ம்.. சரி ஸார்..” என்று கற்பகம் சொன்னதை கூட காதில் வாங்காமல் அங்கிருந்து கிளம்பினார்.

அறைக்கு உள்ளே.. தொண்டையை அடைக்கும் துக்கத்தை கட்டுப் படுத்திக் கொண்டு, சாப்பாட்டு கூடையை பிரித்தவாறே நந்தினி சொன்னாள்.

“வாங்க.. சாப்பிடலாம்..”

“ந..நந்தினி.. இங்க என்ன நடந்ததுன்னு..” அசோக் கெஞ்சும் குரலில் ஆரம்பிக்க,

“நான் உங்ககிட்ட இப்போ எதுவுமே கேக்கலையே..?” நந்தினி வெடுக்கென வெட்டினாள்.

“இ..இது.. சுத்தமா எ..எதிர்பார்க்காம..”

“ஆமாம்.. நாங்க திடீர்னு வந்து நிப்போம்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!!”

“ஐயோ நந்தினி.. உனக்கு நான் எப்படி சொல்லி..”

“மொதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசலாம்..!!”

நந்தினி பிடிவாதமாக இருக்கவும், அசோக் களைத்துப் போனான். அப்படியே சோர்ந்து போய் சேரில் அமர்ந்தான். நந்தினி அவனுக்கு உணவு பரிமாறினாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே.. ஒரு இறுக்கமான சூழ்நிலையுடனே.. அசோக் சாப்பிட்டான்..!! அவ்வப்போது மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான். அது சலனமற்று கிடப்பதை பார்த்து கலங்கினான். நந்தினியோ கண்களில் துளிர்த்த நீரை, அசோக் அறியாமல், அவ்வப்போது வேறுபக்கமாக திரும்பி துடைத்துக் கொண்டாள்.

ஒரு ஐந்து நிமிடங்கள்.. அசோக் அரைகுறையாக சாப்பிட்டு முடித்தான்..!! நந்தினி உணவு கொண்டு வந்த பாத்திரங்களை மீண்டும் கூடைக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். அசோக் மீண்டும் கெஞ்சலாக ஆரம்பித்தான்.

“ப்ளீஸ் நந்தினி.. நீயாவது நான் சொல்றதை கொஞ்சம் கேளு..”

“எனக்கு இப்போ கேக்குற மூடு இல்ல.. நான் கெளம்புறேன்..” சொல்லிவிட்டு அவள் நகர முற்பட,

“நந்தினி ப்ளீஸ்..” அசோக் அவளுடைய புஜத்தை எட்டி பற்றினான்.

“ப்ச்.. கையை விடுங்க..”

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபம், இப்போது நந்தினியிடம் வெளிப்பட்டது. கையை பறித்துக்கொண்டு, கணவனிடம் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, அங்கிருந்து நகர முயன்றாள். தான் அவ்வளவு தூரம் கெஞ்சியும் அவள் தன்னை உதாசீனப்படுத்தவும், அசோக்கால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரமாக பாய்ந்து சென்று நந்தினியின் முன் கை நீட்டி அவளை வழி மறித்தான்.

“சொல்றதை கேட்டுட்டு போடீ.. ப்ளீஸ்..!!” என்று கெஞ்சும் குரலிலேயே சொன்னான்.

“என்ன சொல்லணும்..??” நந்தினி இப்போது சீற்றமாக கேட்டாள்.

“இங்க பாரு.. டென்ஷனாகாத.. கொஞ்சம் பொறுமையா கேளு.. உனக்கு புரியும்..”

“இன்னும் நீங்க சொல்லி புரியிறதுக்கு என்ன இருக்கு.. அதான் நீங்க பண்ற காரியம் ஒவ்வொன்னும்.. சொல்லாமலே எல்லாத்தையும் புரிய வைக்குதே..? மாற மாட்டீங்கல்ல நீங்க.. மாறவே மாட்டீங்கல்ல..??” நந்தினி கத்த,

“கத்தாத ப்ளீஸ்..!!” அசோக் பதறினான்.

