ஆண்மை தவறேல் – 24

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Sex Stories In Tamil – “உலகத்துல மாற்றம்ன்ற விஷயத்தை தவிர வேற எந்த விஷயமும் நிரந்தரம் இல்ல அசோக்..!! மனுஷ வாழ்க்கையும் அந்த மாதிரிதான்..!! ஒவ்வொரு காலகட்டதுலயும் மனுஷங்களும், அவங்க மனசும் மாறிக்கிட்டேதான் இருக்கும்..!!”

“ம்ம்.. தத்துவம்லாம் நல்லாத்தான் இருக்கு..!! உன் மனசு மாறுனதுக்கு காரணம் என்னன்னு சொல்லு புருசு..!!”

“நமக்குள்ள காண்டாக்ட் கட் ஆனப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு தெரியாதுல..?? நாலஞ்சு வருஷம் முன்னாடி.. லைஃப்ல ரொம்ப மோசமான ஸ்டேஜுக்கு போயிட்டேன் அசோக்..!! அரியர்ஸ்லாம் கிளியர் பண்ண முடியலை.. டிக்ரீ கம்ப்ளீட் பண்ண முடியலை.. எங்கயும் வேலையும் கெடைக்கலை..!! ஒரே ஃப்ரஸ்ட்ரேஷன்.. யாரை பாத்தாலும் ஒரே எரிச்சல்..!! தண்ணி தம்மொட ட்ரக்ஸ் பழக்கமும் சேர்ந்துக்கிச்சு.. போதைக்கு அடிமை ஆகி, ஒருமாதிரி.. வெறி புடிச்சவன் மாதிரி ஆயிட்டேன்..!! அம்மா திட்டுவாங்க.. அப்பா அடிப்பாரு.. தங்கச்சி என்னை பாத்தாலே மெரண்டு ஓடுவா..!! ஒருநாள் போதைல.. செலவுக்கு பணம் தரமாட்டேன்னு சொன்ன அம்மா மண்டைல தோசைக்கல்லை எடுத்து அடிச்சுட்டேன்..!! ஹாஹா.. அம்மா தலைல ரத்தத்தோட துடிச்சுட்டு கெடந்தப்போ.. நான் தட்டுல சோறு போட்டு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்..!! நம்ப முடியுதா உன்னால..?? ஹாஹா..!!!”

விரக்தியாக சிரித்தவாறே புருஷோத்தமன் கேட்க, அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. வாயில் வழியும் புகையுடன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அவனுடைய அமைதியை பார்த்த புருஷோத்தமன் அவனே தொடர்ந்தான்.

“வீட்ல எல்லாம் என்னை கை கழுவிட்டாங்க அசோக்.. இனி இவன் அவ்வளவுதான்னு முடிவே பண்ணிட்டாங்க.. என்னை வீட்டுக்குள்ள சங்கிலில கட்டி போட்டுட்டாங்க.. எல்லாம் சூனியமா தெரிஞ்சப்போதான் அவ வந்தா..!! புனிதா..!!!! பாவப்பட்ட என் வாழ்க்கையை புனிதமாக்க வந்தா..!! அவ எனக்கு தூரத்து சொந்தம்.. சின்ன வயசுல இருந்தே அவளுக்கு என் மேல பிரியம்.. ஹாஹா.. காலேஜ் படிக்கிற டைம்ல.. அவ ஒரு நாள் வெட்கப்பட்டுக்கிட்டே எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்போ.. அவ கன்னம் பழுக்குற அளவுக்கு பளார்னு அறைஞ்சிருக்கேன்..!! ஒருவேளை.. அதனாலதான் அவளுக்கு என்னை ரொம்ப பிடிச்சதோ என்னவோ..?? என் மேல அன்பு காட்டுனா.. பரிவு காட்டுனா..!! சாப்பாடு ஊட்டுவா எனக்கு.. நான் பொளேர்னு கன்னத்துல அறைவேன்.. அடிவாங்கிட்டு அடுத்த வாய் சோறு நீட்டுவா..!! ரொம்ப பொறுமை அவளுக்கு.. பொறுமைன்னு கூட சொல்ல முடியாது.. வைராக்கியம்.. என்னை ஒரு நல்ல மனுஷனா மாத்தி காட்டுறேன்னு வைராக்கியம்..!!”

