ஐ ஹேட் யூ பட் – பகுதி 3

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

Tamil Hot Stories – “அதான்.. லக்ஷ்மியை கட்டிக்கிறியான்னு எங்கிட்ட கேட்டீங்கள்ல.. அதை..!!”

“டேய்..!! அ..அது நான் எப்போவோ சொன்னது..!!” செல்வி அவசரமாகவும், பதற்றமாகவும் சொன்னாள்.

“எப்போவா இருந்தா என்ன.. சொன்னீங்கள்ல..??” அசோக் கூலாக கேட்டான்.

“ஏ.. வேணாண்டா.. ப்ளீஸ்டா.. அது தெரிஞ்சா அந்த மனுஷன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு..!!” செல்வி இப்போது கெஞ்சினாள்.

“இல்ல அண்ணி.. சொல்லத்தான் போறேன்..!! அவளை கட்டிக்கிறியான்னு நீங்க கொழைஞ்சுக்கிட்டே கேட்டது.. நான் முடியாதுன்னு சொன்னதும்.. இப்போ அவளை இங்க அழைச்சுட்டு வந்து எப்படியாவது என் தலைல கட்டிடனும்னு ப்ளான் போடுறது.. எல்லாம் சொல்லத்தான் போறேன்..!!”

“டேய்.. அதான் இப்போ எனக்கு அப்படிலாம் எதுவும் ஆசை இல்லைன்னு சொல்றேன்ல..??”

“ஆனா நான் அவன்ட்ட சொல்றப்போ அப்படித்தான் சொல்வேன்..!! அதுக்கப்புறம் அவன் பர்மிஷன் கொடுத்தான்னா.. தாராளமா உங்க தொங்கச்சியை கூட்டிட்டு வந்து வீட்டுல வச்சுக்கோங்க.. எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லை..!!”

அசோக் எகத்தாளமாக சொல்ல, செல்வி நொந்து போனவளாய் தலையில் கையை வைத்துக் கொண்டாள். இதற்காகத்தான் அவள் அடிக்கடி தனக்குள் நொந்து கொள்வது. ‘ஏண்டி.. இந்தப்பயகிட்ட போய் அப்படி கேட்டுத் தொலைச்ச..?? இப்பப்பாரு.. சும்மா சும்மா அதையே சொல்லி மெரட்டுறான்..!!’ தனது குடும்ப உறுப்பினர்களிலேயே ராஜேஷ் வெறுப்பை காட்டாமல் இருப்பது தன்னிடமும், தன் தங்கையிடமும்தான். இப்போது இவன் சென்று இப்படி சொன்னால்.. அவ்வளவுதான்.. தாங்களும் அந்த வெறுப்பினர் லிஸ்டில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்..!!

செல்வி கடுப்புடன் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனுடைய சட்டையை கொத்தாகப் பற்றி கன்னத்தில் நாலு அறை விடலாமா என்பது மாதிரி வந்த எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டாள். நீளமாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவள், சோர்வான குரலில் சொன்னாள்.

“சரிப்பா.. அவளை இங்க கூட்டிட்டு வரலை.. போதுமா..??”

“அது.. அந்த பயம் இருக்கணும்..!!” அசோக் வெற்றிப் புன்னகையுடன் சொன்னான்.

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்குறடா நீ.. இதுக்கெல்லாம் நல்லா அனுபவிக்கத்தான் போற..!!”

“ஹ்ஹ.. என்ன சாபம் விடுறீங்களா..??”

“ஆமாம்.. என் தங்கச்சி மாதிரி ஒரு தங்கமான பொண்ணை வேணாம்னு ஒதுக்கிட்ட.. உனக்கு எந்தக்காட்டு மகாராணி வர்றான்னு நானும் பாக்குறேன்..!!”

“அதெல்லாம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணி.. உங்க தங்கச்சியை விட சூப்பரான பொண்ணா நான் புடிச்சு காட்டுறேன்..!!”

“ம்ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்..!! அகம்பாவத்துல இப்படிலாம் ஆட்டம் போடுறல.. உன் ஆட்டத்துக்கு ஏத்த மாதிரி எதாவது அடங்கப்பிடாரிதான் உனக்கு வந்து வாய்க்கப்போறா..!! நீங்க ரெண்டு பேரும் கட்டி உருண்டு சண்டை போடணும்டா.. அதை நான் கண்ணு குளிர பாக்கணும்..!!”