“ஏன்.. கத்தினா என்ன..?? இப்படி ஒரு காரியம் நீங்க பண்ணினா.. கத்தாம என்ன பண்றது..??”

“அ..அவசரப்படாத நந்தினி.. இ..இங்க இப்போ நடந்தது.. இட்ஸ் அன் ஆக்ஸிடன்ட்..!!”

“ஆமாம்.. உங்களுக்கு எல்லாம் ஆக்ஸிடன்ட்தான்..!! அன்னைக்கு மொட்டை மாடில நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்.. இன்னைக்கு ஆபீஸ்ல நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்..!! நீங்கபாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு இப்படி ஆக்ஸிடன்டா பண்ணிட்டு போங்க.. எதுக்க வர்ற நாங்கல்லாம் அடிபட்டு செத்துட்டு இருக்குறோம்..!!”

“ஹேய்.. அறிவில்லாம பேசாத..!!”

“எல்லாம் அறிவோடதான் பேசுறேன்..!! இத்தனை நாளா.. நைட்ல கெஸ்ட் ஹவுஸ்ல கூத்தடிச்சுட்டு இருந்தீங்க..!! இப்போ.. பட்ட பகல்ல ஆபீஸ்லேயே கூத்தடிக்க ஆரம்பிச்சுட்டீங்க..!! அவ்வளவுதான..?? இதுக்கெதுக்கு ஆக்ஸிடன்ட் அது இதுன்றீங்க..??”

“ஐயோ நந்தினி..!! நான் அவளை இங்க வர சொல்லல.. அவளா வந்தா.. வேலை வேணும்னு கெஞ்சினா.. தரமுடியாதுன்னு சொன்னதும் கொஞ்சினா..!! திடீர்னு என் மடில உக்காந்து.. நான் சொல்ல சொல்ல கேட்காம..”

“இதை என்னை நம்ப சொல்றீங்களா..??”

“நடந்தது அதுதான் நந்தினி.. நீ நம்பித்தான் ஆகணும்..!!”

“எப்படி நம்புறது..?? நீங்கதான் படுத்தவளுகளைலாம் போட்டோ புடிச்சு ஆல்பம் போட்டவராச்சே..?? ஆயிரம் பேரா அந்த கவுன்ட்டை மாத்தி காட்டுறேன்னு சவால் விட்ட ஆளாச்சே..?? எப்படி நம்புறது..??”

“ஐயோ.. அதெல்லாம் அப்போ.. இப்போ நான் அந்த மாதிரிலாம் நெனைக்கலை..!!”

“எப்படிங்க..?? எப்படி உங்களால இப்படி பேச முடியுது..?? கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பொண்ணை மடில வச்சு கொஞ்சிட்டு.. இப்போ அப்படிலாம் நெனைக்கலைன்னு வாய் கூசாம பொய் சொல்ல முடியாது..??” நந்தினி வீசிய வார்த்தைகள் அசோக்கிற்கு எரிச்சலை உண்டு பண்ணின.

“இங்க பாரு.. சும்மா கத்தாத..!! நடந்தது என்னன்னு நான் சொல்லிட்டேன்.. அதை நம்ப மாட்டேன்னு சொன்னா.. தப்பு உன் மேலதான்..!!” என்று சீற்றமாக சொன்னான்.

“ஓஹோ.. தப்பு என் மேலயா..?? பிரம்மாதம்..!! பண்ற தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு.. பழியை அழகா அடுத்தவங்க மேல தூக்கி போடுற ஆள்தான நீங்க..?? காலைல கூட உங்க திறமையை பாத்தேனே..?? பிரம்மாதம்..!!!!”

“ஓ..!! அப்போ தப்பெல்லாம் என் மேலதான்னு சொல்றியா..??”