“ம்ம்ம்..”

“ட்ரீட்மன்ட் கூட்டி போவா.. எப்போவும் என் கூடவே இருந்து என்னை கவனிச்சுக்குவா.. வெளி உலகத்தை காட்டி நல்லா உத்துப்பாருன்னு சொல்வா..!! கொஞ்சம் கொஞ்சமா நான் மாற ஆரம்பிச்சேன் அசோக்.. அவ என்னை மாத்துனா.. காதல்னா என்னன்னு எனக்கு புரிய வச்சா.. எப்படி வாழணும்னு என்னை உணர வச்சா..!! இந்த பெயிண்டிங்ஸ்.. இந்த திறமை எனக்குள்ள இருக்குறதே அவதான் எனக்கு கண்டு பிடிச்சு கொடுத்தா..!! நான் என் வொய்ஃப் பேர்ல ஓவியம் வரையுறதுல ஒரு காரணம் இருக்குது.. இன்னைக்கு எல்லாரும் என்னை ஆஹா ஓஹோன்னு பாராட்டுறாங்க.. கை தட்டுறாங்க..!! ஆனா.. அந்த பாராட்டுக்கு பின்னால ஒருத்தி பட்ட வேதனை இருக்குது.. அந்த கைதட்டுக்கு பின்னாடி ஒருத்தியோட கண்ணீர் இருக்குது.. இன்னைக்கு நான் ஒரு மனுஷனா உன் முன்னாடி நிக்கிறேன்னா.. அதுக்கு பின்னாடி அவ என் மேல வச்சுருக்குற காதல் இருக்குது..!! புனிதா.. ஷீ இஸ் மை வொய்ஃப்..!!”

சொல்லும்போதே புருஷோத்தமனின் குரலில் ஒரு அதீத பெருமிதம் ஒலிப்பதை அசோக்கால் உணர முடிந்தது. புருஷோத்தமன் சொல்லி முடிக்க, அசோக் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்தான். புருஷோத்தமனின் முகத்தையே சலனமில்லாமல் பார்த்தவன், அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் கேட்டான்.

“ஸோ.. நீ மாறிட்ட..??”

“ஹாஹா.. வேற என்ன பண்ண சொல்ற..?? எனக்காக இவ்வளவு பண்ணினவ என்கிட்டே இருந்து எதிர்பார்த்தது என்ன தெரியுமா..??”

“என்ன..??”

“எதுவுமே இல்ல..!!!! அவ என் மேல காட்டின அன்புக்கு பின்னாடி எந்த சுயநலமும் இல்ல..!! ஆனா அவ மனசுல இருந்த ஆசை.. எனக்கு மனைவி ஆகணும்னு..!! அந்த ஆசையை நான் புரிஞ்சுக்கிட்டேன்.. நிறைவேத்தி வச்சேன்.. இப்போ அவளுக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துக்குறேன்.. அவ்ளோதான்..!!”

“உ..உனக்கு இந்த மாற்றம் பிடிச்சிருக்கா புருசு..?”

“என்ன கேள்வி இது அசோக்..?? என்னை பாத்து பயந்தவங்க எல்லாம்.. எதிர வந்தா சிரிக்கிறாங்க.. கை குலுக்குறாங்க.. பைத்தியக்காரன்னு சொன்னவங்க எல்லாம் பாராட்டுறாங்க.. எல்லாத்துக்கும் மேல.. ‘எங்கயாவது போய் செத்து தொலைடா..!!’ன்னு சொன்ன அம்மா.. ‘சாப்பிட்டு வேலையை பாக்க கூடாதாப்பா..??’ன்னு பாசமா கேக்குறாங்க.. ஒரு மனுஷனுக்கு இதைவிட என்ன வேணும்..??”

“ம்ம்ம்.. சரிதான்..!!”

அசோக்கிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆறு வருடங்களில் புருஷோத்தமன் இந்த அளவுக்கு மாறிப் போயிருப்பான் என்று அவன் எதிர்பார்த்திரவே இல்லை. ஒரு பெண் அவனை மாற்றி மனைவியும் ஆகியிருக்கிறாள் என்பதை நம்ப முடியவில்லை. அசோக் அந்தமாதிரி பேச்சிழந்து போய் நின்றிருக்க, இப்போது புருஷோத்தமன் ஆரம்பித்தான்.

