வலிகள் சுகமான கதை பகுதி – 2

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.

பைரவி தான் புது CEO என் தெரிந்ததும். ஆஃபீஸே ஆடிப்போய் இருந்தது. குறிப்பாக நான். சுவாதி மும். இளங்கோவும் என்னை பார்த்தார்கள். நான் அவர்களை பார்த்தேன்.

சுவாதி: மச்சா. உன் டவுசர் இன்னைக்கி கிழியபோது டா!

நான்: ஏன் பக்கி. நீ வேற ஏற்கனவே வயித்த கலக்குது.

இளங்கோ: ஆனாலும். உனக்கு தில்லு அதிகம் தான் இராவணா. CEO கூடவே ரொமேன்ஸ். வேற லெவல் நீ.

நான்: நீங்க வேற சும்மா இருங்க. இன்னைக்கு என் வேலை காலியாக போகுது. பாய் பாய் போல்க்ஸ்.

சுவாதி: மச்சி. அப்படி-ல நடக்காது. அங்க பாரு பைரவிக்கு உன்ன பிடுச்சுருக்கு. அங்க இருந்தும் உன்ன தான் பார்த்துக்கிட்டு இருக்கா.

நான்: என்ன எப்படி கேவலப்படுத்தி. வேலைய விட்டு தூக்குறதுனு யோசிக்கிறா போல?

சுவாதி: நீ கிறுக்கு. ஒரு பொண்ணு மனசு பொண்ணுக்கு தெரியாதா. அவள் கண் உன்கிட்ட பேசும் போதெல்லாம் அவளோட கருவிழி நல்லா விரியுது பார்த்தியா?

நான்: அதுல என்ன இருக்கு?

சுவாதி: டேய் நம்ம மனசுக்கு பிடிச்சு வங்க கிட்ட பேசும் போது கருவிழி நல்லா விரியும். வழக்கத்த விட 45%.

நான்: சுவாதி பேபி. உனக்கு இவ்வளவு அறிவா??

பைரவி பேசத் தொடங்கினாள். எனது தந்தை ஒன்றும் Founder அல்ல. இவர் ஒரு Co-founder. நாளைக்கு இருந்து நான் தான் உங்க எல்லாருக்கும் இன்சார்ச் என்றாள். அப்பாடா! நம்மை ஏதும் செய்யவில்லை என்று எண்ணினேன்.

மைக்கில். இராவணா நீங்க என் ஆஃபீஸ் ரூமுக்கு வாங்க என்று சொல்லி தன் உரையை முடித்தாள். நான் பயந்துகொண்டே உள்ளே சென்றேன். பிரகாஷ் அவளிடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு சென்றார். எங்களிடம் இருந்து பிரியா விடை பெற்று சென்றார். நானும். பைரவியும் மட்டும் ரூமிற்குள் இருந்தோம். நான் என்னை நினைத்து வெட்கி தலை குனிந்து நின்றேன்.

பைரவி: இங்க வாங்க சும்மா உட்காருங்க.

நான்: இல்ல மேம். இருக்கட்டும்.

பைரவி: காலைல பைரவி. பைரவி-னு கூப்பிட்டங்க. இது போக கவிதை-லா தூள் பறந்துச்சு. இப்ப என்ன தீடீர் மரியாதை.

நான்: இல்ல மேம். நீங்க CEO-னு தெரியாது அதா?. சாரி மேம். தப்பா நடந்துகிட்டதுக்கு.

பைரவி: ஆனால் நீங்க. எனக்கு ரொம்ப தெளிவா எல்லாத்தையும் எடுத்துச்சொன்னிங்க அது எனக்கு ரொம்ப பிடுச்சுருக்கு. எனக்கு இந்த ஆஃபீஸ் பத்தி ஒரே நாளு-ல தெரிஞ்சுருச்சு. ஆமா. இப்படித்தான் பாக்குற எல்லா பொண்ணுங்க கிட்டயும் flirt பண்ணுவிங்களா?

நான்: இல்ல மேம். உங்க கிட்ட மட்டும் தான்.

பைரவி: சும்மா பைரவினே கூப்பிடுங்க. ஏன்? என்கிட்ட மட்டும்.

நான்: உங்க கண்கள் என் கனவில் அடிக்கடி தோன்றும். அதற்கு நான் அடிமையாகிட்டேன்.

பைரவி: அதெப்படி. இன்னைக்கு தானா என்ன பாக்குறிங்க?

நான்: தெரியல போன ஜென்ம நினைவோ. என்னவோ?.

பைரவி: நல்லா பேசுறிங்க. இனிமேல் நீங்க தான் என் அசிஸ்டன்ட் நாளைக்கு இருந்து. நீங்க கவிதை சொன்னதுக்காக இல்ல. உங்க Sincerity and enthusiasm பார்த்துத் தான் தரேன்.