“ஆமாம்.. எல்லா தப்பும் உங்க மேலதான்..!!” நந்தினி சீற்றமாக சொன்னாள்.

அவ்வளவுதான்..!! அசோக் பொறுமை இழந்தான்..!! அந்த டெய்சி உண்டாக்கிய எரிச்சல்.. அவள் ஏற்படுத்திய சூழ்நிலையால் அவனுக்கு கிடைத்த அவமானம்.. செய்யாத தவறுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஆத்திரம்..!! இவைகளோடு இரண்டு வாரங்களாக நந்தினி அவனிடம் காட்டிய உதாசீனம்..!! எல்லாம் ஒன்றாய் சேர்ந்துகொண்டு அவனை நிதானமிழக்க செய்தன..!! அவனும் நிதானமிழந்தான்..!! மனைவியை நெருங்கி, அவளுடைய முகத்துக்கு நெருக்கமாக தனது முகத்தை கொண்டு சென்று, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறு கேட்டான்.

“நல்லா யோசிச்சு சொல்லு.. நான்தான் எல்லா தப்பும் செஞ்சேனா..?? நீ எந்த தப்பும் பண்ணலையா..??” அவனுடைய கேள்வியில் சற்றே திகைத்துப்போன நந்தினி,

“நா..நான் என்ன தப்பு செஞ்சேன்..?” என்று தடுமாறினாள்.

“நல்லா யோசி நந்தினி.. நல்லா யோசி..!! நீ எந்த தப்புமே பண்ணலை..??”

அசோக்கின் கண்கள் நந்தினியையே குரூரமாய் பார்த்துக் கொண்டிருக்க, நந்தினியின் மூளையோ பின்னணியில் எதையோ யோசித்தது. அவளுடைய மூளை யோசித்து அவளுக்கு உரைத்த விஷயம், நந்தினியை உடனே பக்கென அதிர வைத்தது..!! அவளுடைய தவறாக அவன் எதை குறிப்பிடுகிறான் என்று ஒரு சில நொடிகளிலேயே அவளுக்கு புரிந்து போனது..!! அது புரிந்து போனதும்.. அதுவரை வீராவேசமாக பேசிக்கொண்டிருந்தவள்.. பட்டென வாயடைத்துப் போனாள்..!! ஆத்திரத்தில் முறுக்கிக் கொண்டிருந்த அவளுடைய உடல், ஆற்றல் தீர்ந்து விட்டாற்போல் உடனே தளர்ந்து போனது..!! அசோக்கையே ஒருமாதிரி நம்பமுடியாத பார்வை பார்த்தபடி.. உறைந்து போய் பரிதாபமாக நின்றிருந்தாள்..!!

அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித குரூர திருப்தி..!! அத்தனை நாளாய் அவனை நோகடித்துக் கொண்டிருந்தவளை.. இப்போது வாயடைக்க செய்தாயிற்று என்ற திருப்தி..!! சிகரெட் பாக்கெட் தேடி.. ஒரு சிகரெட்டை உருவி எடுத்து.. வாயில் பொருத்தி.. பற்ற வைத்துக் கொண்டான்..!! வளைய வளையமாய் புகை விட்டான்..!! செயலற்றுப்போய் நின்றிருந்த நந்தினி, இப்போது உடைந்துபோன குரலில் கேட்டாள்.

“நீங்க இப்படி ஆனதுக்கு.. நான் காரணம் இல்லைன்னு அன்னைக்கு சொன்னீங்க..??”

“ஆமாம்.. சொன்னேன்..!! உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அப்படி சொன்னேன்..!! ஆனா உனக்கு..??? அடுத்தவங்க மனசை பத்தித்தான் எந்த அக்கறையும் இல்லையே..?? எப்படி வேணா குத்தி கிழிக்கலாம்னுதான நெனைக்கிற..?? அதான்.. எனக்கும் வேற வழி இல்லை..!!”