“சரி.. வந்ததுல இருந்து என்னை பத்தியே கேட்டுட்டு இருக்குற..? உன்னை பத்தி ஒண்ணுமே சொல்லலை..?” புருஷோத்தமன் புன்னகையுடன் கேட்க, அசோக்கும் இப்போது மெலிதாக புன்னகைத்தான்.

“ஹ்ஹ.. என்னை பத்தி என்ன இருக்கு..?”

“உனக்கு லைஃப்லாம் எப்படி போகுது..??”

“ரொம்ப சந்தோஷமா போகுது.. எந்த பிரச்னையும் இல்ல..!! பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு.. வருஷ வருஷம் டர்ன் ஓவர் அதிகமாகிட்டே போகுது..!!”

“ம்ம்.. கல்யாணம் ஆயிடுச்சா..??”

“ஆ..ஆயிடுச்சு..!!”

“வாவ்.. எப்போ..??”

“இ..இப்போதான்.. ஒரு ரெண்டு மாசம் இருக்கும்..”

“அப்படியா..?? ரொம்ப சந்தோஷம்..!! வாழ்த்துகள்டா அசோக்..!!”

“தேங்க்ஸ்டா..!! அ..அப்புறம்.. பொண்ணு யாருன்னு உனக்கு தெரியாதே..?” அசோக் குறும்பு புன்னகையுடன் கேட்க,

“யாரு..??” புருஷோத்தமன் ஆர்வமாக கேட்டான்.

“நந்தினி..!!”

“ஹேய்.. நெஜமாவா..??”

“ம்ம்.. எஸ்..”

“அடப்பாவி..!! உன்னை யாரும் லவ் பண்ண மாட்டான்னு சொன்ன பொண்ணையே, லவ் பண்ண வச்சிட்டியா..?? கில்லாடிதான் நீ..!!”

“ஹாஹா.. இல்லடா.. அது நீ நெனைக்கிற மாதிரி நடந்த மேரேஜ் இல்ல.. வேற மாதிரி.. அரேஞ்ட்..!!”

“ஓ.. குட்.. குட்..!! ம்ம்ம்.. அப்புறம்.. எப்படி இருக்குறா.. சுள்ளான்..??” கேட்டுவிட்டு புருஷோத்தமன் சிரிக்க,

“ஹாஹா.. நல்லா இருக்குறா..!!” அசோக்கும் சிரித்தான்.

அவன் சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான், வைப்ரேட்டரில் கிடந்த புருஷோத்தமனின் செல்போன் பதறியது. அவன் எடுத்து பேசினான்.

“சொல்லும்மா.. எங்க இருக்குற..?”

“……………………………..”

“ஓ.. வந்தாச்சா..?? அங்கேயே வெயிட் பண்ணு.. ஒரு நிமிஷத்துல வந்துர்றேன்..!!”

“……………………………..”

“இங்கதான்மா இருக்குறேன்.. இதோ வந்துர்றேன்..!!”

காலை கட் செய்த புருஷோத்தமன், அசோக்கை ஏறிட்டான். புன்னகையுடன் சொன்னான்.

“என் வொய்ஃப் வந்தாச்சு..!!”

“வொய்ஃபா..?? அவங்க இந்த நேரத்துல.. இங்க..??” அசோக் குழப்பமாய் கேட்டான்.

“ஓ.. உனக்கு தெரியாதுல..? எக்ஸிபிஷன் இன்னைக்கு லாஸ்ட் டே..!! இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு சின்னதா ஒரு பாராட்டு விழா..!! அதுக்காகத்தான் என் வொய்ஃப் வந்திருக்குறா..!!”

“ஓஹோ..??”

“வா அசோக்.. என் வொய்ஃபை உனக்கு இன்ரோட்யூஸ் பண்ணி வைக்கிறேன்..!!”

