ஐ ஹேட் யூ பட் – 27

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Sex Stories In Tamil – “ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா.. மதுரைக்கார பையன்.. பெங்களூர்லதான் வேலை பாக்குறாரு..!!”

“ப்ச்.. இந்த மதுரைக்கார பசங்களே ரொம்ப திமிர் புடிச்சவனுகளா இருப்பானுக டாடி.. என் ஆபீஸ்ல கூட ஒன்னு இருக்குது.. அராத்து புடிச்சது..!! எனக்கு சுத்தமா புடிக்காது.. ப்ளீஸ் டாடி.. வேணாம்..!!”

“அடடடடா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளும்மா..!!”

“என்ன சொல்லப்போறீங்க..?? வயசு ஏறிக்கிட்டே போகுது.. பவுன் வெலை கூடிக்கிட்டே போகுது.. கூட்ஸ் வண்டிலாம் கூவிக்கிட்டே போகுது.. அதான..??”

“ஐயோ.. அது இல்லம்மா..!!”

“அப்புறம்..??”

“என்னை கொஞ்சம் பேச விடுறியா..??” வரதராஜன் பொறுமை இழக்கவும்,

“சரி.. பேசுங்க..!!” பிரியா மனம் இறங்கினாள்.

‘இந்தா..’ என்று வரதராஜன் சாதத்தை பிசைந்து நீட்ட, அவள் ‘ஆ’வென வாய் திறந்து வாங்கிக் கொண்டாள். மகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுக்கொண்டே வரதராஜன் ஆர்வமாக சொல்ல ஆரம்பித்தார். ப்ரியாவும் வாயை அசை போட்டுக்கொண்டே அசுவாரசியமாய் கேட்க ஆரம்பித்தாள்.

“ப்ரோக்கர்ட்ட உன் ஃபோட்டோ குடுத்திருந்தேன்னு சொன்னேன்ல..??”

“ஆமாம்..”

“நாலு மாசம் முன்னாடி இந்த பையனோட அண்ணன் உன் ஃபோட்டோவும், என் ஃபோன் நம்பரும் வாங்கிருக்காரு..!! ‘கூடிய சீக்கிரம் அவங்க உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசுவாங்க’ன்னு ப்ரோக்கர் எங்கிட்ட சொல்லிருந்தாரு.. நானும் கொஞ்ச நாள் பாத்தேன்.. அவங்கட்ட இருந்து எந்த தகவலும் வரல.. அப்புறம் நானே அவருக்கு ரெண்டு தடவை கால் பண்ணி பாத்தேன்.. பதில் ஒன்னும் சரியா வரலை.. நானும் அவ்வளவுதான்னு நெனச்சு அதை அப்படியே விட்டுட்டேன்..!!”

“ஹையோ.. பயங்கர ப்ளேடு போடுறீங்க டாடி.. சீக்கிரம் சொல்லி முடிங்க..!!”

“இரும்மா..!! ம்ம்ம்.. அவ்வளவுதான்னு நெனச்சு விட்டுட்டனா..?? இப்போ.. ரெண்டு வாரம் முன்னாடி.. திடீர்னு அவரே எனக்கு கால் பண்ணினாரு.. ‘உங்க பொண்ணை எங்களுக்கு புடிச்சிருக்கு.. ஜாதகம் அனுப்பி வைங்க.. பாத்துட்டு சொல்றோம்’னு சொன்னாரு.. நானும் அனுப்பி வச்சேன்..!! அவங்களும் ஒன்னுக்கு ரெண்டு ஜோசியரா உன் ஜாதகத்தை எடுத்துட்டு போய் பாத்திருக்காங்க.. ரெண்டு ஜோசியருமே ‘அருமையான வரன்.. எல்லா பொருத்தமும் பிரம்மாதமா இருக்கு.. இந்த இடத்தை முடிங்க.. அமோகமா இருக்கும்’னு சொல்லிருக்காங்க..!!”