“ஓ..!!”

நந்தினிக்கு தலை சுற்றுவது போலிருந்தது. தலையை பிடித்துக் கொண்டாள்.

“அன்னைக்கு என்ன சொன்ன..?? நான் தெனமும் ஒருத்தியோட படுத்து எந்திரிக்கிறவனா..?? பிரம்மாதம்..!! ஆமாம்.. நான் தெனமும் ஒருத்தியோட படுக்குறவன்தான்.. ஆனா நான் மொதமொதலா ஒரு பொண்ணை தேடிப்போக காரணமே நீதான்டி..!! அந்த ஆல்பத்துல உன் போட்டோவும் சேத்துக்கணுமா..?? சூப்பர்..!! ஆமாம்.. நான் ஆல்பம் போட்டேன்தான்.. ஆனா அப்படி ஒரு ஆல்பம் போட என்னை தூண்டுனதே.. நீ பேசுன வார்த்தைதாண்டி..!!”

“ம்ம்..”

நந்தினிக்கு இப்போது விழியோரம் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. அவளுடைய உதடுகள் படபடக்க, அவற்றை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்.

“இன்னைக்கு நான் உன் புருஷன் ஆயிட்டேன்னதும்தான இந்த குதி குதிக்கிற..?? கேவலமானவன், கேடுகெட்டவன்ற மாதிரி பேசுற..?? சப்போஸ்.. நாம லைஃப்ல திரும்ப மீட் பண்ணாமலே போயிருந்தா.. நீ ஆறு வருஷம் முன்னாடி சொன்ன வார்த்தையால.. நான் என்ன ஆனேன், எக்கேடு கெட்டு போனேன்னாவது ஒரு நிமிஷம் நீ யோசிச்சிருப்பியா..???”

“…………………………….”

நந்தினியிடம் இப்போது பேச்சு நின்று போனது. நெஞ்சு குமுற ஆரம்பிக்க, அழுதுவிடக் கூடாது என வாயை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

“என்னை பத்தி எல்லாம் சொல்லித்தான் நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படி இருப்பேன்னு கண்டிஷன் போட்டுத்தான்.. உன் கழுத்துல தாலியே கட்டுனேன்..!! நான் செஞ்ச ஒரே தப்புனா.. அது அன்னைக்கு மொட்டை மாடில நான் நடந்துக்கிட்டதுதான்.. அதுவும் என்னை அறியாமலே நான் செஞ்ச தப்பு.. உன்னோட உதாசீனம்தான் அந்த தப்புக்கு தண்டனைன்னா.. இட்ஸ் ஓகே.. நான் ஏத்துக்குறேன்.. எனக்கு ஒண்ணுல்ல..!!”

“…………………………….”

“ரெண்டு வாரமா நான் உன் நெனைப்பாவேதான் இருந்தேன்.. வேற எவ நெனைப்பும் என் மனசுல இல்ல.. எல்லாத்தையும் விட்ரலாமான்னு கூட நேத்துல இருந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..!! ஆனா நீ..??? நீ என்னை புரிஞ்சுக்கலை.. உனக்கு என் மேல உண்மையான அன்பு இல்ல.. இருந்திருந்தா.. இத்தனை நாளா என்னை உதாசீனப் படுத்திருக்கமாட்ட.. இங்க என்ன நடந்ததுன்னு நான் அவ்வளவு கெஞ்சி கூத்தாடி சொல்லியும்.. என்னை நம்பமாட்டேன்னு சொல்லிருக்க மாட்ட..!!”

“…………………………….”

“நல்லா சொல்றேன் கேட்டுக்கோ..!! நான் மாற மாட்டேன்.. இப்படியேதான் இருப்பேன்.. தெனமும் ஒருத்தியோட படுத்து எந்திரிப்பேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. போ..!!”