புருஷோத்தமன் அவசரமாய் முன்னால் நடக்க, அசோக் அவனை பின்தொடர்ந்தான். அந்த குறுகலான பாதையில் நடந்து ரிஷப்ஷனை அடைந்தார்கள். ரிஷப்ஷன் பகுதியை அடைந்ததுமே, அங்கே அசோக் கண்ட காட்சி அவனுக்கு உச்சபட்ச அதிர்ச்சியை கொடுத்து அப்படியே உறைய வைத்தது.

வெளியே போர்டிகோவில் நின்றிருந்த அந்த கார் நின்றுகொண்டிருந்தது. காருக்கு அருகே அந்த வீல்சேர். அந்த வீல் சேரில் பட்டுப்புடவையை சுற்றிக்கொண்டு, பால்நிறத்தில் சிரித்துக்கொண்டு அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். புனிதா..!!!! ‘கால்கள் செயலிழந்து போய்.. எல்லோரையும் போல எழுந்து இயல்பாக நடக்க முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண்தான் புருஷோத்தமனின் மனைவியா..??’ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை உள்வாங்கி அசோக் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, புருஷோத்தமன் புனிதாவை நெருங்கினான்.

“எங்க போயிட்டீங்க.. இவ்ளோ லேட்டு..?” புனிதா செல்ல கோவத்துடன் கேட்டாள்.

“ஃப்ரண்ட் வந்திருந்தாங்கம்மா.. பேசிட்டு இருந்தேன்..!!”

“ஃப்ரண்டா..? யாரு..?”

“இவர்தான்.. பேர் அசோக்.. என் காலேஜ் மேட்.. ஹாஸ்டல்ல நானும் இவரும் ஒரே ரூம்தான் !! ஆறு வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்குத்தான் மீட் பண்ணுறோம்..!!”

“ஓ.. அப்படியா..??” என்று வியந்த புனிதா அசோக்கிடம் திரும்பி,

“வணக்கம்ண்ணா..!!” என்று கைகூப்பினாள் கள்ளம் கபடம் இல்லாத புன்னகையுடன்.

“இவதான் அசோக்.. என் வொய்ப் புனிதா..!!” புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைக்க, அசோக்கும் தடுமாற்றமாய் புனிதாவுக்கு வணக்கம் சொன்னான்.

“சரி.. வா.. உள்ள போகலாம்..” சொன்ன புருஷோத்தமன் புனிதாவை கைகளில் தூக்கிக்கொள்ள முயன்றான்.

“ஐயோ.. விடுங்க.. நான் நடந்து வர்றேன்..” என்றாள் புனிதா வெட்கத்துடன்.

“பரவால்லம்மா.. வா.. நான் தூக்கிட்டு போறேன்..!!”

புருஷோத்தமன் புனிதாவை தனது கைகளில் அள்ளிக்கொண்டான். புனிதா அவனது கழுத்தை சுற்றி தனது கைகள் இரண்டையும் மாலையாக கோர்த்துக் கொண்டாள். மனைவியை ஏந்திக்கொண்ட புருஷோத்தமன் அசோக்கிடம் திரும்பி சொன்னான்.

“பங்க்ஷன் ஒரு அரை மணி நேரந்தான் அசோக்.. அப்புறம் டின்னரும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.. நீ இருந்து.. பங்க்ஷன் முடிஞ்சதும் எங்க கூட டின்னர் சாப்பிட்டுதான் கெளம்பனும்..”

“ஆமாண்ணா.. வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்..” புருஷனோடு சேர்ந்து புனிதாவும் அசோக்கிடம் கெஞ்சும் குரலில் சொல்ல,

“ம்ம்.. ஓகே.. இ..இருக்குறேன்..!!” அதிர்ச்சி முழுதும் விலகாதவனாகவே அசோக் சொன்னான்.

அப்புறம் புருஷோத்தமனின் பாராட்டு விழா முடிந்து, அவர்களுடன் அமர்ந்து ஒன்றாக டின்னர் சாப்பிட்டுவிட்டே அசோக் கிளம்பினான். ஹோட்டலில் இருந்து அவன் கிளம்பியபோது இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. புருஷோத்தமனும், புனிதாவும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து விலகாமலே, அசோக் ஈஞ்சம்பாக்கம் நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனதில் என்னென்று புரியாத ஒருவகை குழப்பம்..!! ஸ்டியரிங் பிடித்திருந்தவன் அவ்வப்போது தன் தலையை திருப்பி, தனக்கு பக்கத்து சீட்டில் இருந்த அந்த பொருளை பார்த்துக் கொண்டான்.