“ஐயோ..!! இந்த ஜோசியம்லாம் பயங்கர ஃப்ராடு டாடி.. அதைலாம் நம்பக்கூடாது.. இந்தியால இருக்குற இந்த மாதிரி மூட பழக்கத்தை பத்தி.. இத்தாலில இருக்குற ஒரு பெரிய ரைட்டர் ஒரு பெரிய புக் எழுதிருக்காரு.. அந்த புக் எவ்ளோ ஸேல் ஆகி இருக்கு தெரியுமா..?? உங்களுக்கு எங்க அதுலாம் தெரிய போகுது..??”

“ஹாஹா.. இத்தாலி பத்தி எனக்கு என்னம்மா கவலை..?? என் பொண்ணு கழுத்துல ஏறப்போற தாலி பத்திதான் எனக்கு கவலை..!! நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளும்மா..!!”

“ம்ம்.. சொல்லுங்க..!!”

“பையனோட அண்ணன் நேத்து கால் பண்ணினாரு.. அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்ப திருப்தின்னு சொன்னாரு.. பையனோட ஃபோட்டோ அனுப்பி வைக்கிறோம்.. உங்க பொண்ணுக்கு புடிக்குதான்னு கேட்டுட்டு சொல்லுங்கன்னு சொன்னாரு..!!”

“நீங்க என்ன சொன்னீங்க..??”

“கேளு.. இன்னைக்கு அந்த பையனோட ஃபோட்டோ கூரியர்ல வந்தது.. கவரை பிரிச்சு பாத்தா.. எனக்கு ஒரே ஷாக்கு..!!”

“ஏன்.. பையனுக்கு பொக்கை வாயா..??”

“ஐயயே.. ஏன்மா இப்படி இருக்குற நீ..??”

“ஓகே ஓகே.. கண்டின்யூ..!!”

“பையன் யார் தெரியுமா.. அன்னைக்கு நான் ஒரு தம்பியை பத்தி சொல்லிட்டு இருந்தன்ல..??”

“எந்தத் தொம்பி..??”

“அதான்மா.. உன் அம்மாவோட தாலிச்சரடு தொலஞ்சு போய்.. எடுத்துக்குடுத்தார்னு..!!”

“ஆ..ஆமாம்..!!” ப்ரியாவிடம் இப்போதுதான் மெலிதாக ஒரு ஆர்வம் பிறந்தது.

“அதே தம்பிதான்மா..!! எனக்கு அந்த தம்பிதான் மாப்ளைன்னு தெரிஞ்சப்போ.. எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா..??”

“ஓ..!!”

“ரொம்ப நல்ல இடம்மா.. நம்மவிட ரொம்ப வசதியான குடும்பம்.. அன்னைக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பேசுனதுல இருந்தே மாப்பிள்ளை தங்கமானவர்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. இந்த இடம் அமைஞ்சா டாடி ரொம்ப நிம்மதியா இருப்பேன்மா..!! மாப்ளையும் ரொம்ப அழகா லட்சணமா இருக்காரு.. ஃபோட்டோ பாரு.. உனக்கு கண்டிப்பா புடிக்கும்..!!”

வரதராஜன் சொல்லிக்கொண்டே டீப்பாய் மீது இருந்த அந்த கவரை எடுத்து ப்ரியாவிடம் நீட்டினார். ப்ரியா ஒருவித ஆர்வத்தின் பிடியில் இருந்தாள். அசோக்தான் தன் கணவன் என்று அவளுடைய மனதில் பதிந்து போயிருந்தாலும், தன்னை சந்திக்காமலே தன்னிடம், ‘க்ரேட் கேரக்டர்..’ என்று பாராட்டுப்பெற்ற அந்த மூஞ்சியை பார்க்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு. எனவே கவரை பிரித்து ஃபோட்டோவை வெளியே எடுத்தாள். பார்த்தாள்..!!