அசோக் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அமைதியானான். நந்தினி செய்வதறியாது, அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள். அசோக் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை அவளுடைய மனசாட்சியை உறுத்தியது. ‘இவன் சொல்வது உண்மைதானே..?? எல்லாவற்றையும் என்னால்தானே இவன் ஆரம்பித்தான்..?? என்னுடைய கணவன் என்பதால்தானே, இன்று இவன் இப்படி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சீறுகிறேன்..?? இல்லாவிட்டால் இவனை பற்றிய சிந்தனையே எனக்கு வந்திருக்காதே..?? இத்தனை நாள் என் பேச்சிற்கு இவனிடம் ஒரு மதிப்பு இருந்தது.. இனி அதுவும் இருக்காதே.. இனி நான் என்ன செய்ய போகிறேன்..??’

யோசிக்க யோசிக்க.. நந்தினியின் இதயம் வெடித்து சின்னாபின்னமாய் சிதறுவது மாதிரி அவளுக்கு தோன்றியது..!! எல்லா கதவுகளுமே சாத்தப்பட்டு, அவளது வாழ்க்கை இருண்டு போன மாதிரியாக ஒரு உணர்வு..!! சில வினாடிகள் சிலை மாதிரி நின்றிருந்த நந்தினி, அப்புறம் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள். தலையை குனிந்தவாறே, ஒரு எந்திரம் போல நடந்து சென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள்..!!

அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கற்பகம் அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கோ அப்போதுதான் சிகரெட்டை அணைத்துவிட்டு, இன்னும் படபடக்கும் இதயத்துடனே இருந்தான். கற்பகம் உள்ளே நுழைந்ததும் அவளை ஏறிட்டு பார்த்தான். அவளுடைய முகத்தில் கொப்பளிக்கும் ஆத்திரத்தை கண்டவன், சற்றே குழப்பத்துடன்

“சொ..சொல்லு கற்பு..!!” என்றான்.

“நீயென்ன மனுஷனா.. இல்ல மிருகமாடா..??” கற்பகம் சீறினாள்.

“ஹேய்.. உனக்கு என்னாச்சு இப்போ..??”

“பின்ன என்னடா..?? பண்ற தப்பெல்லாம் நீ பண்ணிட்டு.. ஒரு அப்பாவி பொண்ணை இப்படி நோகடிச்சு அனுப்புறியே..?? உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..??”

“யாரு.. அவ அப்பாவியா.. என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத..!!”

“தெரிஞ்சுதாண்டா பேசுறேன்.. நீ ஆபீசுக்குள்லயே கண்டவளோட கூத்தடிப்ப.. அதை பாத்து அவ கோவப்பட்டா.. அது தப்பா..?? கட்டுன புருஷனை இன்னொரு பொண்ணோட பாத்தா.. எந்த பொம்பளைக்கும் கோவம் வரத்தாண்டா செய்யும்..!!”

“ஐயோ.. என்ன கற்பு நீ..?? நீயும் என்னை நம்பலையா..??”

“போச்சு அசோக்.. உன் மேல இருந்த நம்பிக்கை போச்சு..!! எப்போ உன் பொண்டாட்டிகிட்ட ‘நான் இப்படித்தான் இருப்பேன்.. உன்னால என்ன செய்ய முடியும்டி’ன்னு எகத்தாளமா சொன்னியோ.. அப்போவே உன் மேல இருந்த நம்பிக்கை.. நல்ல அபிப்ராயம்.. எல்லாம் போச்சு..!! இத்தனை நாளா உன்னை என் ஃப்ரண்டா நெனச்சதுக்கு வெக்கப்படுறேன்.. இனி நான் ஜஸ்ட் உன் பி.ஏ..!! அவ்ளோதான்..!!”

கற்பகம் படபடவென பொரிந்து தள்ளிவிட்டு வெளியேற, அசோக் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தான். Orinaserkai Tamil Hot Sex Stories

– தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.