நான்: தங்கயூ மேம்.

பைரவி: பைரவினே கூப்பிடுங்க.

நான்: சரிங்க பைரவி. அப்புறம் ஒன்னு.

பைரவி: என்ன?

நான்: உங்கள மொத பாத்த அப்போ உங்க அப்பா சிலை செதுக்குறவர்-னு நெனைச்சேன்.

பைரவி: நீங்க நினைப்பீங்க இராவணன். ஏன் அப்படியாம்?

நான்: உங்கள இப்படி செதுக்கிருக்காறே அதான்.

பைரவி: ( சிறிது புன்னகையுடன்) இப்படியே பேசிட்டு இருங்க ஒரு நாள் உங்கள வேலையில் இருந்து தூக்கிருவேன்.

நான்: உங்களுக்காக. வேலை என்ன உயிரே போனாலும் பெருமை தான்.

பைரவி: ஐய்யா சாமி. போங்க எனக்கு வேலை இருக்கு. நாளைல இருந்து என் கேபின் -ல் தான் உங்களுக்கு வேலை.

நான்: ஓகே பைரவி.

சுவாதியையும். இளங்கோவையும் ஏமாற்ற முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு வந்தேன்.

சுவாதி: என்ன மச்சி என்ன ஆச்சு வேலை காலியா?

இளங்கோ: அப்படியெல்லாம் இல்ல என்ன இராவணா?

நான்: சோகமாக நாளைக்கு இருந்து நான் தான் பைரவி அசிஸ்டன்ட் ஆம் அதுவும் அவ கூடவே இருக்கனுமா.

சுவாதி: டேய் பிராடு பக்கி. இது சந்தோசமான விசயம் நான் தான் சொன்னேன்-ல அங்க பாரு அவ ரூம்ல இருந்து உன்ன பாக்குறா பாரு. ஒரு பொண்ணு மனசு பொண்ணுக்கு தெரியாதா?

இளங்கோ: அப்புறம் என்ன இராவணா எப்போ கல்யாணம்?

நான்: என் மாமனார் கிட்ட தான் கேக்கனும். என்ன விட்டா இப்பவே கல்யாணம் பண்ணிறுவேன்.

சுவாதி: அப்புறம் கம்பெனி ஓட CEO தான். எங்கள கொஞ்சம் பாத்துக்கோ பா

நான்: ஏன் நீங்க வேற கனவு கோட்டை கட்டுறிங்க. கொஞ்ச நாள் போகட்டும்.

1 மாதம் கடந்தது. நானும் பைரவியும் நன்றாக பழகி விட்டோம். எனக்கு தெரிந்து அவளுக்கும் என் மீது காதல் வந்து விட்டது என்று உணருகிறேன். அடிக்கடி என் கனவில் டாக்டராக வருகிறாள். என்னை எழுப்ப முயற்ச்சிக்காறாள் என்னால் முடியவில்லை.

நாங்கள் மிகவும் நெருக்கமாக பழகி விட்டோம். வெட்டியாக இருக்கும் போதெல்லாம் என்னிடம் போன் செய்து பேசுவாள். உள்ளக்காதலினால் அகப்பட்டு விட்டேன். எப்போதும் அவள் நினைவுகள். கண்களை மூடினாலும் கனவில் டாக்டராக வருகிறாள். கண்களை திறந்தால் நேரிலும் வருகிறாள்.

பைரவியின் மேல் எனக்கு பித்து பிடித்து விட்டது. என் காதலை எப்படியாவது அவளிடம் கூற வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது ஓவியம் வரைவது பொழுது போக்கு. அவள் முகத்தை வரைந்து அவளிடம் கொடுத்து என் காதலை தெரிவிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

மறுநாள் அவளை பீச் ஓரமாக உள்ள திறந்த வெளி ரெஸ்டாரண்ட் க்கு அழைத்து சென்றேன். அவளின் தெய்வீகமான முகத்தை வரைந்து வைத்திருந்த பரிசை கொடுத்தேன். அவள் என்ன இது என்றாள். பிரித்துப்பார் என்றேன்.

பைரவி: ஹே இராவணா! தேங்ஸ் டா சூப்பரா இருக்கு இந்த Portrait. ஆனா ஏன் சிவப்பு கலர் மட்டும் யூஸ் பண்ணிருக்க. கைல வேற கட்டு போட்டு இருக்க?.

நான்: இதான் நான் வரைந்த போது எடுத்த வீடியோ என்று என் செல்போனை அவளிடம் காண்பித்தேன்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வந்தது. நான் எனது கையை கிழித்து என் இரத்ததாலே அவளின் உருவ படத்தை வரைந்தேன். அவள் கண்களில் நீர் வழிந்தது. கண்ணீரை துடைத்து விட்டு தலையை மேலே பார்த்தாள்.