பாராட்டு விழாவில் இறுதியில் புருஷோத்தமன் பேசிய வார்த்தைகள் அசோக்கின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.

“இன்னைக்கு என் திறமைக்கு கிடைச்சிருக்குற இவ்வளவு பெரிய அங்கீகாரம்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ரொம்ப பெருமையா இருக்கு..!! உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லணும்.. என்னோட ஒவ்வொரு ஓவியங்களுக்கும் பின்னாடி.. ஒரு உயிருள்ள ஓவியத்தோட விலை மதிப்பில்லாத தியாகம் ஒளிஞ்சிருக்கு.. அந்த ஓவியம் என் மனைவி புனிதாதான்..!! என்னோட எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான்.. அவ இல்லைன்னா.. இன்னைக்கு நான் இங்க உங்க முன்னாடி இல்ல..!! ஐ’ஆம் வெரி வெரி ப்ரவுட் ஆஃப் மை வொய்ஃப்..!! அவ எனக்கு கெடைச்சதுக்கு நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!! தேங்க்ஸ் புனிதா.. தேங்க்ஸ் ஃபார் கமிங் இன் மை லைஃப்..!!”

‘இப்படி ஒரு மனிதன் மாறிப் போவானா..?? இவன் சொன்ன வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நான் என் வாழ்க்கை பாதையை நிர்ணயித்திருக்கிறேன்..!! இவன் என்னடாவென்றால்..?? இது எப்படி சாத்தியம்..??’ குழம்பிய அசோக் மீண்டும் விழிகளை சுழற்றி, பக்கத்து இருக்கையில் இருந்த அந்த பொருள் மீது பார்வையை வீசினான்.

இப்போது அசோக்கிற்கு வேறு சில வார்த்தைகள் காதில் ஒலித்தன. அவர்களோடு அமர்ந்து அவன் டின்னர் சாப்பிடும்போது, அந்த புனிதா வெள்ளந்தியாக அசோக்கிடம் சொன்ன வார்த்தைகள்.

“இவரு எல்லாம் ரொம்ப ஓவரா சொல்றாருண்ணா.. நான் என்ன அப்படி பெருசா பண்ணிட்டேன்..?? ஏதோ கொஞ்சம் ஆறுதலா பேசுவேன்.. பசில இருக்குறப்போ சாப்பாடு போடுவேன்.. அவரோட மைண்டை டைவர்ட் பண்ண ட்ரை பண்ணுனேன்.. அவ்ளோதான்..!! அவருக்கே மாறணும்னு ஆசை இருந்திருக்கு.. அதான் சீக்கிரமே அந்த ஸ்டேஜ்ல இருந்து வெளில வந்துட்டாரு..!! அப்புறந்தான் எனக்கும் ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா.. இவரு அதுக்கப்புறமும் என்னை கொஞ்ச நாள் காய விட்டாரு பாருங்க.. ஹாஹா.. என்னால மறக்கவே முடியாது.. இவருக்கு ரொம்பத்தான் கொழுப்பு..!! மனசுல இருக்குறதை எங்கிட்ட சொல்லவே இல்லண்ணா.. நல்லா சிரிச்சு பேசுவாரு.. பிரியமா நடந்துப்பாரு.. ஆனா என் மேல இருக்குற லவ்வை சொல்லவே இல்ல.. எனக்கு ஒரே கொழப்பமா இருக்கும்.. நானா சொல்றதுக்கும் எனக்கு தயக்கம்.. ஏற்கனவே சொன்னப்போதான் அறைஞ்சிட்டாரே..? இவரே ‘ஐ லவ் யூ..’ சொல்லிட மாட்டாரான்னு ஏங்குவேன்..!! ஆனா.. இவரு மொத மொதல்லா இவரோட காதலை எங்கிட்ட எப்போ சொன்னாரு தெரியுமா..?? எனக்கு ஆக்சிடன்ட்ல ரெண்டு காலும் போய்.. ஹாஸ்பிட்டல்ல படுத்து கெடக்குறப்போ.. அழுதுட்டே சொல்றாரு.. ‘ஐ லவ் யூ’ன்னு..!! யாருண்ணா சொல்வாங்க அப்படி..?? இவங்க வீட்டுல கூட கொஞ்சம் யோசிச்சாங்க.. ஏன்.. நான் கூட வேணாம்னு அழுது புரண்டு ஒரு வழி பண்ணுனேன்..!! ஆனா.. இவர் யார் பேச்சையும் கேட்காம, ஒத்தைக்கால்ல நின்னு.. ரெண்டு காலும் இல்லாத என் கழுத்துல தாலி கட்டுனாரு..!! யாருண்ணா செய்வாங்க அப்படி..?? நான்தாண்ணா இவர் கெடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!”

