இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.
Sex Stories In Tamil – அந்த அறை.. வீட்டிற்குள்ளேயே அமைந்திருக்கும் குட்டி நூலகம். அசோக் ஏதாவது படிக்கவேண்டும் என்றாலோ, அலுவலக சம்பந்தமாக வேலை என்றாலோ அங்கே வந்து அமர்ந்து கொள்வான். அங்குதான் இப்போது கௌரம்மா நந்தினியை அழைத்து சென்றாள். உள்ளே நுழைந்ததும் நந்தினியின் கையை விடுவித்து, அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த அந்த அலமாரியை நெருங்கினாள். அலமாரி திறந்து, ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு மேலே ஏறினாள். அலமாரியின் மேல் அடுக்கில் உயரமாய் செருகப்பட்டிருந்த அந்த ஆல்பத்தை உருவி எடுத்தபின் கீழே இறங்கினாள்.
நந்தினியை நெருங்கியவள் அந்த ஆல்பத்தை புரட்ட ஆரம்பித்தாள். நந்தினியோ படபடக்கும் இதயத்துடன் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தாள். ‘வேணாம்மா.. வேணாம்மா..’ என்று நந்தினி மிரட்சியாய் சொல்லிக்கொண்டிருக்க, கௌரம்மா அதை கண்டுகொள்ளாமல் ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். அது அசோக்கின் காலேஜ் ஆல்பம். காலேஜில் அவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு. அதற்குள் இருந்து தன் முகம் எந்த நேரமும் இப்போது வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்த நந்தினிக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது.
“ஆங்.. இதுதான் அந்தப்பொண்ணு ஃபோட்டோ..”
கௌரம்மா திறந்த ஆல்பத்தின் அந்த புகைப்படத்தை சுட்டிக்காட்ட, நந்தினி உச்சபட்ச பதற்றத்துடன் அந்த புகைப்படத்தின் மீது பார்வையை வீசினாள். அந்த புகைப்படம் அவளுடைய கண்ணில் பட்ட பின்பும் சில வினாடிகளுக்கு அந்த பதற்றம் அவளுடைய உடலுக்குள்ளேயேதான் குடியிருந்தது. அப்புறம் மெல்ல மெல்ல அவளுக்கு அந்த பதற்றம் குறைந்தது. உச்சபட்ச வேகத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது இதயமும் கொஞ்சம் கொஞ்சமாய் தன் வேகத்தை குறைத்தது. அத்தனை நேரம் அவஸ்தையாய் வெளிப்பட்ட அவளது சுவாசமும் அப்புறந்தான் சீரானது.
அந்தப்புகைப்படம் பேப்பர் ப்ரசண்டேஷனுக்காக அவர்கள் பெங்களூர் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும். பட்டையும், கொட்டையும், சோடாபுட்டி கண்ணாடியுமாய்.. பற்களை இளித்தவாறு அசோக் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க.. அவனுக்கு இரண்டடி இடைவெளி விட்டு நின்றிருந்த நந்தினியோ, கேமிராவை பாராமல் வேறு பக்கமாக திரும்பியிருந்தாள். அலை அலையாய் அவளுடைய கூந்தலே பிரதானமாக தெரிய, அவளது முகம் கொஞ்சமே கொஞ்சூண்டு தெரிந்தது. அதை வைத்து அவள் நந்தினிதான் என்று இந்த கௌரம்மா அல்ல.. யாராலுமே கண்டுபிடிக்க முடியாது..!!
எந்த மாதிரி சூழ்நிலையில் அந்த புகைபப்டம் எடுக்கப்பட்டது என்று நந்தினிக்கு இப்போது ஞாபகம் வரவில்லை. ‘எனக்கு தெரியாமலேயே இது எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. யாரிடமோ கேமராவை கொடுத்து அசோக் அந்த புகைப்படத்தை எடுக்க சொல்லியிருக்க வேண்டும்.. அதுதான்.. அவன் தெளிவாக போஸ் கொடுக்க, நான் எங்கேயோ பார்த்துக்கொண்டு நிற்கிறேன்..!! எஸ்.. அப்படித்தான் இருக்க வேண்டும்..!!’