“ஹாஹா..!! ஐயோ பாவம்.. உங்க ஆசை என்னைக்கும் நிறைவேற போறது இல்லைன்னு நெனச்சா.. எனக்கு ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருது அண்ணி..!!”

“ஏன் நிறைவேறாது..??”

“பிகாஸ் ஐ’ஆம் அசோக்..!! எப்பேர்ப்பட்ட அடங்காத குதிரையா இருந்தாலும்.. அதை எப்படி அடக்கனும்ன்ற வித்தை எனக்கு தெரியும்..!! எப்படி அந்த குதிரைக்கு தண்ணி காட்டி, தவுடு திங்க வைக்கனும்ன்ற தந்திரம் எனக்கு தெரியும்..!! எவளும் இங்க துள்ள முடியாது அண்ணி.. அடங்கிபோய்த்தான் இருக்கணும்..!!”

“ம்ம்ம்.. கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி வாய் சவடால் விட்டவங்க எத்தனையோ பேரு.. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நெலமைக்கு ஆனாங்கன்னு நானும் பாத்திருக்கேன்பா..!!”

“எனக்கு அந்த நெலமை வராது அண்ணி..!!”

“வரப்போறவளைப் பத்தி எதுவுமே தெரியாம.. நீயா அப்படி சொல்லிக்கிறதா..??”

“அதெல்லாம் அவளைப்பத்தி எனக்கு நல்லா..”

அதுவரை அண்ணியின் பேச்சுக்கு படபடவென பதில் சொல்லிக்கொண்டிருந்த அசோக், இப்போது பட்டென பாதியிலேயே நிறுத்தினான். அமைதியானான். அவன் அவ்வாறு திடீரென அமைதியானதன் அர்த்தம் செல்விக்கு புரியவில்லை. நெற்றியை சுருக்கியவள், குழப்பமான குரலிலேயே கேட்டாள்.

“என்னடா.. என்னாச்சு..??”

“எ..என்னாச்சு..?? ஒ..ஒண்ணுல்ல..!!”

“இல்ல.. ஏதோ சொல்ல வந்த.. பாதிலேயே நிறுத்திட்ட..??”

“ஒ..ஒண்ணுல்ல.. அ..அதெல்லாம் நான் பாத்துக்குறேன்னு சொல்ல வந்தேன்..!!”

அசோக் ஒரு மாதிரி தடுமாற்றமாய் சொல்ல, செல்வி அவனுக்கு பதில் சொல்லாமல் அவனுடைய கண்களையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். அவனுடைய கண்களில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, அப்புறம் மெலிதாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவிட்டு, அந்தப்பக்கமாக திரும்பிக்கொண்டாள். கல்லில் கிடந்த கடைசி சப்பாத்தியையும் எடுத்து ஹாட்பாக்ஸில் போட்டு மூடினாள். ரெகுலேட்டர் திருகி ஸ்டவ்வை அணைத்தவாறே, பேச்சை மாற்றும் விதமாக கேட்டாள்.

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னைக்கு என்ன உனக்கு லீவு இல்லையா..??”

“இல்லையே.. ஏன் கேக்குறீங்க..??”

“அவருக்கும் தம்புக்கும் இன்னைக்கு லீவு.. அதான் கேட்டேன்..!!”

தம்பு என்றால்.. தம்புச்சாமி..!! ராஜேஷுக்கும் செல்விக்கும் பிறந்தவன். ஐந்தரை வயது ஆகிறது. வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு ஸ்கூலில் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான். சின்னப் பையனுக்கு இப்படி ஒரு பேரா என்று கேட்காதீகள். எல்லாம் இதோ இந்த செல்விதான்.. தன் தாத்தாவின் பெயரைத்தான் வைப்பேன் என்று அடம்பிடித்து வைத்திருக்கிறாள்..!!

“எதுக்கு லீவாம்..??”

“ஏதோ ஜெயந்தின்னு சொன்னாங்கப்பா.. உங்களுக்கு லீவ் இல்லையா..??”

“ஏதோ ஜெயந்தி ஜெயமாலினிக்காகலாம் எங்க கம்பெனில லீவ் விட மாட்டாங்க..!!” அசோக் குறும்பாக சொல்ல, செல்வி அவனை முறைத்தாள்.

“ம்ம்ம்ம்.. இந்த நக்கலுக்குலாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!”

“ஹாஹா.. ம்ம்ம்ம்..!! சரி அண்ணி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!” அசோக் கிச்சன் வாசலை நோக்கி நடந்தான். செல்வி அவனை அவசரமாய் அழைத்து நிறுத்தினாள்.