ஃபோட்டோவை பார்த்த ப்ரியா எந்த மாதிரி உணர்ச்சிக்கு உள்ளாகியிருப்பாள் என்று நான் உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை..!! அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ப்ரியா தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. தனது மனதில் இருந்த உருவத்தையே.. தந்தை மாப்பிள்ளை என கையில் கொடுக்க.. அவளுடைய உடல் முழுவதிலும் ஒரு சிலிர்ப்பு.. உள்ளம் முழுவதிலும் ஒரு பரவசம்.. முகம் முழுவதிலும் ஒரு பிரகாசம்..!! மனதுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று பீறிட்டு கிளம்ப.. வார்த்தைகள் கூட சரியாக வந்து விழவில்லை அவளுக்கு.. திணறலாய் சொன்னாள்..!!

“டாடி.. இ..இது.. இவன்..”

“என்னம்மா.. என்னாச்சு..??”

“இ..இவனை எனக்கு தெரியும் டாடி.. இவன் பேர் அசோக்..!! என் கூட வொர்க் பண்றவன்தான்.. ஆறு வருஷமா இவனை எனக்கு தெரியும்..!!”

“ஆஹா..!! இதைப் பார்டா…. நான் உனக்கு ஷாக் குடுத்தா.. நீ எனக்கு அதைவிட பெரிய ஷாக் குடுக்குற.. ஹாஹா…!! ம்ம்ம்ம்.. ஆறு வருஷம்னா.. அப்போ என்னை விட உனக்கு மாப்பிள்ளையை பத்தி நல்லா தெரியும்னு சொல்லு..!!”

“ஹ்ம்ம்.. நல்லா தெரியும் டாடி..!!”

“எப்படி.. நல்ல பையன்தான..??”

“ந..நல்ல பையன்தான்..!!”

“பிடிச்சிருக்கா..??” வரதராஜன் பேச்சுவாக்கில் இயல்பாய் கேட்க,

“பிடிச்..” ப்ரியா அவசரமாய் சொல்லிவிட்டு அப்புறம் பாதியில் நிறுத்தினாள். அவள் மனதில் இப்போது லேசாக ஒரு குழப்பம். சில விடை தெரியாத கேள்விகள்.

“ஹாஹா.. ஏன்மா பாதில நிறுத்திட்ட.. பிடிச்சிருக்குன்னுதான் முழுசா சொல்லேன்..!!”

“நான் சொல்றது இருக்கட்டும் டாடி..!! பையனுக்கு என்னை புடிச்சிருக்கான்னு அவங்ககிட்ட கேட்டீங்களா..??”

“அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்மா.. உன் சம்மதம் மட்டுந்தான் இப்போ பாக்கி.. மாப்ளையோட சம்மதம் உன்னை பாக்குறதுக்கு முன்னாடியே கெடைச்சிடுச்சு.. ஹாஹாஹாஹா..!!” வரதராஜன் சொல்லிவிட்டு சிரிக்க,

“எ..என்ன டாடி சொல்றீங்க..??” ப்ரியா தலையை சொறிந்தவாறு கேட்டாள்.

“ஆமாம்மா..!! அவங்க அண்ணன் சொன்னாரு.. பையன் அப்படியே குடும்பத்துக்கு அடங்கி நடக்குறவராம்.. பெரியவங்க வார்த்தையை தட்டவே மாட்டாராம்.. அண்ணன், அண்ணி மேல அம்புட்டு மரியாதையாம்.. அவங்களா பாத்து எந்த பொண்ணை செலக்ட் பண்ணாலும் அவருக்கு சம்மதம்தானாம்.. இந்தக்காலத்துல இப்படி ஒரு அடக்கமான புள்ளையை..”

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக, ‘ம்க்கும்.. கிழிஞ்சது கிருஷ்ணகிரி..’ என்று ப்ரியா மனதுக்குள்ளேயே தந்தையின் அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள். ‘அவனா அடக்கமான புள்ளை.. அவனை மாதிரி ஒரு அடங்காத தடிமாட்டை நான் பாத்ததே இல்ல..’ என்று நினைத்துக்கொண்டாள்.

“இங்க பாருங்க டாடி.. இந்தக்கதைலாம் வேணாம்.. நாளைக்கு அவங்களுக்கு ஃபோன் பண்ணி.. ‘மாப்ளை பொண்ணோட ஃபோட்டோவை பாத்தாரா.. இந்த கல்யாணத்துல அவருக்கு சம்மதமா’ன்னு தெளிவா கேட்டுடுங்க..!! என்ன.. புரியுதா..??”