“என்னம்மா நந்தினி.. இந்தப்பொண்ணு யார்னு தெரியுதா..??” கௌரம்மா கேட்டதும் நந்தினி கவனம் கலைந்தாள்.
“இ..இல்லைங்க.. தெரியலை..”
“நல்லா பாத்து சொல்லும்மா.. உன் கூட படிச்ச பொண்ணுதான்..”
“இதுல என்னத்த பாத்து சொல்றது.. அந்தப்பொண்ணோட தலை முடிதான் தெரியுது..”
“இல்லம்மா.. இங்க சைடுல பாரு.. மூஞ்சி தெரியுது பாரு..”
“ஐயோ.. அதை வச்சுலாம் என்னால கண்டுபிடிக்க முடியலை.. காலேஜ் முடிச்சு ஆறு வருஷம் ஆகி போச்சுல.. எல்லா மூஞ்சியும் மறந்து போச்சு..”
“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்போ உனக்கும் தெரியலையா..?”
“தெரியலை..”
கௌரம்மா ஏமாந்து போனாள். அவள் அப்புறம் நந்தினியை எதுவும் கேட்கவில்லை. ஃபோட்டோவில் தெரிந்த அந்த நந்தினியின் அரைக்கால்வாசி முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நந்தினிக்கு ‘அப்பாடா..!!’ என்று இருந்தது. ‘ச்சே.. என்ன கொடுமைடா சாமி இது..?? இவள் வேணாம் என்று மறுத்தபோதே சும்மா இருந்திருக்கலாம்.. கொஞ்ச நேரத்தில் எவ்வளவு டென்ஷன் படுத்தி விட்டாள்..?? ஷ்ஷ்ஷ்ஷஷ்.. ப்ப்ப்பாபாஆஆ…!!’ நந்தினி அவ்வாறு நிம்மதி பெருமூச்சு விட்டபோதுதான் கௌரம்மா மீண்டும் ஆரம்பித்தாள்.
“கொரங்கு..!!” என்றாள் வெறுப்பாக.
“யா..யாரை சொல்றீங்க..?” நந்தினி உதறலாக கேட்டாள்.
“ஃபோட்டோல ஸாரி கட்டிக்கிட்டு நிக்குதே.. அந்த சனியனைத்தான் சொல்றேன்..”
“ச..சனியனா..????” நந்தினி இஞ்சி தின்ற குரங்கை போல விழித்தாள்.
“பின்ன என்ன பனியனா..?? ஆளும் அது மூஞ்சியும்..!!”
“போட்டோலதான் அந்த பொண்ணு மூஞ்சியே முழுசா தெரியலையே..?”
“நல்லவேளை முழுசா தெரியலை..!! கொஞ்சூண்டு மூஞ்சியே கோரமா இருக்குது.. முழுசும் பாத்தா அவ்வளவுதான்.. மூச்சே எனக்கு நின்னு போயிருக்கும்..!! செய்றதையும் செஞ்சுட்டு.. எப்படி நிக்கிது பாரு.. எனக்கென்னேன்னு எருமைக்கடா மாதிரி..”
“ஐயோ.. ஏங்க ஒரு பொண்ணை போய் தேவையில்லாம திட்டுறீங்க..?”
“பொண்ணா..?? இதுவா..?? த்தூ.. இதுலாம் பெண்ஜென்மமே கெடயாது நந்தினிம்மா.. பெஸாசு..!!”
“அச்சச்சோ வேணாங்க.. பாவம்.. அவ எந்த நெலமைல அவரை வேணாம்னு சொன்னாளோ..??”
“வேணான்னு சொல்லட்டும்மா.. அதை ஒரு முறையா சொல்லணும்.. அதைவிட்டுட்டு.. அதென்ன தேவையில்லாம கேவலமான வார்த்தை எல்லாம் பேசுறது…?? ம்ம்..??”