“ஏய்.. நில்லுடா..!!”

“என்ன..??” அதற்குள்ளாகவே வாசலை அடைந்திருந்த அசோக், திரும்பிப்பார்த்து கேட்டான்.

“சப்பாத்தி சுட்டு முடிச்சுட்டேன்.. சாப்பிட்டு போ..!!”

“ப்ச்.. எனக்கு வேணாம் அண்ணி.. நான் ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!” அசோக் ஒருமாதிரி சலிப்பாக சொல்ல,

“ஏண்டா..??” செல்வி வியப்பாக கேட்டாள்.

“பின்ன என்ன..?? எப்பப்பாரு.. சும்மா சும்மா இட்லி, தோசை, சப்பாத்தின்னு.. சுட்டதையே திரும்ப திரும்ப சுட்டு இருக்கீங்க..!! பிஸ்ஸா, பர்கர், சான்ட்விச்னு புதுசா ஏதாவது சுடலாம்ல..??”

“ம்க்கும்.. பெரிய வெள்ளைக்கார தொரைன்னு நெனைப்பு.. பிஸ்ஸா, பர்கர் கேக்குறாரு..!!”

“வெள்ளைக்காரங்களோட பழகிப்பழகி.. அவங்க மாதிரிதான் இருக்க தோணுது அண்ணி.. என்ன பண்ண சொல்றீங்க..??”

“சரி.. நீயும் சாப்பிடுவேன்னு நெனச்சு இப்போ இத்தனை சப்பாத்தி சுட்டு வச்சுட்டனே.. என்ன பண்றது..??”

“அவன்ட்ட குடுங்க.. அவன்தான் என்னத்த குடுத்தாலும் தின்னுவான்.. எத்தனை குடுத்தாலும் தின்னுவான்..!!”

அண்ணனைப் பற்றி கேலியாக கூறிவிட்டு திரும்பிய அசோக், அண்ணனுடைய நெற்றியிலே முட்டிக்கொண்டான். ஸ்லோமோஷனில் நிமிர்ந்து பார்க்க ராஜேஷின் கடுப்பேறிய முகம் காணக்கிடைத்தது. கண்களை இடுக்கி இவனையே முறைத்தவாறு அவன் நின்றிருக்க, அவனுடைய காலை பிடித்தவாறு தம்பு நின்றுகொண்டிருந்தான். அசோக்கும், செல்வியும் கடைசியாக பேசிக்கொண்ட ஒன்றிரண்டு உரையாடல்களை, அசோக்குக்கு பின்னால் நின்றவாறு ராஜேஷ் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அசோக் கடைசியாக கொடுத்த கமென்ட்தான், அவனுடைய முகம் குரங்கு போல மாறிப்போக காரணம்.

அண்ணனை பார்த்ததும் அசோக் லேசாக அதிர்ந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான். அப்பாவியாய் முகத்தை மாற்றிக்கொண்டு, ‘என்ன..??’ என்பது போல தலையை மெலிதாக அசைத்து கேட்டான்.

“யாரைடா என்னத்த குடுத்தாலும் தின்னுவான்னு சொன்ன..??” ராஜேஷ் இறுக்கமான குரலில் கேட்க,

“அ..அது.. நா..நான்.. த..தம்புவை சொன்னேன்..!!” என்று சமாளித்த அசோக், உடனே

“தம்ப்பூ..!!!”

குழைந்தவாறு அழைத்துக்கொண்டே மண்டியிட்டான். நின்றிருந்த தம்புவை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான். அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டவன், பிறகு லேசாக முகத்தை சுளித்தவாறே கேட்டான்.

“என்னடா தம்பு.. இன்னும் குளிக்கலையா நீ..??”

“இல்ல சித்தப்பா..!!”

“ச்ச.. ஸ்மெல் பாய்.. காலைல எழுந்ததும் குளிக்கனும்னு தெரியாது..?? சித்தப்பாவை பாத்தியா.. அதுக்குள்ள குளிச்சுட்டு எப்படி ஃப்ரெஷா இருக்கேன் பாரு..!! இனிமே குளிக்காம வந்தேன்னா உனக்கு சாப்பாடு கெடயாது.. புரியுதா..??”