“அது சரிம்மா.. நாளைக்கு நான் ஃபோன் பண்ணினா.. ‘உங்க பொண்ணு என்ன சொல்றா’ன்னு அவங்க என்னை திருப்பி கேட்பாங்களே.. அதுக்கு நான் என்ன பதில் சொல்றது..??”

வரதராஜன் கிடுக்கிப்பிடியாய் ஒரு கேள்வி கேட்கவும், ப்ரியா பட்டென அமைதியானாள். முகத்தில் சற்றே வெட்கம் படர, தலையை லேசாக கவிழ்த்துக்கொண்டாள். மகளுடைய வெட்கத்தைப் பார்த்து வரதராஜன் மெலிதாக புன்னகைத்தார். அப்புறம் அவரே மெல்லிய குறுகுறுப்பான குரலில் கேட்டார்.

“அப்போ.. அவங்ககிட்ட… என் பொண்ணுக்கு சம்மதம்னு சொல்லிடவா..??”

“ம்ம்..!!” ப்ரியா வெட்கத்துடன் தலையாட்ட, வரதராஜனின் புன்னகை மிகவும் பெரிதானது.

“அப்படி சொல்லுடி என் ராஜாத்தி..!!” என்று சந்தோஷ மிகுதியில் சோற்றுக்கையுடனே மகளின் கன்னத்தை பிடித்து கொஞ்சினார்.

ப்ரியாவுக்கு அன்று இரவு தூக்கமே இல்லை. மனம் முழுக்க நிறைய சந்தோஷமும், சிறு சிறு குழப்பங்களும்..!! நடப்பதெல்லாம் நனவா இல்லை கனவா என தன்னைத்தானே அடிக்கடி கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அசோக்கின் ஃபோட்டோவை தந்தைக்கு தெரியாமல் தன் அறைக்கு எடுத்து சென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். மனதுக்குள்ளேயே கொஞ்சலாக பேசி அவனிடம் உரையாடினாள்.

அதேநேரம் அவளுடைய மனதுக்குள் ஒருவித குழப்ப விவாதமும் நடந்து கொண்டிருந்தது. ‘நான்கு மாதங்கள் முன்பே எனது ஃபோட்டோ அங்கே போயிருக்கிறது என்றால்.. அசோக் என் ஃபோட்டோவை பார்த்தானா இல்லையா..?? இல்லை.. பார்த்திருக்க மாட்டான்.. பார்த்திருந்தால் அந்த செய்தி எப்போதோ என்னிடம் வந்து சேர்ந்திருக்குமே..?? அதுசரி.. நான்கு மாதங்களாக அவர்கள் ஏன் அப்பாவை தொடர்பு கொள்ளவில்லை..?? திடீரென ஏன் தொடர்பு கொண்டார்கள்..??’

அந்த கடைசி கேள்வி மனதில் எழுந்ததும், அன்று அவளுக்கும் அசோக்கிற்கும் நடந்த சண்டையும், அதன்பிறகு அவன் ஃபோனில் அண்ணனை அழைத்து பேசியதும் அவளுடைய நினைவுக்கு வந்தது..!! உடனே படபடவென பாதி கேள்விகளுக்கு விடை தெரிந்து போனமாதிரி இருந்தது..!! ‘ஆமாம்.. அப்படித்தான் இருக்கவேண்டும்.. முன்பு ஏதோ ஒரு காரணத்துக்காக என் ஃபோட்டோவை பார்க்காமலே, அசோக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான்.. அப்புறம் அன்று அவன் பேசியதும், அவனுடைய அண்ணன் அப்பாவை திரும்ப தொடர்பு கொண்டிருக்கிறார்.. அசோக் அன்று சொன்னதை வைத்து ‘மாப்பிள்ளைக்கு சம்மதம்’ என்று அவரும் இவரிடம் சொல்லியிருக்கிறார்.. கூட்டி கழித்து பார்த்தால், அசோக்கிற்கு இன்னும் விஷயமே தெரியாது போலிருக்கிறது..!!’