“தப்புதான்.. விட்டுடுங்க..!!”
“நான் விட மாட்டேன்.. இந்த ஃபோட்டோவை பாக்குறப்போலாம் எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வரும்.. என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருந்தா.. இந்த கொழுப்பெடுத்த சிறுக்கி.. என் புள்ளையை பாத்து அந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கும்..?? இவ மட்டும் இப்போ என் முன்னாடி வந்து நின்னான்னு வச்சுக்கோ..”
“வந்து நின்னா..??” நந்தினி கிளி கிளம்பிய குரலில் கேட்டாள்.
“அவ கொரவளையை அப்படியே கடிச்சு துப்பிப்புடுவேன் நானு.. அவ்வளவு ஆத்திரத்துல இருக்கேன் இவ மேல..!!”
கௌரம்மா பற்களை நறநறவென கடித்தவாறு பத்திரகாளி மாதிரி சொல்ல, நந்தினி மிரண்டு போனாள். திருடனுக்கு தேள் கொட்டிய நிலை என்றால் என்னவென்று அன்றுதான் நந்தினிக்கு முழுமையாக புரிந்தது. எப்படியாவது அந்த பேச்சை மாற்றும் எண்ணத்துடன்,
“ஐயோ.. பாவம்மா.. அப்படிலாம் சொல்லாதீங்க..” என்றாள்.
“பாவமா..??? இவளா பாவம்..??? இவ பண்ணுன அக்குரமத்துக்கு.. இவளுக்கு இப்போ சாபம் வுட போறேன் நந்தினிம்மா..!!”
“சாபமா..?? அதெல்லாம் வேணாம்மா.. விட்ருங்க.. அவ தாங்க மாட்டா..!!”
“அவ தாங்க கூடாதுன்னுதான் இந்த சாபமே..!! இவளுக்குலாம்..”
“அவளுக்குலாம்..??”
“எவனாவது கேடுகெட்ட.. அயோக்கிய.. பொம்பளை பொறுக்கி பயதான் புருஷனா கெடைப்பான்.. நீ வேணா பாரு.. என் சாபம் பலிக்குதா இல்லையான்னு..!!” கௌரம்மா தன் கண்களை உருட்டி ஆக்ரோஷமாக சொன்னாள்.
“ஹாஹாஹாஹாஹாஹா..!!!”
அவ்வளவு நேரம் கௌரம்மா தன்னை திட்டியபோது அவஸ்தையாக நெளிந்த நந்தினி, இப்போது அவளுடைய திட்டு அசோக்கிற்கு என்று தெரிந்ததும் கலகலவென சிரித்தாள். ‘இந்தப்பெண் ஏன் திடீரென சிரிக்கிறது..?’ என்று கௌரம்மாவும் எதுவும் புரியாமல் பார்த்தாள்.
அப்புறம் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து..
நந்தினி தன் அறைக்கு வந்தாள். அவளுடைய கையில் அந்த ஆல்பம். ஒரு நாற்காலியை இழுத்து, ஜன்னலுக்கு அருகே போட்டுக்கொண்டு அமர்ந்தாள். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க, அதன் வழியாக உள்ளே வீசிய தென்றல் காற்று, நந்தினியின் மேனியை இதமாக தடவி, அவளுடைய உடலுக்குள் ஒரு இன்ப சிலிர்ப்பை ஏற்படுத்தின.
நந்தினி அந்த ஆல்பத்தை திறந்தாள். அந்த புகைப்படத்தை பார்த்தாள். தனது வலது கை விரல்களால் அசோக்கின் முகத்தை மென்மையாக வருடிக் கொடுத்தாள். இப்போது அவளுடைய மனதுக்குள் என்னவென்று விவரிக்க முடியாத ஒரு வகை ஒரு படபடப்பு..!! மின்சாரம் பாய்வது கணக்காக உடலும் மனதும் விர்ர்ர்… விர்ர்ர்ர்.. என்று துடித்துக் கொண்டு கிடந்தன..!! அவளுக்கு அந்த உணர்ச்சி மிகவும் பிடித்திருந்தது.. முதன்முறையாக அனுபவிக்கிறாள்..!!