அசோக் தம்புவை சொல்வது மாதிரி சொன்னாலும், மறைமுகமாக தன் அண்ணனைத்தான் குறிப்பிட்டான். ராஜேஷுக்கும் அது புரியாமல் இல்லை. தலையை ஒருபக்கமாக சாய்த்து தம்பியையே ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பாவை கிண்டலடிக்க அசோக் தன்னை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்று புரியாமல்,

“ம்ம்.. சரி சித்தப்பா.. இனி டெயிலி மார்னிங் குளிச்சுர்றேன்.!!” என்றான் தம்பு அப்பாவியாக சொன்னான்.

“ம்ம்.. குட்..!! இன்னைக்கு உனக்கு லீவா..??”

“யெஸ் சித்தப்பா..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! நீ கிழிக்கிற கிழிக்கு உனக்கு சும்மா சும்மா லீவ் விட்ராணுகடா..!!” அசோக் சலிப்பாக சொல்ல, ராஜேஷால் அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“டேய்.. யாரைடா சொல்ற..??” என்று தம்பியை பார்த்து சீறினான்.

“ஏன்.. தம்புவைத்தான் சொன்னேன்..!!” அசோக் இன்னும் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டே சொன்னான்.

“இல்ல.. நீ என்னைத்தான் சொன்ன..!!”

“குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுன்னு சொன்னா.. அதுக்கு நான் என்ன பண்றது..??”

“ஏண்டா.. நீ கிழிக்கிற கிழிக்கே உனக்கு வாரத்துக்கு ரெண்டு நாளு லீவு விடுறானுக.. எனக்கு விட கூடாதா..??”

“ஹ்ஹ.. நான் என்ன கிழிக்கிறேன்னு உனக்கு தெரியுமாக்கும்..??”

“ஏன் தெரியாது..?? சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறவணுக எல்லாம் என்ன பண்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்டா..!!”

“ஓ.. எங்க கொஞ்சம் சொல்லு.. பார்ப்போம்..!!”

“சொல்றேன்..!! கிழிஞ்ச ஜீன்சும், சாயம்போன டி-ஷர்ட்டும் போட்டுக்கிட்டு.. காலேஜ் டூர் போறவனுகளாட்டம் கம்பெனிக்கு போக வேண்டியது..!! காலைல போனதுமே மொத வேலையா.. ஜிமெயில், யாஹூலாம் செக் பண்ண வேண்டியது.. ஃப்ரண்ட்சுக்கு மெயில் அனுப்புறது.. சேட் பண்ணுறது.. அப்புறம் ஃபேஸ்புக், ஆர்க்குட்னு எதையாவது தொறந்து வச்சுட்டு உக்காந்துக்க வேண்டியது.. ஹெட்ஃபோன் போட்டு பாட்டு கேட்டுக்கிட்டே, கிரிக்கெட் ஸ்கோர் ரெஃப்ரஷ் பண்ண வேண்டியது.. யூட்யூப் பாக்கவேண்டியது.. சாயந்திரம் ஆனதும் டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன்னு எதையாவது வெளையாட கெளம்பிட வேண்டியது..!! இதுக்கு நடுவுல ஒரு மணிநேரத்துக்கு ஒருதடவை ப்ரேக் வேற.. அப்படியே வேலை செஞ்சு களைச்சு போயிட்டாங்களாமாம்.!! மதியம் லஞ்ச்சுக்கு.. கோக் இல்ல பெப்சியை சப்பிக்கிட்டே.. பிஸ்ஸா இல்ல பர்கரை கடிக்க வேண்டியது.. ‘ஹேய்.. ஐ ஹேட் ரைஸ்’யா..!!’ அப்டின்னு இங்க்லீஷ்ல ஒருமணி நேரம் வெட்டி அரட்டை அடிக்க வேண்டியது..!! எப்போவாவது ரொம்ப போரடிச்சா.. ஒரு சேஞ்சுக்கு வேலை செய்ய வேண்டியது.. அதுவும் சுயமா கோட் அடிக்கிறது இல்ல.. கூகுள் சர்ச் பண்ணி.. என்ன வருதோ அதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ண வேண்டியது..!! கூகுளும், காப்பி பேஸ்ட்டும் மட்டும் இல்லைன்னா.. உங்க நெலமைலாம் டப்பா டான்ஸாடும்டா..!! ஹ்ஹ.. எனக்கா தெரியாது.. நீங்க என்ன கிழிக்கிறீங்கன்னு..??”

ராஜேஷ் எகத்தாளமாக சொன்னது அசோக்கிற்கு கொஞ்சம் எரிச்சலை மூட்டி விட்டது. ஆனால் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், கூலான குரலிலேயே அண்ணனிடம் கேட்டான்.