ப்ரியா நெற்றியை கீறிக்கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். சடசடவென சில முடிவுகள் எடுத்தாள். ‘அசோக்கின் சம்மதம் தெரிந்து கொள்ள அப்பாவை எதிர்பார்க்க தேவை இல்லை.. நாமே நாளை அவனிடம் மனம் விட்டு பேசி விட வேண்டியதுதான்.. அவனுக்கு என் மீது கோபம் இருக்கலாம்.. இத்தனை நாளாய் அவனிடம் நடந்து கொண்ட முறைக்காக தயக்கமில்லாமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.. அவன் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிவிட வேண்டும்.. என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளடா என்று மனம் விட்டு பேசிவிட வேண்டும்..!!’

அந்த மாதிரி தெளிவாக ஒரு முடிவெடுத்ததும், ப்ரியாவின் மனம் குழப்பம் நீங்கி அமைதியானது. மீண்டும் அசோக்கை பற்றிய காதல் நினைவுகள் மனதை நிறைக்க ஆரம்பித்தன. அவனுடைய புகைப்படத்தை மார்பின் மீது போட்டுக்கொண்டு, கண்கள் மூடி கல்யாணக்கனவு காண ஆரம்பித்தாள்.

அத்தியாயம் 17

இரவு தூங்க தாமதம் ஆனாலும், காலையில் சீக்கிரமே ப்ரியா எழுந்துவிட்டாள். எப்போதும் பெங்களூர் குளிருக்கு அவசர அவசரமாய் தலையில் தண்ணீர் மொண்டு ஊற்றுபவள், அன்று ஆற அமர அரை மணி நேரமாக குளித்தாள். குளிர்ந்த நீர் உடலில் ஏற்படுத்துகிற ஜில்லென்ற சிலிர்ப்பை இமைகள் மூடி ரசித்தாள். நீரில் நனைந்த தன் அங்கங்களை ஒவ்வொன்றாக கூர்ந்து கவனித்தாள். அவளது அங்கங்கள் அனைத்தும் திடீரென அழகாய் மாறிவிட்டதாக அவளுக்கு தோன்றியது. அனைத்துக்கும் சொந்தக்காரனை மனதில் நிறுத்தி.. கண்கள் மூடி.. கைகள் விரித்து.. ஷவரில் இருந்து சிதறுகிற நீரில்.. சுகமாய் நனைந்தாள்..!!

வெளியே வந்து உடை அணிந்து கொண்டாள். அவள் புடவை அணிந்து கொள்வது மிகவும் அரிது. பெரும்பாலும் சுடிதார்தான்.. அதையும் அக்கறை இல்லாமலே உடுத்திக் கொள்வாள்..!! அன்று ஏனோ அவளுக்கு புடவை அணிந்து செல்லவேண்டும் போலிருந்தது. ஆரஞ்சு நிறத்தில் ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். அதே நிறத்தில் ப்ளவுசும்..!! கோதுமை நிறத்தில் மின்னும் அவளது தேகத்திற்கு அந்த நிறப்புடவை இன்னும் வண்ணம் கூட்டியது.

கண்ணாடி முன் நின்று நீண்ட நேரமாய் அலங்காரம் செய்து கொண்டாள். தலையை பின்னாமல் காற்றில் அலைபாய விட்டாள். மெலிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள். கொஞ்சமாய் உதட்டுச்சாயம் பூசிக்கொண்டாள். புருவத்திற்கு மையிட்டாள். இமைகளை கூர் தீட்டினாள். எப்போதும்போல குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டை நடுநெற்றியில் ஒட்டிக்கொண்டாள். எல்லாம் முடிந்ததும் திருப்தி அடைந்தவளாய், உடலை முன்னும் பின்னும் திருப்பி திருப்பி கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுடைய கற்பனையில் இருந்து கிளம்பி கண்ணாடியில் தோன்றிய அசோக்கிடம், மனதாலேயே பேசினாள்.