ஃபோட்டோவில் ஈயென இளித்துக்கொண்டிருந்த அசோக்கின் முகத்தையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ரோமமில்லாமல் மொழுமொழுவென்று இருந்த அவன் முகத்தை பார்த்து, ‘பழ மூஞ்சி..!!!!’ என்று அவனை மனதுக்குள் செல்லமாக திட்டினாள். ஆறு வருடங்களுக்கு முன்பு பார்க்கவே சகிக்காத அந்த பழ மூஞ்சியை.. இப்போது ஏனோ நந்தினிக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது..!!
அத்தியாயம் 16
அன்று மாலை ஆனதுமே நந்தினி பரபரப்பாக மாறினாள். கௌரம்மா வியப்பாக பார்க்க, ஆறு மணி வாக்கில் சென்று அன்று இரண்டாம் முறையாக குளித்து விட்டு வந்தாள். ‘இந்தப்புடவை உனக்கு நல்லாருக்கு நந்தினி..’ என்று அசோக் என்றோ சொன்ன அந்த அடர்சிவப்பு நிற புடவையை தேடிப்பிடித்து அணிந்து கொண்டாள். உற்சாகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள், உள்ளே காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த கௌரம்மாவிடம் சொன்னாள்.
“நீங்க ஹால்ல போய் டிவி பாருங்கம்மா.. இன்னைக்கு சமையல் எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!”
“இல்லம்மா.. இந்த காய்கறி..” சொல்லிக்கொண்டிருந்த கௌரம்மாவை இடைமறித்து,
“அப்படியே வச்சுடுங்க.. நான் பாத்துக்குறேன்..” என்று பட்டென சொன்னாள்.
கௌரம்மாவும் கையிலிருந்த கத்தியை காய்கறி தட்டிலேயே போட்டுவிட்டு, ‘இன்று என்னாயிற்று இந்தப்பெண்ணுக்கு..?’ என்பது போல நந்தினியை வித்தியாசமாக பார்த்தவாறே, ஹாலுக்கு நகர்ந்தாள். அவள் சென்ற பிறகு ஓரிரு நிமிடங்கள், நந்தினி இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியவாறு, கிச்சனையும் கிச்சனில் இருந்த சமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவற்றில் அசோக்கிற்கு என்னென்ன ஐட்டங்கள் பிடிக்கும் என்று மனதுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தாள். அந்த ஐட்டங்களை வைத்து என்னெல்லாம் அன்று இரவு உணவுக்கு தயார் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
முடிவுக்கு வந்ததுமே மீண்டும் அவளை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பம்பரம் போல சுழன்று சமையல் வேலைகள் எல்லாவற்றையும் அவளே தனியாக முடித்தபோது, மணி எட்டை நெருங்கியது. ‘ரெடியாயிடுச்சும்மா.. நீங்க மாமாவுக்கு சாப்பாடு எடுத்து வைங்க.. நான் இதோ வந்துர்றேன்..’ என்று கௌரம்மாவிடம் சொல்லிவிட்டு நந்தினி மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தது கொண்டாள்.
பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டாள். கொஞ்சமாய் பவுடர் தீற்றிக் கொண்டாள். குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டெடுத்து நடு நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். உறுத்தாத வண்ணத்தில் உதட்டுக்கு மெலிதாக சாயம் பூசிக்கொண்டாள். ஹேர் பின்னை பற்களால் கடித்தவாறே, மல்லிகைப்பூவை மொத்தமாய் எடுத்து தலையில் சூடிக் கொண்டாள். அழகாயிருக்கிறோமா என்று கண்ணாடியை ஒருமுறை பார்த்து திருப்தியடைந்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள்.