நான்: பைரவி. நீ இல்லமா என்னலா இனிமேல் மூச்சு கூட விட முடியாது. என் இதயத்தை கூட என் நெஞ்ச கிழிச்சு தருவேன் நீ கேட்டா. என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்ல. என்னால வார்த்தகளாலோ அல்லது எண்களாலோ உன் மேல இருக்க லவ் ஆ என்னால அளக்க முடிய்து.

கனவிலும் நீதான் வர. உன் மேல நான் பைத்தியமா இருக்கேன் பைரவி. இதோ இந்த கத்தி ய பிடி. ஒன்னு என் லவ் அ அக்சப்ட் பண்ணு இல்ல இந்த கத்தியால என்ன கொண்ணுரு. நா ப்ளாக் மெயில் பண்ணல. நீ இல்லனா நா கண்டிப்பா செத்துருவேன் பைரவி.

உன் கையாலையே என்ன கொல்லு அதுவே எனக்கு போதும். ஒன்னு ஒன்னா சேர்ந்து வாழனும் இல்ல உன் கையால சாவணும். எனக்கு அப்பா. அம்மா யாரும்‌ இல்லை. ஏன் அவங்க யாருனு கூட எனக்கு தெரியாது. உன்ன பாக்குறப்பவும். பேசுறப்பவும் என் அம்மா கூட இருக்க மாதிரி இருக்கு. ஐ லவ் யூ பைரவி.

தன் கண்களில் உள்ள கண்ணீரை துடைத்தாள். எழுந்து நின்று என்னை பளார் என்று அறைந்தாள். என்னை கட்டிப்பிடித்தாள்.

பைரவி: டேய். நீ சும்மா ப்ரப்போஸ் பண்ணிருந்தாலே நான் சரி சொல்லயிருப்பேன் டா. ஏன்டா. இப்படி லூசு மாதிரி பண்ணுற. உன்ன நீயே ஹர்ட் பண்ணிக்குற.

நான்: உன்ன நினைக்கும் போது வலிகள் கூட சுகமா இருக்கு பைரவி.

எனது இரண்டு சட்டை பட்டனை கழட்டி என் நெஞ்சில் பைரவி என்ற பெயரால் பச்சை குத்தியதை காண்பித்தேன்.

நான்: உன்ன பாத்த முதல் நாளே இத குத்திட்டேன். நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.

பைரவி: நீ என் மேல் இவ்வளவு பைத்தியமா இருக்கும் போது நான் உன்ன விட்டு எங்கடா போக போறேன். ஐ லவ் யூ டா லூசு. எனக்கும் உன்ன பார்த்த முதல் நாளே காதல் வந்துருச்சு டா. பார்த்தவுடன் காதல் லா சும்மா பொய்-னு நினைச்சேன். எனக்கே அது நடந்துருச்சு பார்த்தியா.

என கண்களில் நீர் வர‌ வர என்னை கட்டிப்பிடித்தாள். ஒரு வழியாக என் காதல் ஆசை நிறைவேறிவிட்டது. இரு உயிர்கள் ஒன்றான தருணம். சிவனும். பார்வதியும் ஓர் உடலான தருணம். ஈருடல் ஓருயிரானோம். உள்ளக்காதலை கடந்து உடல் காதலை அனுபவித்தோம்.

இப்போது காதலின்‌ மூன்றாம் படிநிலை. உடல்காதல். அவளின் நெற்றியில் முத்தம் வைத்து அதை தொடங்கி வைத்தேன். காற்று இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் காதல் இல்லாமல் யாராலும் வாழ முடியாது. வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் இருந்தாலும் நம் மனதை ஆட்கொண்டவர்களின் ஒரு முத்தமும்.

அந்த மெல்லிய புன்னகையும். நான் இருக்கேன் என்ற அந்த வார்த்தையும் இதற்காக எவ்வளவு துன்பத்தையும் தாங்கலாம் என்ற பலத்தை தரும். மனிதன் நாகரீகம் அடைய முதல் காரணம் காதல் தான். காதல் தான் நாகரீகத்தின் தொட்டில் என்றே அழைக்கலாம்.

இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் காதல் செய்ய பிறந்தவையே. இறைவனை அடைய ஒரே நிலை காதல் செய்வது மட்டுமே. நான் அவளின் கைகளை பிடித்துக்கொண்டு கடலை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்த தருணம். அவள் என் தோளின் மீது சாய்ந்து இருந்தாள்.

நான்: கடவுள் உன்கிட்ட வரம் கொடுக்க வந்தா என்ன வரம் கேப்ப?