‘ஒய்.. திருடா.. ஈகோ புடிச்ச இடியட் மடையா..!! புடிச்சிருக்கா என்னை.. ப்ரியாவை பிடிச்சிருக்கா உனக்கு..?? பாரு.. எவ்ளோ அழகா இருக்கேன் பாரு.. எல்லாம் யாருக்குன்னு சொல்லு பார்ப்போம்.. உனக்குத்தாண்டா லூசு..!! ஹ்ம்ம்ம்… என்னடா சொல்லப்போற இன்னைக்கு.. லவ் பண்றேன்னு சொன்னா என்ன சொல்வ.. ம்ம்..?? மவனே.. முடியாதுன்னு மட்டும் சொல்லு.. அப்டியே அந்தக்கண்ணை நோண்டி எடுத்துடுறேன்..!! ஹாஹாஹாஹா… உன்னை லூசுன்னு சொல்லிட்டு நான் லூசு மாதிரி உளறிட்டு இருக்கேன் பாரு.. உன்னால என்னென்னலாம் பண்றேன்..??’

“என்னம்மா பண்ற..??” வரதராஜனின் குரல் ப்ரியாவை நனவுலகுக்கு மீட்டு வந்தது.

“ஒண்ணுல்ல டாடி.. இதோ வந்துட்டேன்..!!”

“சீக்கிரம் வாம்மா.. டைமாச்சு..!!”

“இதோ.. ஒரு நிமிஷம் டாடி..!!”

ப்ரியா மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் உடலை பார்த்து கொண்டாள். அவசரமாய் பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். செல்போன் எடுத்துக்கொண்டாள். அறையை விட்டு வெளிப்பட்டாள். அலங்காரம் செய்த அழகு சிலையாக வெளிவந்த மகளை பார்த்து, வரதராஜன் ஒருகணம் பிரம்மித்துப் போனார். மறுகணமே முகம் மலர்ந்து புன்னகைத்தார்.

“என்னம்மா.. இன்னைக்கு புதுசா புடவைலாம்..??”

“ஏன் டாடி.. நல்லா இல்லையா..??”

“ஐயோ.. பிரம்மாதமா இருக்கும்மா.. மகாலக்ஷ்மி மாதிரி இருக்குற..!!”

“நெஜமாவா..?? புடவைல நான் நல்லாருக்கனா..??”

“என் பொண்ணுக்கு என்னம்மா கொறைச்சல்.. அவ என்ன ட்ரஸ் போட்டாலும்.. தேவதை மாதிரி இருப்பா..!!” வரதராஜன் மகளை மனதார புகழ,

“ஹையோ.. போங்க டாடி..!!” பிரியா நாணத்தில் முகம் சிவந்தாள்.

“ஹாஹா..!! ஹ்ம்ம்.. இப்போ எனக்கு எல்லாம் புரியுது..!!”

“என்ன புரியுது..??”

“இன்னைக்கு ஏன் இந்த ஸ்பெஷல் அலங்காரம்னு..!!”

“ஏ..ஏன்..??”

“ஆபீஸ்ல இன்னைக்கு மாப்ளையை சந்திச்சு பேசுற மாதிரி ப்ளான்.. கரெக்டா..??”

“ஐயோ.. அ..அதெல்லாம் ஒன்னும் இல்ல டாடி.. நா..நான் சும்மா… சாதாரணமாத்தான் இதெல்லாம்..!!” பிடுங்கித் தின்னுகிற வெட்கத்துடன் ப்ரியா தடுமாற்றமாக சொன்னாள்.

“ஹாஹா.. சரிம்மா விடு..!! ம்ம்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!”

“என்ன டாடி..??”

“ஃபோன்ல பேசுறதை விட.. இன்னைக்கு நேர்லயே அவங்க வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம்னு இருக்கேன்மா.. போயிட்டு வரவா..??”

“சரி டாடி.. போயிட்டு வாங்க..!!” Bra Kalattum Sex Stories In Tamil

– தொடரும்

ஐ ஹேட் யூ பட் – 27

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.