புருஷோத்தமனும், புனிதாவும் உதிர்த்த வார்த்தைகள் திரும்ப திரும்ப அசோக்கின் நினைவுக்கு வந்து போயின. அவனது மூளையில் பலவித குழப்ப அதிர்வுகளை ஏற்படுத்தி சென்றன. திருவான்மியூரில் சிக்னலுக்காக காரை நிறுத்தி காத்திருந்த போது, அசோக் மீண்டும் தன் தலையை திருப்பி பக்கத்து இருக்கையை பார்த்தான்.

பக்கத்து இருக்கையில் கவர் பிரிக்கப்பட்டு அந்த ஓவியம் இருந்தது..!! சற்றுமுன் புருஷோத்தமன் அசோக்குக்கு பரிசாக அளித்த அவனே வரைந்த ஓவியம்..!! புதுமணப்பெண் ஒருத்தி, உடலெங்கும் ஜொலிக்கும் நகைகளுடன், தலையில் சூடிய மல்லிகையுடன், புகுந்த வீட்டில் விளக்கேற்றுவது மாதிரியான ஓவியம் அது..!! விளக்கில் இருந்து கிளம்பிய வெளிச்சத்தை விட, அந்தப்பெண்ணின் முகத்திலும் சிரிப்பிலும் இருந்து கிளம்பிய வெளிச்சம், அந்த வீட்டையே ஒளிமயமாக்கிக் கொண்டிருக்க, பின்னணியில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தனர்..!!

அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க, அசோக்கின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.. காரணம் தெரியாத குழப்பம்..!! ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகம் பட்டென்று மாறி.. அந்த இடத்தில் நந்தினியின் முகம் தோன்ற.. தோன்றியதும் அசோக்கை பார்த்து விஷமமாக புன்னகைக்க.. அசோக் உடனடியாய் தன் பார்வையை அந்த ஓவியத்தில் இருந்து விலக்கிக் கொண்டான்..!!

அத்தியாயம் 19

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து..!! அது ஒரு நண்பகல் நேரம். இடம் அசோக்கின் அடையாறு ஆபீஸ்..!!

அசோக்கிற்கு எதிரே நந்தினி அமர்ந்திருந்தாள். தான் சமைத்து எடுத்து வைத்திருந்த மதிய உணவு ஐட்டங்களை, ஹாட் பாக்ஸ் திறந்து, டேபிள் மீது அடுக்கிக் கொண்டிருந்தாள். பசியில் இருந்த அசோக், நாவில் எச்சில் ஊற மனைவியிடம் கேட்டான்.

“இன்னைக்கு என்ன சமையல் நந்தினி..??”

“சாம்பார், ரசம், அப்பளம், பாவக்கா பொரியல்..!!”

“பாவக்காயா..??” அசோக் முகத்தை சுளித்தான்.

“என்னாச்சு.. மூஞ்சி ஏன் அப்படி போகுது..??”

“பாவக்கா எனக்கு பிடிக்காதே..”

“ஏன்..??”

“கசக்கும் நந்தினி..”

“நல்ல விஷயம் எல்லாம் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும்.. கசப்பு புடிக்காதுன்னா, நல்லதும் எதுவும் புடிக்காதுன்னு அர்த்தம்..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இப்போலாம் நீ எது பேசினாலும்.. பொடி வச்சே பேச ஆரம்பிச்சுட்ட..!! பாவக்கா கசக்கும்னு சொன்னதுக்கு.. இப்படி ஒரு பாடாவதி தத்துவம் தேவைதானா..?”