பைரவி: எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் ஹஸ்பண்ட் ஆ வரனும்-னு கேட்பேன். நீ என்ன கேப்ப.

நான்: உனக்கு எனக்கும் சகா வரம் கேட்பேன். இப்படியே உன் கைய பிடுச்சுக்கிட்டு சாவே இல்லாம வாழனும்.

பைரவி: நான் எப்படி உன் கனவுல வரேன். அதுவும் என்ன பாக்குறதுக்கு முன்னாடி இருந்து.

நான்: எனக்கு இதோ போன ஜென்ம ஞாபகம் மாதிரி இருக்கு.

பைரவி: அப்படியா? மறுஜென்மம் இதெல்லாம் உண்மையா?

நான்: ஆமாம். நாம செத்ததுக்கு அப்புறம் நம்ம உடல விட்டு நம்ம ஆத்மா வெளியே வரும். அது மறுபடியும் மனுசனா பிறக்கும். நம்ம தமிழ் சித்தர்கள் குண்டலினி தியானத்த பயன்படுத்தி இந்த சுழற்ச்சி ய தடுத்து நிறுத்துவாங்க.

குண்டலினி பண்ணி உயிரோட இருக்கும் போதே நம்ம ஆத்மா வ வெளிய கொண்டு வந்துடுவாங்க. இப்படி பண்ணுறதாள மறுஜென்மம் அவங்களுக்கு நடக்காது. நீயும் நானும் பல ஜென்மங்களா ஒன்னு சேர முடியாத காதலர்களாக இருப்போம் போல.

பைரவி: எப்படி பேபி. உனக்கு மட்டும் இவ்வளவு விசயம் தெரியுது.

நான்: எனக்கு ஒரு பழக்கம் இருக்கு தினமும் புதுசா ஒரு விசயம் கத்துக்கணும் இல்லைனா எனக்கு தூக்கம் வராது.

பைரவி: அதனால் தான் உன்ன எனக்கு அசிஸ்டன்ட் ஆ வச்சுருக்கேன்.

நான்: உனக்கு நான் வாழ்க்கை முழுக்க அசிட்டெண்ட் ஆ இருப்பேன் செல்லம். இதோ இந்த பரந்து விரிந்து கடலில் நமது காதல் என்ற கப்பலை விடுவோம். இந்த கரையில் நமது காதல் கோட்டையை கட்டுவோம்.

இரவு நேரமாகி விட்டது.

நான்: இன்று நிலவு கூட வரவில்லை. உன்னை போன்ற அழகியை கண்ட நிலவு பொறாமை கொண்ட இன்று வரக்கூட இல்லை. இதோ மேலே பார் உன்னை பார்த்து நட்சத்திரங்கள் கண் அடிக்கின்றன. இந்த மொத்த பிரபஞ்சத்திற்கும் உன்னை மிகவும் பிடித்து உள்ளது போல. சூரியனை சுற்றும் 8 கோள்களை போல் எனது மனம். உடல். ஆன்மா என அனைத்தும் உன்னை சுற்றிவட்டமிடும்.

(அவள் தனது வைரப்பற்களால் சிறிது புன்னகை புரிந்தாள். )

பைரவி: என்னை இதுவரைக்கும் யாரும் இவ்வளவு ஃபீல் பண்ண வச்சது இல்ல. சின்னவயசுல இருந்தே AIM-னு சொல்லிட்டு யாரையும் லவ் பண்ணல. என் ஃப்ரெண்ட்ஸ் கூட சொல்லுவாங்க.

நீ லைஃப் அ வேஸ்ட் பண்ணுற-னு. ஆனா! உன்ன மாதிரி ஒருத்தன் கிடைப்பான்-னு நான் நினைச்சு பாத்ததே இல்லை. உனக்காக தான் நான் இவ்வளவு வருடம் நான் யாரையும் லவ் பண்ணல போல. கடவுள் என்ன கைவிட மாட்டாரு-னு தெரியும். “GOD’S PLAN IS ALWAYS BIGGER THAN OUR DESIRE”.

நான்: எனக்கு என்‌ அம்மா. அப்பா எப்படி இருப்பாங்க-னு தெரியாது. உன்ன பார்க்கும்போதெல்லாம் என் அம்மா-வ பாக்குற மாதிரி இருக்கு. எனக்கு அம்மா-வ இருப்பியா செல்லம். ?

என்னை கண்ணில் கண்ணீர் வர கட்டியனைத்தாள். என் கண்களிலும் கண்ணீர் வந்தது. ஆனந்த கண்ணீர்.

தொடரும்.

தொடர்புக்கு: [email protected] com

இப்படிக்கு. தங்கள் அன்புள்ள. இராவணன் ❤️

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும்.