“எங்களை இவ்வளவு கொறை சொல்றியே.. நீ மட்டும் என்ன கிழிக்கிறியாம்..??”

“ஹ்ஹ.. உங்களை மாதிரி அமெரிக்காகாரனுகளுக்கு நாங்க அடிமையா கெடக்கலடா.. ஐம் வொர்கிங் ஃபார் இன்டியன் கவர்ன்மன்ட்.. ஐம் வொர்கிங் ஃபார் ISRO ..!!” ராஜேஷ் பெருமையாக சொல்ல, அசோக் கேலியாக ஆரம்பித்தான்.

“ம்க்கும்.. எதுக்கெடுத்தாலும் இது ஒன்னை சொல்லிடு.. ‘நான் ISROல வொர்க் பண்றேன்.. நான் ISROல வொர்க் பண்றேன்..’ன்னு.. என்னவோ டெயிலி ரெண்டு ராக்கெட்டும், நாலு சேட்டலைட்டும் செஞ்சு வானத்துல ஏவுறவன் மாதிரித்தான்..!! அங்க போய் ரெண்டும், நாலும் ஏழுன்னு தப்பு தப்பா அக்கவுண்ட்ஸ் எழுதப்போற.. அதுக்கு இப்படி ஒரு பில்டப்பு வேற..!! கணக்குப்புள்ளையா வேலை பாக்குறேன்னு டீசண்டா உண்மையை சொல்லி பழகு..!!”

“என்னது..?? கணக்குப்புள்ளையா..??” ராஜேஷின் முகம் அஷ்ட கோணலானது.

“ஆமாம்.. கணக்கு எழுதுறவன் பேரு கணக்குப்புள்ளை இல்லாம.. கீரிப்புள்ளையா..??” என்று சீரியசான குரலில் சொன்ன அசோக் தம்புவிடம் குனிந்து,

“தம்பு.. இனி உங்க மிஸ் ‘வாட்ஸ் யுவர் ஃபாதர்..’னு கேட்டா.. ‘மை பாதர் இஸ் எ கணக்குப்புள்ளை’ன்னு சொல்லணும்.. சரியா..??” என்றான்.

“ம்ம்.. சரி சித்தப்பா..!!” என்று தம்புவும் அப்பாவியாக தலையாட்டினான்.

“ஏய்.. உங்க சண்டைல ஏண்டா சின்னப்பையனை போட்டு இழுக்குற..??” அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த செல்வி இப்போது வாயை திறந்தாள்.

“ஏன்.. அப்பா என்ன பண்றார்னு அவனும் தெரிஞ்சுக்கட்டும்..!!” அசோக்கின் பதிலில் களைத்துப்போன செல்வி இப்போது கணவனிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள்.

“ஏங்க காலங்காத்தால இவன்கிட்ட போய் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கிறீங்க..??”

“நான் என்ன வாயை கொடுத்தேன்.. அவன்தான் தேவையில்லாம வந்து வம்பு இழுக்குறான்..!!” ராஜேஷ் சின்னப்பிள்ளை மாதிரி சொன்னான்.

“நான் என்ன வம்பு இழுத்தேன்..??” அசோக் சீற்றமாக கேட்க, செல்வி இடையில் புகுந்து தடுத்தாள்.

“ஐயா.. சாமீ.. உங்களை யாரும் ஒன்னும் கொறை சொல்லல..!! ஆபீசுக்கு நேரம் ஆச்சுன்னு சொன்னீங்கள்ல.. கெளம்புங்க மொதல்ல..!!”

என்று அசோக்கை கையெடுத்து கும்பிட்டாள். அசோக் இப்போது நிதானித்தான். அண்ணனையும் அண்ணியும் ஒருமுறை மாறி மாறிப் பார்த்தான். இருவருமே நொந்து போனவர்கள் மாதிரி நின்று கொண்டிருந்தார்கள். அதைப்பார்க்க அவன் மனதுக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது.

“ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!” என்று கெத்தாக சொன்னவன், தம்புவின் கன்னத்தை பிடித்து கிள்ளியவாறே,

“ஸீ யு டா தம்பு.. சித்தப்பா ஆபீஸ் கெளம்புறேன்..!!” என்றுவிட்டு, உதடு குவித்து விசிலடித்தவாறே வீட்டை விட்டு வெளியேறினான். Pundai Tamil Hot Stories

– தொடரும்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.