“ச்சே.. அப்டிலாம் ஒன்னும் இல்லைங்க.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. பாவக்கா கசப்பா இருந்தா என்ன.. அது உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா..? பசியை தூண்டும்.. பித்தத்தை குறைக்கும்.. வயித்துல இருக்குற பூச்சிலாம் சாகடிக்கும்.. கல்லீரலுக்கு ரொம்ப நல்லது..”

“அடச்சை.. போதும் நிறுத்து..!! வாய்க்கு ருசியா ஆக்கி போடுடின்னா.. வலம்புரி ஜான் மாதிரி அட்வைஸ் பண்ணிக்கிட்டு..??” அசோக் சலிப்பாக சொல்ல, நந்தினிக்கு சிரிப்பு வந்தது.

“ஹாஹாஹாஹா..”

“சிரிக்காத.. எடுத்து வை.. சாப்பிட்டு தொலைக்கிறேன்..”

அசோக் சட்டையின் கையை மடித்து விட்டுக்கொண்டே சொன்னான். நந்தினி கூடையில் இருந்த ப்ளேட்டை எடுத்து அசோக் முன்பு வைத்தாள். சாதத்தை கொட்டி, சாம்பாரை அள்ளி ஊற்றினாள். பொரியலை ஒரு கரண்டியில் எடுத்து வைத்தாள். அசோக் சாதத்தை பிசைவதற்காக கையை கொண்டு சென்றபோதுதான், அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. உடனே அசோக் தலையை நிமிர்த்தி வாசலை பார்த்தான். வாசலில் கற்பகம் கையில் ஒரு பேப்பருடன் நின்று கொண்டிருந்தாள். அசோக் சாப்பிட தயாராகி கொண்டிருப்பதை பார்த்ததும், தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என்று இப்போது தயங்கினாள்.

“ஓ.. ஸாரிடா.. சாப்பிட்டுக்கிட்டு இருக்கியா..??”

“இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலை கற்பு.. இனிமேதான்.. சொல்லு..”

“இல்ல.. நீ சாப்பிடு.. நான் அப்புறம் வர்றேன்..”

“பரவால.. சொல்லு.. என்ன விஷயம்..?”

“இ..இது.. அந்த புனே பார்ட்டிக்கு இதை ஃபேக்ஸ் அனுப்பனும்.. நீ ஒருதடவை பாத்து ஓகே சொல்லிட்டா.. அனுப்பிடலாம்..!!”

“சரி கொண்டா.. பாக்குறேன்..”

“இல்லடா.. நீ சாப்பிடு.. நான் போயிட்டு அப்புறமா வர்றேன்..”

“அட பரவால்லம்மா.. வா..!!”

கற்பகம் இப்போது தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கை நெருங்கியவள், கையிலிருந்த லெட்டரை அவனிடம் நீட்டினாள். அவனும் அதை வாங்கி மேலோட்டமாக பார்வையை வீசி, மேட்டரை சரி பார்க்க ஆரம்பித்தான். கற்பகம் இப்போது நந்தினியின் பக்கமாக திரும்பினாள்.

“ஹாய்..” என்றாள் ஒருவித ஸ்னேக புன்னகையுடன். நந்தினியும் பதிலுக்கு

“ஹாய்..” என்றாள் சற்றே இறுகிப் போன முகத்துடன்.

“நல்லா இருக்கீங்களா..?”

“ம்ம்.. நல்லாருக்கேன்..”

அவ்வளவுதான்…!! மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாதவள் போல, நந்தினி தலையை குனிந்து கொண்டாள். என்னவென்று புரியாத கற்பகமும் பார்வையை அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டாள். அதற்குள் அசோக் அந்த லெட்டரை சரிபார்த்து, அப்புறம் அதில் கையொப்பமும் இட்டு, கற்பகத்திடம் திரும்ப நீட்டினான். நீட்டியவன் புன்னகையுடன் கற்பகத்திடம் கேட்டான். Sunni Oombum Sex Stories In Tamil

– தொடரும்

ஆண்மை தவறேல் – 24

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.