டைனிங் ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மாமனாரையும், அவருக்கு அருகில் இருந்து பரிமாறும் கௌரம்மாவையும், கடந்து ஹாலுக்கு சென்றாள். சோபாவில் அமர்ந்து கொண்டு கணவனின் வருகைக்காக கதவையே வெறிக்க ஆரம்பித்தாள். ‘லேட் ஆக்கிடாதடா.. சீக்கிரம் வந்துடு..’ என்று சத்தம் வெளிவராமல் முணுமுணுத்துக் கொண்டாள்.
அசோக்கும் அன்று சீக்கிரமே வீடு திரும்பி விட்டான். வந்த சிறிது நேரத்திலேயே நந்தினி அவனுக்கு உணவு பரிமாறினாள். அன்று எல்லாமே அவனுக்கு பிடித்த ஐட்டங்களாக இருக்க, நன்றாக சாப்பிட்டான். நந்தினி ஒரு சேரை இழுத்துப் போட்டு அவனுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அவன் சாப்பிடும் அழகையே ஓரக்கண்ணால் விழுங்கிக் கொண்டிருந்தாள். தனது உடை, முகம், தலை அலங்காரங்கள் பற்றி ஏதாவது அவன் கேட்பான் என்று எதிர்பார்த்திருந்தாள். அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் சாப்பாட்டில் குறியாக இருந்தது நந்தினிக்குள் ஒரு சிறிய ஏமாற்றத்தை விதைத்திருந்தது. இருந்தாலும்.. ‘தன் கையால் சமைத்ததை.. வேறெந்த கவனமும் இல்லாமல்.. இவ்வளவு ஆசையாக உண்கிறானே..’ என்ற நினைவு வேறொரு வகையான சந்தோஷத்தை அவளுக்கு தந்திருந்தது.
அவளுடைய பார்வை மொத்தமும் அசோக்கின் முகத்தில் பதிந்திருக்க.. அவளுடைய மனம் முழுவதிலும் அவன் மீதான காதல் படிந்திருக்க.. மனதுக்குள்ளேயே செல்லமாக அவனிடம் உரையாடினாள்..!!
‘ஒய்.. சாப்பாடு ரொம்ப பிடிச்சிருக்கோ.. இந்த மொக்கு மொக்குற..?? வந்ததுல இருந்து சாப்பாட்டுலயே கவனமா இருக்கியே.. சமைச்சவளை கொஞ்சம் திரும்பி பார்த்தா என்னவாம்..?? என்னை அவ்வளவு புடிக்குமா உனக்கு.. அம்மான்னு சொன்னியாம்.. ம்ம்..?? இப்பவும் அடிக்கடி அந்த ஃபோட்டோ எடுத்து பார்ப்பியாமே.. அன்னைக்கு நைட்டு நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னதும் உனக்கு எவ்வளவு கோவம் வருது..?? அப்போ.. என் மேல உனக்கு இன்னும் லவ்வு இருக்குதுதான..?? அப்புறமும் ஏன் இப்படி அமுக்குனி மாதிரி உம்முன்னு இருக்குற.. சொல்ல வேண்டியதுதான எங்கிட்ட..??’
அவள் அந்த மாதிரி உள்ளத்துக்குள் ரகசியமாய் உரையாடிக் கொண்டிருக்கையிலேதான், திடீரென்று அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ‘இவன் தன் மனதில் இருக்கும் காதலை என்னிடம் சொல்வான் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்..? ஏற்கனவே ஒருமுறை சொன்னபோது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காயப்படுத்தி விட்டேன்..!! மறுபடியும் காதலை சொல்லி சூடு பட்டுக்கொள்ள எந்த மடையனாவது நினைப்பானா..?? அப்போது போல என்னால் காயப்படுத்த முடியாவிட்டாலும், இப்போதும் அந்த காதலை என்னால் மறுதலிக்க முடியுமே..?? அதுவே அவனுக்கு அவமானம்தானே..?? அப்படி இருக்க.. அவன் எப்படி தன் மனதை திறந்து என்னிடம் காட்டுவான் என்று எதிர்பார்க்க முடியும்..??’ Pundai Thadavum Sex Stories In Tamil
– தொடரும்
இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.